• Home  /  
  • Learn  /  
  • கர்ப்பிணிகள் அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவதால் என்ன ஆகும்?
கர்ப்பிணிகள் அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவதால் என்ன ஆகும்?

கர்ப்பிணிகள் அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவதால் என்ன ஆகும்?

16 Nov 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

இந்த பதிவில், ‘மேக்கப் பற்றி ஆய்வுகள் சொல்வது என்ன? மேக்கப் பொருட்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன? கர்ப்பமாக இருக்கும்போது தவிர்க்க வேண்டிய மேக்கப் பொருட்கள் எவை? நாம் கவனிக்க வேண்டியவை எவை?’ என்பதனை பார்க்கவிருக்கிறோம்.

மேக்கப் போடுவது உங்களுக்கு பிடிக்குமா? மேக்கப் போடுவதால் பாதிப்பு இப்போது ஏற்படும் என்ற பயமா? அப்படி என்றால், இந்த பதிவு உங்களுக்காக தான், கட்டாயம் படித்து பயன் பெறுங்கள்.

கர்ப்பமாக இருக்கும்போது நாம் பயன்படுத்தும் மேக்கப் பொருட்களில் உள்ள கெமிக்கல்களால் நமக்கோ அல்லது கருவில் உள்ள பிள்ளைக்கோ பாதிப்பு ஏற்படுமா என்ற குழப்பம் கூட நமக்கு இருக்கும்? இவை அனைத்தையும் தெளிவாக விளக்குகிறது இந்த பதிவு.

கர்ப்பமாக இருக்கும்போது நாம் பயன்படுத்தும் மேக்கப் பொருட்களில் கெமிக்கல் உள்ளதா?

கர்ப்பமாக இருக்கும்போது நாம் மேக்கப் பயன்படுத்துவது குறித்து பலவித கருத்துக்கள் சமூகத்தில் நிலவி வருகிறது. அவை என்னவென்பதை பார்ப்போம்.

கருத்து 1:

ஹைட்ரோகுயினின் என்பது சருமத்தில் பயன்படுத்தும் ஒரு கெமிக்கலாகும். இதனால் கருவில் உள்ள பிள்ளைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றாலும், நம்முடைய உடலில் உள்ள இரத்தத்தில் விளைவை ஏற்படுத்தக்கூடியது என்பதால், கர்ப்பமாக இருக்கும்போது இதன் பயன்பாட்டை நாம் கட்டாயம் குறைக்க வேண்டும்.

கருத்து 2:

மேக்கப் பொருட்களில் உள்ள டிரெட்டினோயின், பிள்ளைகளின் பிறப்பில் குறைப்பாட்டை ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. லிப்ஸ்டிக், ஹேர் ஸ்பிரே, நெயில் பாலிஷ், போன்றவற்றில் உள்ள ப்தாலேட்ஸ் எனப்படும் கெமிக்கல் கர்ப்ப கால ஹார்மோன்களில் குறுக்கிட கூடியதாகும். ஆய்வுகள் மூலம் தெரிய வருவது என்னவென்றால், கர்ப்பமாக இருக்கும்போது வெளிப்படும் கெமிக்கல் காரணமாக பிள்ளைகளின் IQ அளவு ஆறு புள்ளிகளுக்கு மேல் குறைவதாக சொல்கிறது.

மேக்கப் பொருட்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன?

கர்ப்பமாக இருக்கும்போது மேக்கப் பயன்படுத்த ஆசையா? அப்படி என்றால், இது குறித்து நாம் மருத்துவர் ஆலோசனையை முதலில் பெற வேண்டும். இல்லையேல் தேவையற்ற பின்விளைவுகள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

கர்ப்பமாக இருக்கும்போது தவிர்க்க வேண்டிய மேக்கப் பொருட்கள் எவை?

கீழ்காணும் மூலப்பொருட்களை கொண்ட மேக்கப்பை நாம் கட்டாயம் தவிர்ப்பது நல்லது. அவை,

வைட்டமின் A:

வைட்டமின் A என்பது எண்ணற்ற பலன்களை கொண்டது என்றாலும், இதனில் ரெட்டினாய்டு உள்ளது. இந்த கெமிக்கல் முகப்பரு, சொறி சிரங்கு பிரச்சனை, சரும பிரச்சனை போன்றவற்றிற்கு பலன் அளித்தாலும், கர்ப்பமாக இருக்கும்போது எடுத்துக்கொள்வதனால், கருவில் வளரும் பிள்ளையை பாதிக்க வாய்ப்புள்ளது.

வைட்டமின் K:

சருமத்துக்காக போடப்படும் எந்தவொரு கிரீமிலும் இதனை நம்மால் காண முடியும். அதோடு இரத்த உறைவுக்கும் நல்லது. ஆனால், கர்ப்பமாக இருக்கும்போது இதனை பயன்படுத்துதல் கூடாது. இரத்த உறைவு ஏற்படும்போது, நம்முடைய கருவில் உள்ள பிள்ளைகளுக்கு கிடைக்கக்கூடிய இரத்த ஓட்டமும் தடைபட வாய்ப்புள்ளதால், இதனை நாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

செண்டெல்லா ஆசியாட்டிகா:

இவை வரித்தழும்புக்காக பயன்படுத்தும் ஒரு கெமிக்கல். ஆனால், இது சூரிய கதிர் படும்போது எரிச்சலை ஏற்படுத்தும். அதோடு, கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ராஷஷை ஏற்படுத்தவும் கூடும். சில சமயம், கருச்சிதைவுக்கு கூட வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதால் கவனம் வேண்டும்.

கர்ப்பமாக இருக்கும்போது நாம் கவனிக்க வேண்டியது எது?

கருவில் உள்ள பிள்ளையை பாதுகாக்க, லீட் மற்றும் மெர்குரி அளவு எடுத்துக்கொள்வதை முதல் மூன்று மாதம் குறைக்க வேண்டும்.

நெயில் பாலிஷ், ஹேர் டை, செயற்கை நகங்கள் போன்றவற்றில் ஆபத்து விளைவிக்கும் கெமிக்கல் உள்ளதால் தவிர்க்கவும்.

இந்த ஆர்டிக்கல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#tamilbabychakra #bbctamil #cosmetics #pregnancycare #pregnancycaretips

A

gallery
send-btn