18 Nov 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
கர்ப்பிணிகள் பணி புரியும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
இந்த பதிவில், ‘பணி புரியும் கர்ப்பிணி பெண்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் இப்போது இருக்கலாம்? வேலை செய்யும்போது தவிர்க்க வேண்டியவை எவை?’ போன்றவற்றை காணவிருக்கிறோம்.
கர்ப்பமாக இருக்கும்போது பணி புரிவதென்பது சற்று கடினமான காரியமே. இப்போது நாம் உடலளவிலும், மனதளவிலும் தயார்நிலையில் இருக்க வேண்டும். அதற்காக எந்த வேலையும் செய்யாமல் இருக்க வேண்டுமென்றும் அவசியம் கிடையாது என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி இருந்தாலும், ஆரோக்கியமற்று நம்முடைய உடலானது சோர்ந்து விடவும் வாய்ப்புள்ளது. இன்றைய ஐடி துறையில் இருக்கும் பல பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போதும் பணி புரிந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற வண்ணமும் இருப்பார்கள். இப்போது பணி புரியும் கர்ப்பிணிகள் எவற்றை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டுமென்பதை நாம் பார்ப்போம் வாருங்கள்.
எந்த மாதிரியான பிரச்சனைகள் இப்போது நமக்கு இருக்கலாம்?
கர்ப்பமாக இருக்கும்போது வரக்கூடிய காலை சுகவீனமான வாந்தி, குமட்டல், மயக்கம் போன்றவை பொதுவான பிரச்சனை தான். ஆனாலும், பணிபுரியும் பெண்கள் இது குறித்து கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.
குமட்டல் குறித்த கவனம்:
பணிபுரியும் பெண்களுக்கு எடுக்கும் பசி பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அவர்கள் கூடுதல் வேலைப்பளுவுடன் இருந்து வந்துள்ளதால் இப்போதும் பசி எடுக்கும். அதனால் அவசர அவசரமாக அவனில் வைத்து சூடு செய்து சாப்பிடக்கூடாது. இது நிச்சயம் கூடுதல் குமட்டலை வரவைக்கும்.
அடிக்கடி ஸ்நாக்ஸ்:
குமட்டல் இருக்கும்போது ஆரோக்கியமான தானிய பிஸ்கட் போன்றவற்றை நாம் இப்போது எடுத்துக்கொள்ளலாம். இஞ்சி டீ நாம் குடிக்கலாம். அதற்காக அளவுக்கதிகமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
உடல் சோர்வை கையாளுதல்:
கர்ப்பமாக இருக்கும்போது கருவில் பிள்ளைகள் வளர்வதாலும், ஹார்மோன் மாற்றங்களினாலும் பலவித மாறுதல்கள் காணப்படும். அவற்றில் ஒன்று தான் உடல் சோர்வு. இதன் காரணமாக காலை வேளையில் கூட பணி புரிவது நமக்கு கடினமாக இருக்கும்.
வேலை செய்யும்போது தவிர்க்க வேண்டியவை எவை?
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.
மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.
#tamilbabychakra #bbctamil #3rdtrimesterofpregnancy #1sttrimester #2ndtrimester #backtowork
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.