16 Nov 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
இந்த பதிவில் நாம், ‘பிள்ளைகளின் எதிர்ப்பு சக்தி இப்போது எப்படி இருக்கும்? இப்போது எந்த மாதிரியான பிரச்சனைகள் நம்முடைய பிள்ளைகளுக்கு வரக்கூடும்?’ என்பதை பார்க்கவிருக்கிறோம்.
பிள்ளைகள் பிறந்த முதல் சில நாட்கள் நாமும் கொஞ்சம் பதட்டத்துடனே காணப்படுவோம். பிள்ளைகள் மிகவும் குட்டியாக இருப்பார்கள். அவர்களுக்கு என்னவெல்லாம் செய்யும் என்பது குறித்து நம்மால் முன்பே எதையும் ஊகிக்கவும் முடியாது. இப்போது நம்முடைய பிள்ளைகளுக்கு வரக்கூடிய பிரச்சனைகள் பொதுவான பிரச்சனைகள் என்றாலும், கூடுதல் கவனத்தோடு நாம் இப்போது இருக்க வேண்டும்.
பிள்ளைகளின் எதிர்ப்பு சக்தி இப்போது எப்படி இருக்கும்?
இப்போது நம்முடைய பிள்ளைகளின் எதிர்ப்பு சக்தியானது வளர்த்துக்கொண்டு தான் இருக்கும். அதனால், சிறிய கவனக்குறைவு கூட மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இப்போது எந்த மாதிரியான பிரச்சனைகள் நம்முடைய பிள்ளைகளுக்கு வரலாம்?
1. வயிற்று அசவுகரியம்
புதிதாய் பிறந்த பிள்ளைகளின் தொப்புள்கொடி இன்னும் இருக்கும். இதனை நாம் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். அதோடு, வாயுத்தொல்லை அல்லது மலச்சிக்கல் பிரச்சனையும் நம்முடைய பிள்ளைகளுக்கு இருக்கலாம். உங்களுடைய பிள்ளைகளின் வயிறு வீக்கத்துடன் இருப்பதாக தெரிந்தால், கட்டாயம் மருத்துவரை பார்க்கவும்.
2. பிறப்பு காயங்கள்
பிரசவம் கடினமாக முடிந்திருந்தால், நம் பிள்ளைகளின் உடலில் பிறக்கும்போது காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவை போக போக சரியாகிவிடும் என்பதால் பதட்டம் வேண்டியதில்லை. நம்முடைய பிள்ளைகளுக்கு தசை பலவீனமாக காணப்படுதல், தழும்புகள் போன்றவை காணப்பட வாய்ப்புள்ளது.
3. நீல நிற சருமம்
நம்முடைய பிள்ளைகளின் சருமம் நீல நிறத்தில் லேசாக காணப்படலாம். இது முற்றிலும் நார்மல் தான். இது போக போக நிறம் மாறிவிடும். ஒரு வேளை உங்கள் பிள்ளைகளின் சரும நிறம் இளஞ்சிவப்பாக மாறாமல் இருக்குமெனில், கட்டாயம் மருத்துவரை பார்க்கவும்.
4. இருமல்
இப்போது இருமல் எடுப்பது பொதுவான பிரச்சனையே. சில சமயம், பால் குடிக்கும்போது காற்றையும் விழுங்க இதனால் இருமல் எடுக்க தொடங்கும். ஆனால், இருமல் தொடர்ந்து இருக்கும்போது டாக்ரை நாம் பார்ப்பது நல்லது. அவர்களின் செரிமான மண்டலத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் இரும தொடங்குவர்.
5. மஞ்சள் காமாலை
புதிதாய் பிறக்கும் பிள்ளைக்கு மஞ்சள் காமாலை வருவது பொதுவான ஒன்றே. அவர்களின் கல்லீரல் முழுமையாக வளர்ச்சியடையாமல் இப்பிரச்சனை வரக்கூடும். ஆனால், மஞ்சள் காமாலை அவர்களுடைய உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தாமல் இருக்க மருத்துவர் ஆலோசனை நமக்கு இப்போது அவசியமாகிறது.
6. மூச்சு பிரச்சனை
நம்முடைய பிள்ளைகள் நன்றாகவே மூச்சுவிட கற்றுக்கொள்கிறார்கள். ஒருவேளை, அவர்கள் மூச்சுவிட சிரமமாக இருக்குமெனில், அப்போது நாசித்துவாரத்தை நாம் கவனிக்க வேண்டும். மூக்கடைப்பு இருந்தாலும் மூச்சு விட அவர்களுக்கு சிரமமாக இருக்கும்.
7. வாந்தி
இதுவும் புதிதாய் பிறந்த பிள்ளைகளுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனையே. பால் குடித்தவுடன் இப்போது அதனை துப்பவும் செய்வார்கள். ஆனால் வாந்தி தொடர்ந்து இருக்கும்போது அது நார்மல் அல்ல. சில சமயம் உணவு அலர்ஜி காரணமாகவும் அவர்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதனால் வாந்தி வரலாம். அவர்கள் வாந்தி எடுத்தபடியே இருந்து, உடல் எடை குறைந்துக்கொண்டே வரும்போது கட்டாயம் நாம் மருத்துவரை பார்க்க வேண்டும்.
8. காய்ச்சல்
நம்முடைய பிள்ளைகள் இப்போது தொற்றுக்கு எதிராக போராடும்போது, காய்ச்சல் வருவது பொதுவான ஒன்றே. இதற்காக பயப்பட வேண்டியதில்லை. லேசாக காய்ச்சல் இருப்பது அதுவாகவே சரியாக கூட வாய்ப்புள்ளது. ஆனால், கடுமையான காய்ச்சல் அவர்களுக்கு இருந்தால், கட்டாயம் மருத்துவரை பார்க்கவும். 102 டிகிரி பேரன்ஹீட் என்பது நார்மலான ஒன்றல்ல.
9. கோலிக்
நம்முடைய பிள்ளைகள் காரணமே இல்லாமல் அழுவார்கள். இதற்கு கோலிக் கூட காரணமாக இருக்கலாம். பெரும்பாலான கோலிக் பிரச்சனைகள் மூன்று மாதத்தோடு நம்முடைய பிள்ளைகளுக்கு சரியாகிவிடுகிறது.
இந்த ஆர்டிக்கல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.
மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.
A