பிறவி அங்க அடையாளம் (பர்த் மார்க்) பற்றி அறிய வேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள்

cover-image
பிறவி அங்க அடையாளம் (பர்த் மார்க்) பற்றி அறிய வேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள்

இந்த பதிவில், “பர்த் மார்க் என்றால் என்ன? எங்கே காணலாம்? எதனால் ஏற்படுகிறது? மரபணு சார்ந்த ஒன்றா? இது பிள்ளைகளின் எதிர்காலத்திலும் இருக்குமா? இதன் வகைகள் என்ன? எப்படி நீக்கப்படுகிறது?” போன்றவற்றை பார்க்கவிருக்கிறோம்.

பர்த் மார்க் என்றால் என்ன?

நம்முடைய பிள்ளைகள் பிறக்கும்போது சருமத்தில் காணப்படும் நிற மாற்றம் தான் இந்த பர்த் மார்க் ஆகும். ஒரு சில பிள்ளைகளுக்கு பிறந்த சில வாரங்களில் கூட இதனை நம்மால் காண முடியும். இதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதால் பயம் வேண்டாம்.

எங்கே இதனை காண முடியும்?

இதனை நம்முடைய பிள்ளைகளின் உடம்பு அல்லது முகத்தில் காணலாம். இவை நிறம், அளவு, தோற்றம், வடிவம் என மாறுபட்டும் காணப்படும். ஒரு சில பிள்ளைகளுக்கு இது வெகு நாட்கள் வரையும் கூட அப்படியே இருக்கும். சிலருக்கு மெல்ல மறைந்துவிடவும் வாய்ப்புள்ளது. பெரும்பாலான பர்த் மார்க், எந்தவொரு பாதிப்பையும் பிள்ளைகளுக்கு ஏற்படுத்துவதில்லை. ஆனால், ஒரு சில சமயங்களில் மருத்துவ நிலைகளை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் நீக்கவும் ஆலோசனை வழங்குவர்.

எதனால் இது ஏற்படுகிறது?

பிரக்னென்சி காலத்தில் ஏற்படக்கூடிய உணவு பசி காரணமாக இந்த பர்த் மார்க் வருவதாக சொல்லப்படுவது உண்மை ஒன்றுமல்ல. இது கர்ப்பிணிகள் செய்யும் அல்லது செய்யாத விஷயத்தை பொறுத்து ஒருபோதும் வருவதில்லை. இதற்கு என்ன காரணம் என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது.

இது மரபணு சார்ந்த ஒன்றா?

நம்முடைய பரம்பரை வழியாகவும் இந்த பர்த் மார்க் வருகிறது, சிலருக்கு மரபணு சார்பற்றும் இது வருகிறது.

இது நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்திலும் இருக்குமா?

சருமத்தில் வரக்கூடிய இந்த பர்த் மார்க் பெரும்பாலும், மறைந்துவிடுகிறது. அதன் பிறகு தழும்பை நம்மால் காணவும் முடியும். ஆனாலும், இதனை பர்த் மார்க் என்று அழைப்பதில்லை.

இதன் வகைகள் என்னென்ன?

இவை இரண்டு வகைப்படுகிறது,

  • இரத்தநாளம் தொடர்புடைய பர்த் மார்க் என்பது நம்முடைய பிள்ளைகளின் சருமத்தில் இரத்தநாளங்கள் உருவாகாமல் இருக்கும்போது அந்த இடத்தில் வருவதாகும்.
  • நிறமி தொடர்புடைய பர்த் மார்க் என்பது, ஒரே இடத்தில் நிறமி செல்கள் சேர்வதாகும். நிறமி செல்கள் தான் நம்முடைய பிள்ளைகளின் சருமத்துக்கு நிறத்தை தரக்கூடியது.


நிறமி செல் தொடர்புடைய பர்த் மார்க் என்னென்ன?

  • மச்சம்
  • காஃபிலௌ புள்ளிகள்
  • மங்கோலியன் நீல நிற புள்ளிகள்

இரத்தநாளம் தொடர்புடைய பர்த் மார்க் என்னென்ன?

  • சல்மான் திட்டுகள்
  • இரத்தக்குழல்கட்டி (ஹேமாஞ்சியோமாஸ்)
  • பார்ட்-ஒயின் ஸ்டையின்

பர்த் மார்க் எப்படி நீக்கப்படுகிறது?

பெரும்பாலான பர்த் மார்க் இருந்தாலும் எந்தவித விளைவும் இதனால் இருப்பதில்லை. அதனால் நீக்க வேண்டுமென அவசியமில்லை. சில பர்த் மார்க் பார்ப்பவருக்கு புலப்படும் விதத்தில் நம் பிள்ளைகளுக்கு அருவருப்பை ஏற்படுத்தும். சில வகை பர்த் மார்க்குகள், சருமத்தில் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தவும் செய்யுமென்பதால், கட்டாயம் மருத்துவரிடம் இது குறித்து நாம் ஆலோசனை பெற வேண்டும்.

தோல் நிபுணரிடமும் நாம் இது குறித்த ஆலோசனையை இப்போது பெறலாம்.

லேசர் தெரபி எவ்வாறு உதவுகிறது?

லேசர் தெரபி மூலமாக நன்றாக தெரியும் அடையாளங்கள், லேசாக தெரியும் விதம் சிகிச்சை அளிக்கப்படும். இதனை தோல் நிபுணர் அல்லது தோல் அறுவை சிகிச்சை நிபுணர் செய்வர். ஆனால், இது நம் பிள்ளைகளுக்கு ஏற்ற ஒரு சிகிச்சை தானா என்பதை மருத்துவர்களே முடிவு செய்வர்.

பர்த் மார்க் பிள்ளைகளுக்கு இருப்பது குறித்து நாம் கவலைப்பட வேண்டாம். அதனை தொடர்ந்து கண்காணித்த வண்ணம் இருங்கள். அவை, மற்றவர் கண்களுக்கு புலப்படும் வகையில் இருந்து, அதனால் பிள்ளைகளின் எதிர்காலத்தில், அவர்கள் கேலிக்கு ஆளாக வாய்ப்புள்ளது என நினைத்தால் அப்போது நிச்சயம் மருத்துவரிடம் இது குறித்து ஆலோசிக்கவும். இதனால் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பதை மருத்துவரிடம் கேட்டறிந்து நாம் தெளிவை பெறலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#tamilbabychakra #bbctamil #birth
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!