இந்த பதிவில் நாம், ‘என்ன மாதிரியான அடிகள் இப்போது நம்முடைய பிள்ளைகளுக்கு இருக்கலாம்? இதனை தடுக்க என்ன செய்வது?’ என்பதை பார்க்கவிருக்கிறோம்.
பிள்ளைகள் இப்போது அடிபட்டு கொள்வதென்பது மிக பொதுவான ஒரு பிரச்சனையே. இதுவும் அவர்களின் வளர்ச்சியை குறிப்பது தான் என்றாலும், கடினமான அடிகள் எதுவும் இல்லை என்பதை நாம் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.
என்ன மாதிரியான அடிகள் இப்போது நம்முடைய பிள்ளைகளுக்கு இருக்கலாம்?
1. சுட்டுக்கொள்வது
நம்முடைய பிள்ளைகள் சுட்டுக்கொள்வதென்பது அடிக்கடி நடக்கலாம். அவர்கள்,
- சூரிய ஒளியில் சுட்டு கொள்ளலாம்
- ஸ்விட்சில் கை வைக்க வாய்ப்புள்ளது
- ஸ்டவ், விளக்கு, தீப்பெட்டி, நெருப்பு எரியும் இடத்தில் கையை வைத்து சுட்டுக்கொள்ள வாய்ப்புள்ளது
- சூடான பகுதிகளை தொட்டுப்பார்த்து சுட்டுக்கொள்வர்
- கப், குளிக்க வைத்திருக்கும் தண்ணீரில் சுட்டுக்கொள்ளவும் வாய்ப்புள்ளது
இதனை தடுக்க என்ன செய்வது?
- வாட்டர் ஹீட்டர்கள் அவர்களின் அருகில் இல்லை என்பதை உறுதி செய்யவும்
- அவர்களுக்கு அருகில் சூடாக இருக்கும் உணவுகளை வைக்க வேண்டாம்
- தீப்பிடித்தால் அடிக்கும் அலாரத்தை நம் வீட்டின் அறைகளில் வைக்கலாம், இது பாதுகாப்பாக நிச்சயம் அமையும்
2. விஷத்தன்மை
- ஷாம்புவை விழுங்குதல், சோப்பு போன்றவற்றை வாயில் வைத்தல் ஆகிய செயல்களை அவர்கள் செய்யக்கூடும்
- மருந்துகளை சரியான டோஸில் சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றாலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது
- கேஸ் அடுப்பு போன்றவற்றின் அருகில் நிற்கும்போது கார்பன் மோனாக்சைடு வெளிப்படலாம்
இதனை தடுக்க என்ன செய்வது?
- காலாவதியாகி போன மருந்து/மாத்திரையை கட்டாயம் தவிர்க்கவும்
- அவர்கள் கைக்கு எட்டும் உயரத்தில் ஷாம்பு, சோப்பு போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்
- கார்பன் மோனாக்சைடு டிடெக்டரும் கிடைக்கிறது
3. மூழ்குதல்
- டாய்லெட், பாத்ரூம் தொட்டிகள், வாளிகளில் தண்ணீர் அவர்களின் கால் முட்டி அளவுக்கு மட்டுமே உள்ளதை உறுதிசெய்யவும்
- அவர்களை தண்ணீரின் மிக அருகில் விடாமல் இருப்பது நல்லது
இதனை தடுக்க என்ன செய்வது?
- பயன்படுத்திவிட்டு தண்ணீரை கீழே ஊற்றிவிடுவது நல்லது
- எப்போதும் தொட்டிகளை மூடி வைத்திருக்கவும்
- டாய்லெட் கதவையும் திறந்து போடாமல் பார்த்துக்கொள்ளவும்
4. விழுதல்
பிள்ளைகள் கீழ்காணும் பொருட்களில் இருந்து விழ வாய்ப்புள்ளது. அவை,
- உயர்ந்த நாற்காலிகள்
- படுக்கை, டேபிள், மேசை போன்றவை
- மாடிப்படி
- வழுக்கும் தரைகள்
- விளையாட்டு பொருட்கள்
- பேபி வால்க்கர்
- திறந்திருக்கும் ஜன்னல் அல்லது கதவு
இதனை தடுக்க என்ன செய்வது?
- ஜன்னல் பாதுகாப்பு கம்பி, படிகளில் கேட் என பாதுகாப்பாக வைத்திருக்கவும்
- பிள்ளைகள் விளையாடும் இடம் வழுக்கவில்லை என்பதை உறுதி செய்யவும்
- பிள்ளைகளை தனியாக விட்டுவிட்டு எங்கும் செல்லக்கூடாது
5. விழுங்குதல்
- பிள்ளைகள் இப்போது உணவு, பொம்மைகள், பேட்டரி, ரப்பர் பேண்டு, நூல், ரிப்பன் போன்றவற்றை விழுங்க வாய்ப்புள்ளது
- போர்வை, தலையணை, மெத்தை போன்றவற்றையும் வாயில் வைப்பார்கள்
இதனை தடுக்க என்ன செய்வது?
- தொட்டில்களில் அவர்கள் இருக்கும்போது கவனம் வேண்டும், அவர்கள் வாயில் வைக்கும் விதத்தில் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்யவும்
- சிறிய பொம்மைகளை அவர்களிடம் கொடுக்காதீர்கள், வாயில் வைப்பார்கள்
- மூச்சு திணறல் ஏற்படுத்தும் எதுவும் அவர்கள் அருகில் இல்லை என்பதை உறுதிசெய்துக்கொள்ளுங்கள்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.
மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.
#tamilbabychakra #bbctamil #atoddlerthings