செல்ல பிராணிகள் உள்ள வீட்டில், செல்ல பிள்ளைகளை பார்த்துக்கொள்வது எப்படி?

cover-image
செல்ல பிராணிகள் உள்ள வீட்டில், செல்ல பிள்ளைகளை பார்த்துக்கொள்வது எப்படி?

செல்ல பிராணி வைத்திருக்கும் பெற்றோர்களுக்கான சூப்பர் டிப்ஸ்

இந்த பதிவில், ‘நாய், பூனை இருக்கும் வீட்டில் நாம் கவனிக்க வேண்டியது என்ன? செல்லப்பிராணிகளை வளர்க்கும்போது நாம் எதை எல்லாம் தவிர்ப்பது’, போன்றவற்றை பார்க்கவிருக்கிறோம்.

பிள்ளைகள் இருக்கும் வீடு எப்போதுமே ஸ்பெஷலான ஒன்று தான். அதனிலும் நம்முடைய வீட்டில் செல்லப்பிராணிகளும் இருக்குமெனில் பிள்ளைகளுக்கு படு குஷி தான். அவர்களுக்கு அவற்றை கொஞ்ச வேண்டும், அதனுடன் நேரத்தை செலவிட வேண்டுமென பல ஆசைகள் இருக்கும். ஆனால், பிள்ளைகளை முடிந்தவரை செல்லப்பிராணிகள் அருகில் விடாமல், ரசிக்க மட்டுமே செய்வது நல்லது. இது குறித்த ஒரு சிறப்பு பதிவை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

நாய் இருக்கும் வீட்டில் நாம் கவனிக்க வேண்டியது என்ன?

  • நாய்கள் கடிக்கும் தன்மை கொண்டவை மட்டுமல்ல. அவை நம்முடைய பிள்ளைகளை நக்கவும் வாய்ப்புள்ளது என்பதால் கவனம் வேண்டும்.
  • நாய் முடிகள், எச்சில் போன்றவை வீட்டினுள்ளே வராமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • நாய்களை பராமரிப்பது சற்று கடினம் தான். அவற்றின் மீது நாவி, உன்னி எனப்படும் ஒரு தொற்று பூச்சி இருக்கும். அதனால், நாய்களை அவ்வப்போது முறையாக குளிப்பாட்ட வேண்டும்.
  • நாய்கள் நம் தோள்பட்டை உயரத்துக்கு ஏறும் என்பதால், எந்த காரணத்துக்காகவும் பிள்ளைகளின் அருகில் நாய்களை விடாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

பூனை இருக்கும் வீட்டில் நாம் கவனிக்க வேண்டியது என்ன?

  • பூனைகளை பிள்ளைகள் இருக்கும் வீட்டில் வர விடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. காரணம், பூனையின் முடி பிள்ளைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.
  • பூனைகள் உணவில் வாய் வைக்கும் பழக்கமுடையவை என்பதால், உணவை எப்போதும் பூனைக்கு எட்டுமாறு வைப்பதோ அல்லது திறந்து போடுவதோ கூடாது.
  • பூனைகளை வளர்ப்பவர்கள், அவற்றை முறையாக சுத்தம் செய்து வைத்திருக்கவும். உங்களின் கால்நடை மருத்துவர்களிடம் உதவி கேட்டு அவற்றிற்கு நோய் எதுவும் வராமல் பார்த்துக்கொள்ளவும்.
  • பிள்ளைகளை எப்போதும் பூனைகளின் அருகில் விட்டு தனியாக எங்கும் செல்லாதீர்கள்.

வேறு என்னவெல்லாம் நாம் செய்வது?

1. ஐந்தறிவு ஜீவன்களை நம்மால் ஊகிக்க முடியாது. அவை எப்போது எப்படி நடந்துக்கொள்ளுமென்பதை நம்மால் நிச்சயம் கூறிவிட முடியாது. அதனால், செல்லப்பிராணிகளிடம் நம்முடைய பிள்ளைகளை தனியாக விடவே கூடாது.

2. பிள்ளைகளை எப்போதும் செல்ல பிராணிகள் இருக்கும் அறைக்கு அருகில் விடாதீர்கள். முடிந்தளவு வெளியில் நாய் போன்றவற்றை கட்டி வளர்ப்பதே நல்லது. இல்லையேல், கோபமாக இருந்தால் கடிக்கவும், நட்பாக பழக நினைத்தால் நம் பிள்ளைகளை நக்கவும் வாய்ப்புள்ளது.

3. செல்லப்பிராணிகளுக்காக வாங்கி வைத்திருக்கும் உணவு பொருட்களை நம்முடைய பிள்ளைகள் கைக்கு எட்டும் வண்ணம் வைக்க கூடாது.

4. பிள்ளைகள் முன்பாக செல்லப்பிராணிகளிடம் பாசாங்கு செய்ய வேண்டாம். அவர்களும் அதேபோல செய்ய ஆசைப்பட்டுக்கொண்டு நாம் இல்லாத நேரங்களில் தொடவும் செய்வர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#babycare #babycareandhygiene #tamilbabychakra #tamil #bbctamil #buildingimmunityinchildren
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!