சென்னையில் உள்ள சிறந்த கருத்தரித்தல் மையங்கள்

cover-image
சென்னையில் உள்ள சிறந்த கருத்தரித்தல் மையங்கள்

நாம் இப்போது 2021-இல் இருக்கிறோம். இன்றைய நாளில் சாத்தியமற்றது என எதுவுமே இல்லை. அப்படி இருக்க பிள்ளை பிறப்பு என்பதும் சாத்தியமானதே. ஒருவேளை இயற்கையாக கருத்தரிக்க முடியாதவர்கள் முதலில் மருத்துவரிடம் பரிந்துரை பெற்று மாத்திரைகளை எடுத்துக்கொள்வர். அப்படியும் பலன் அளிக்கவில்லை என்றால், ஹார்மோன் ஊசிகள் போடப்படுகிறது. இவற்றை எல்லாம் கடந்து தான் IVF முறையை மருத்துவர்கள் பரிந்துரை செய்வர். இப்போது சென்னையில் உள்ள சிறந்த கருத்தரித்தல் மையம் எவை என்பதை நாம் பார்ப்போம்.

 

எவை சிறந்த கருத்தரித்தல் மையங்கள்?

1. பியர்ல் பாலி கிளினிக் - கொளத்தூர்

நிமிட பொழுதில் நமக்கிருக்கும் பிரச்சனைகளை எடுத்துரைத்து பயத்தை போக்குகின்றனர். பெரும்பாலும், இது போன்ற சூழலில் ஏற்படும் குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்தாலே, மன அழுத்தமின்றி ஆரோக்கியமாக நம்மால் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு சென்னையில் காணப்படும் சிறந்த கிளினிக்குகளில் ஒன்று தான் இந்த பியர்ல் கிளினிக். நமக்கு என்ன பிரச்சனை என்பதை தெளிவாக புரியவைத்து, என்ன செய்ய வேண்டுமென்பதையும் கூறுகின்றனர். நாம் செலவு செய்யும் ரூபாய் வீண் போவதில்லை என்கின்றனர் இங்கு வந்து பார்த்து பயனடைந்த பலர்.

கன்சல்டன்ட் ஃபீஸ்: 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை

http://pearlwomenscentre.com/

 

2. கிப்ட் கிளினிக் சென்டர் - விநாயகபுரம்

சென்னையில் உள்ள பிரபலமான கிளினிக்குக்களில் இதுவும் ஒன்று. இங்கே டாக்டர் திவ்யா அவர்கள் அளிக்கும் தெளிவான விளக்கத்தை கேட்கும்போது நமக்கே ஆசையாக இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நேரமெடுத்து மிகவும் பொறுமையாக பதில் அளிக்கிறார். இந்த கிளினிக்கிற்கு ஒரு முறை சென்றால் போதும், நிச்சயம் எப்படிப்பட்ட குழப்பத்திற்கும் விடை கிடைக்க தெளிவுடன் திரும்புவார்கள் என பலரும் தங்களுடைய பாசிட்டிவான எண்ணங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். கர்ப்பம் தரிக்க ஆசைப்படுபவர்கள் டாக்டர். திவ்யா அவர்களை கண்டிப்பாக பார்த்தால், நிச்சயம் நற்பலனை பெறுவர் என்றும் பலரும் புகழாரம் சூட்டுகின்றனர்.

கன்சல்டன்ட் ஃபீஸ்: 300 ரூபாய்

 

3. புராகிரஸ் ஸ்பெஷாலிட்டி கிளினிக் - மடிப்பாக்கம்

இங்குள்ள மருத்துவர்கள் நட்புடன் பிரச்சனைகளை தீர்க்க உதவுகின்றனர். உடலில் என்ன பிரச்சனை என்பதை எவ்வித ஒளிவு மறைவின்றி நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றனர். பிரசவத்தில் சிக்கல் இருப்பினும் கர்ப்பிணி பெண்களையும், அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும் அமைதியுடன் கையாள்கின்றனர். கர்ப்பம் தரிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை அன்பாக புரியவைத்து, நம்மேல் நமக்கே நம்பிக்கையை வரவழைக்க செய்கின்றனர் என இங்கு பார்த்து பயன்பெற்ற பலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்கின்றனர்.

கன்சல்டன்ட் ஃபீஸ்: 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை


4. ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் - தாம்பரம் கிழக்கு

கணவன், மனைவி இருவரும் இங்கே நம்பிக்கையோடு ஆலோசனை பெற்று கருத்தரிக்க முயற்சி செய்யலாம். சிறந்த சேவையை வழங்கும் இவர்கள், பலராலும் பரிந்துரைக்கப்படும் கருத்தரித்தல் மையமும் கூட. நமக்கிருக்கும் பயத்தை போக்கி நல்லதோர் முறையில் பிள்ளையை பெற்றுக்கொள்ள சிறந்த இடமும் இதுவென்றும் பலரும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொள்கின்றனர்.

