புதிதாய் பிறந்த பிள்ளைகளிடம் இந்த 10 விஷயங்களை நீங்கள் கவனித்ததுண்டா?

cover-image
புதிதாய் பிறந்த பிள்ளைகளிடம் இந்த 10 விஷயங்களை நீங்கள் கவனித்ததுண்டா?

இந்த பதிவில், ‘பிறந்த பிள்ளைகளிடம் காணப்படும் பத்து அடையாளங்களை குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்களையும், பயனுள்ள விஷயங்களையும்’ காணவிருக்கிறோம்.

பிள்ளை பிறப்பு என்பது தாய்க்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசு. இதனில் நாம் இந்த 10 விஷயங்களை கண்டு பயப்படவும் வாய்ப்புள்ளது. காரணம், பிள்ளை பிறந்தவுடன் அவர்களை எப்படி பராமரிப்பது என்ற யோசனையில் நாம் இருக்கும்போது இந்த 10 விஷயங்களை கண்டு பயப்படுவோம். அந்த 10 விஷயங்கள் என்ன? உண்மையாகவே, இவை நம் பிள்ளைகளுக்கு ஆபத்தா? இல்லையா? என்பதை பார்ப்போம் வாருங்கள்.

1. கறை படியாது

பிறந்த பிள்ளைகள், முதன் முதல் தாய்ப்பால் குடிக்கும்போது சீம்பாலை பருகுவார்கள். இதனை ‘மெக்கோனியம்’ என்று அழைப்போம். இது சளி, கருப்பையில் இருந்த பனிக்குட நீர், அவர்கள் வயிற்றில் செரிமானமடைந்த கழிவு ஆகியவற்றால் ஆனது. இது அதிகம் வாடையும் வீசாது, ஏனென்றால், பாக்டீரியா இதனில் இருப்பதுமில்லை. நாட்கள் ஆக, அவர்கள் மலம் துர்நாற்றம் வீச தொடங்குகிறது. சில நாட்கள் கழித்து அவர்களின் மலம் பச்சை, மஞ்சள், பிரவுன் நிறங்களிலும் இருக்கும்.

2. மூச்சு விடுவதில் சிரமம்

அவர்கள் தூங்கும்போது திடீரென ஐந்து அல்லது பத்து நொடிகளுக்கு மூச்சு விடாமல் கூட இருப்பார்கள். உடனே நாம் பதட்டம் நிரம்ப காணப்படுவோம். ஆனால், இது முற்றிலும் இயல்பான ஒன்றே. ஒருவேளை அவர்கள் மூச்சு விடுவது வெகு நேரத்துக்கு குறைந்திருந்தாலோ அல்லது உடல் நீல நிறமாக இருந்தாலோ கட்டாயம் மருத்துவரை அணுகவும்.

3. தொண்டை சதை வளர்ச்சி

பிறந்த பிள்ளைகளால், வளர்ந்த பிள்ளைகள் அல்லது பெரியவர்களை போல சுவையை உணர முடியும். அவர்களின் தொண்டை சதை வளர்ச்சியும், தொண்டைக்கு பின்புறமும் இதற்காக உதவும். 5 மாதம் வரை பிள்ளைகள், இனிப்பு, கசப்பு, புளிப்பு போன்றவற்றை சுவைக்க தயாராகின்றனர். ஆனால், கரிக்கும் சுவை இவர்களுக்கு பிடிப்பதில்லை.

4. கண்ணீர் வராமல் அழுதல்

இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரைக்கும் அவர்கள் அழும்போது கண்ணீர் வருவதில்லை. பெரும்பாலும், மதியம் அல்லது மாலை வேளைக்கு முன்பாக அவர்கள் அதிகம் அழ வாய்ப்புள்ளது. காரணமில்லாமல் அழுவதை கோலிக் என்பார்கள். மூன்று மாதங்கள் கழித்து இந்த பிரச்சனை குறைந்தும் காணப்படும்.

5. பிறந்த பிள்ளைகளின் மார்பு

புதிதாய் பிறந்த பிள்ளைகளின் மார்பு பகுதி சிறியதாக இருக்கும். இதற்காக கவலைப்பட வேண்டாம். அம்மாக்களிடம் இருந்து ஈஸ்ட்ரோஜனை பிள்ளைகள் உறிஞ்சுகிறார்கள். அதனால் இது போன்று காணப்படும். சில வாரங்களில் அவர்களின் மார்பு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். பெண் பிள்ளைகளுக்கு லேசான யோனி போக்கும் சில நாட்களுக்கு இருக்கலாம்.

6. முகத்தை இடப்பக்கம் வைத்தல்

பிள்ளைகளில் 15% பேர் மட்டுமே இடப்பக்கமாக தலையை வைத்திருக்க செய்வார்கள். இவை அவர்களின் பழக்க வழக்கத்தை (வலதுக்கை அல்லது இடதுக்கை) குறிக்கவும் வாய்ப்புள்ளது.

7. மூளை செல்கள்

முதல் வருடம் நம் பிள்ளைகளின் மூளை வளர்ச்சி இரு மடங்காக காணப்படலாம். இதன் காரணமாக தளிர் நடை போடும் வயதில் ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் நம் பிள்ளைகள் இருக்கவும் செய்வார்கள்.

8. ஆண் பிள்ளைகளிடம் கவனிக்க வேண்டியவை

அவர்களின் அந்தரங்க உறுப்பு பிறக்கும்போது பெரிதாக இருக்கவும் கூடும். இது முற்றிலும் இயல்பான ஒன்று தான். இதற்கு காரணம் ஹார்மோன்கள் தான். அவர்கள் பிறக்கும் போது, பிரசவ முறையில் அந்தரங்க பகுதி வீங்கியும் காணப்படலாம்.

9. பயப்பட செய்தல்

இப்போது பிள்ளைகள் பயப்படுவது பொதுவான ஒன்றே. அவர்கள் ஏதாவது அதிக சத்தத்தை கேட்டாலும், பிடிக்காத வாசனையை நுகர்ந்தாலும், வெளிச்சத்தை அதிகமாக பார்த்தாலும், ஏதாவது அசைவது போல தெரிவதை உணர்ந்தாலும் உடனே அழ ஆரம்பிப்பார்கள். இது போன்ற சமயங்களில் அவர்கள் கைகளை திறந்து மூடவும் செய்வார்கள்.

10. பர்த் மார்க்

இது பற்றி பல விஷயங்கள் சுவாரஸ்யமாக நாம் விவாதிக்க இருந்தாலும், இப்போது சுருக்கமாக பார்க்கலாம். இது அவர்கள் பிறக்கும்போது சருமத்தில் காணப்படும் ஒரு மார்க் ஆகும். இது கொஞ்ச நாளில் நம் பிள்ளைகளுக்கு மறைந்துவிடவும் செய்யும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#tamilbabychakra #bbctamil #mommytakeovertamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!