மற்ற இடங்கள்: அம்பத்தூர், கீழ்பாக்கம், அடையார்

கன்சல்டன்ட் ஃபீஸ்: 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை

https://www.iswaryafertility.com/

 

5. தியா ஸ்பெஷாலிட்டி கிளினிக் - வேளச்சேரி

பலரும் பார்த்து மனநிறைவுடன் கருத்துக்களை பகிர்ந்த இடங்களுள் இதுவும் ஒன்று. இங்கே பார்த்தவர்கள் பலரும், தங்களுடைய மனதில் இருக்கும் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் பக்கம் பக்கமாக பகிர்ந்துக்கொண்டுள்ளனர். கர்ப்பம் தரிக்க முயற்சி செய்யும்போது சென்ற பலரும், பிரசவம் கடந்தும் இந்த கிளினிக் சென்று தங்களது நன்றியை வெளிப்படுத்துவதாக கூறுகின்றனர். இங்குள்ள மருத்துவர்களுக்கும், அவர்களுடைய நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளனர். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், வேளச்சேரியின் லேண்ட் மார்க்காக இது இருக்கிறது.

கன்சல்டன்ட் ஃபீஸ்: 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை


6. ஜீவன் வுமன் கேர் கிளினிக் - வளசரவாக்கம்

முதல் முறை செல்வோருக்கு நல்ல அனுபவத்தை வழங்கும் ஒரு மருத்துவமனை இதுவென சொல்லப்படுகிறது. இங்கு பணிபுரிபவர்களும், மருத்துவர்களும் நட்பாக பழகி, நம்முடைய சந்தேகங்களுக்கு தெளிவான பதில்களை தருகின்றனர் என்றும் சென்று வந்த பலர் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். நம்முடைய சந்தேகங்களை இங்குள்ள மருத்துவர்கள் பொறுமையாக கேட்டு, அதற்கு என்ன தான் தீர்வு என்பதையும் பொறுமையாகவே நமக்கு புரியும்படி கூறுகின்றனராம். அதோடு, பலரும் அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இந்த கிளினிக்கை பரிந்துரை செய்துள்ளனர்.

கன்சல்டன்ட் ஃபீஸ்: 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை


7. உஷா மருத்துவமனை - ஃபெர்டிலிட்டி, மெட்டர்னிட்டி & சைல்ட் கேர் - தாம்பரம்

சென்னையின் பிரபலமான கருத்தரித்தல் மையங்களில் இதுவும் ஒன்றாகும். நட்புடன் நம் மனதில் உள்ள கேள்விகளை கேட்டு, அதற்கான தீர்வை தந்து, பிரசவம் கழித்து இயல்பு நிலைக்கு திரும்புவது வரை இவர்களுடைய தலையாய கடமை என்பதை பலரும் பெருமையுடன் பகிர்கின்றனர். நம்முடைய பிரச்சனை என்னவென்பதை தெரிந்துக்கொண்டு படிப்படியாகவே சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். நம்மை பயமுறுத்தும் விதமாக எதுவுமே சொல்லப்படுவதில்லை என்றும் பலரும் தங்களின் அனுபவத்தை ஆரவாரம் பொங்க பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.

கன்சல்டன்ட் ஃபீஸ்: 300 ரூபாய்

https://usha-women-and-child-clinic.business.site/

 

8. ஜனனம் கருத்தரித்தல் மையம் - நீலாங்கரை

இந்த சென்டர் குறித்தும் பலரும் பலவித கருத்துக்களை பக்கம் பக்கமாக பகிர்ந்துக்கொண்டுள்ளனர். மருத்துவர்கள் நட்புடன் நம்முடைய பிரச்சனைகளை இங்கே கையாள்கின்றனர். நாங்கள் இங்கு வந்து மனநிறைவுடன் வீடு திரும்பினோம் என பலரும் பாசிட்டிவாக அவர்களின் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். நம்பிக்கையுடன் செல்லலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். இங்குள்ள சூழல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும் சிலர் தங்களின் மனதை பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.

கன்சல்டன்ட் ஃபீஸ்: 750 ரூபாய்

https://jananamfertility.com/index.html

 

இன்றைய நாளில் பல கருத்தரித்தல் மையங்கள், பிள்ளை பெற்றுக்கொள்ள நமக்கு உதவுகிறது. கருத்தரித்தல் மையம் என்றாலே, IVF மட்டும் தான் என்ற மனநிலை பலருக்கு இருக்கிறது. ஆனால், உண்மையில் சொல்ல வேண்டுமானால், இவை யாவும், ஆரோக்கியமாக பிள்ளை பெற்றுக்கொள்ள வழி காட்டுகிறது. கணவன் - மனைவி உடல்நிலையில் எவ்வித பிரச்சனைகளும் இல்லாத வரை இயற்கையாகவே கருத்தரிக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி, வைட்டமின் மாத்திரைகளை தருவர். அனைத்து நிலைகளை கடந்தே IVF என்பதனை மருத்துவர்கள் பரிந்துரைப்பர். அதனால் நமக்கு பயம் வேண்டிய அவசியமில்லை.

#infertilityawareness #planningababy
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!