சென்னையில் உள்ள சிறந்த பிளே ஸ்கூல்

cover-image
சென்னையில் உள்ள சிறந்த பிளே ஸ்கூல்

பிள்ளைகளின் கல்வி என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு பாதுகாப்பு என்பதும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாம் எவ்வளவு கட்டணம் செலுத்துகிறோம் என்பதை காட்டிலும், நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு அவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பெற்றோர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். இப்போது சென்னையில் இருக்கும் தலைசிறந்த கிண்டர்கார்டன் எவை என்பதை நாம் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

 

எவை எல்லாம் சிறந்தவை?

1. யுனைட்டட் கிட்ஸ் ப்ரீஸ்கூல்

இந்த பள்ளியில் பிள்ளைகளை சிறந்த முறையில் கவனித்துக்கொள்வதோடு, உற்சாகப்படுத்தும் விதமாக ஊக்க பரிசுகளும் வழங்குகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் பல பிள்ளைகள் ஞாயிற்றுக்கிழமை கூட பள்ளிக்கு செல்ல ஆசைப்படுவதாக கருத்துக்கள் சொல்லப்படுகிறது. பாலர்பள்ளி அனுப்ப விரும்பும் அம்மாக்களுக்கு சிறந்த தேர்வாக இப்பள்ளி இருக்குமென்றும் பலரும் கூறுகின்றனர், தாம்பரத்தில் இருக்கிறது.

http://www.unitedkidspreschools.com/

 

2. சன்சைன் மொன்டெசேரி ஸ்கூல்

இங்கே தலைசிறந்த ஆசிரியர்கள் கொண்டு நம் பிள்ளைகளுக்கு கற்பிக்கப்படுகிறது. பிள்ளைகள் விளையாட குளியல் தொட்டிகள் என பல வசதிகள் இந்த பள்ளியில் காணப்படுகிறது. இந்த பள்ளியில் சேர்த்துள்ள பல பெற்றோர்களும் அருமை என கூறியுள்ளனர். வேளச்சேரியில் காணப்படுகிறது இந்த ஸ்கூல்.

http://www.sunshineschool.in/

 

3. பம்பில் பீஸ் பிளே ஸ்கூல்

எனது மகளுக்காக இந்த பள்ளியை தேர்ந்தெடுத்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன் என்றுள்ளார் ஒரு பெற்றோர். ஒவ்வொரு பிள்ளைகளையும் எவ்வித பாரபட்சமும் இன்றி நன்றாக கவனித்துக்கொள்வதாகவும் கூறுகின்றனர். பிள்ளைகளின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யும் விதத்தில் சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். வண்ணமயமான கார்ட்டூன் கொண்டு ஸ்கூல் உட்புற சுவர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதோடு, பிள்ளைகள் விளையாட தேவையான விதவிதமான பொம்மைகளும் இங்கே காணப்படுகிறது. மேற்கு மாம்பலத்தில் காணப்படுகிறது இந்த ஸ்கூல்.

http://www.bumblebeesplayschool.in/

 

4. SAN அகாடமி

சென்னை, பள்ளிக்கரணையில் அமைந்துள்ளது இந்த ஸ்கூல். இந்த ஸ்கூலின் வெளிப்புறமே பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். தமிழ் மொழி எழுத்துக்களையும், ஆங்கில எழுத்துக்களையும் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் விளையாட்டு என பலவும் இங்கே காணப்படுகிறது. வண்ணமயமான நிறங்களில் அறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிள்ளைகளின் புத்தகங்கள், பைகளை வைக்க தனி அறையும் காணப்படுகிறது. ஒரு பெற்றோர் அவருடைய பிள்ளையை 10 வருடங்களுக்கும் மேலாக இந்த ஸ்கூலில் படிக்க வைத்திருப்பதாக கூறுவது, இங்குள்ள சூழலையும் தரத்தையும் நமக்கு தெளிவாய் விளக்குகிறது.

https://sanacademy.edu.in/Pallikaranai/index.php

 

5. வேல்ஸ் இன்டர்நெஷனல் ப்ரீ-ஸ்கூல்

நீலாங்கரையில் அமைந்துள்ளது இந்த ஸ்கூல். ஒரே வார்த்தையில் இந்த ஸ்கூலை பற்றி சொல்ல வேண்டுமானால், ‘அருமை’ எனலாம் என்கின்றனர் பலரும். இங்கே நீச்சல் குளங்கள், பிள்ளைகள் விளையாடுவதற்கு ஏற்ற சறுக்கு விளையாட்டு மேடைகள், ஓடி ஆடி விளையாடுவதற்கு ஏற்ற கிரவுண்ட், அழகிய வடிவங்களில் கிளாஸ் ரூம்கள் என பிரம்மாண்டமாய் காணப்படுகிறது. இங்குள்ள ஆசிரியர்கள் பிள்ளைகளை அன்பு மழையில் நனைய செய்கின்றனர் என்றும் கருத்துக்கள் சொல்லப்படுகிறது. பிள்ளைகளின் ஆக்கபூர்வமான சிந்தனையை வளர்க்கும் பல பொம்மைகளும் இங்குள்ளது.

http://www.velsinternationalpreschool.com/

 

6. கிட்டிஸ் கிங்டம் பிளேஸ்கூல் டேகேர்

வேடவாக்கம் பகுதியில் அமைந்துள்ள இந்த ஸ்கூலும் பிள்ளைகளுக்கான சிறந்த ஸ்கூல்களுள் ஒன்று என சொல்லப்படுகிறது. இந்த பள்ளியில் படிக்க வைக்கும் பல பெற்றோரும், அருமை என்று கூறியுள்ளனர். யோகா வகுப்புகள், மியூசிக் வகுப்புகள், டான்ஸ் வகுப்புகள், டிராயிங் வகுப்புகள் என பலவும் இங்குள்ளது.

 

7. கிட்ஸீ

என்னுடைய மகன் இங்கு சேர்ந்த பிறகு பலவிதத்தில் மேம்பட்டு காணப்படுகிறான் என்கிறார் ஒரு பெற்றோர். இங்கு சேர்ந்த பிறகு தான் எப்படி சாப்பிட வேண்டும் என பல விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும் இன்னொரு பெற்றோர் பகிர்ந்துக்கொண்டுள்ளார். இங்குள்ள ஆசிரியர்கள், பிள்ளைகளிடம் மிகவும் அன்போடு நடந்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. கற்றலின் கூடாரம் இந்த ஸ்கூல் என்றும் பலர் புகழாரம் சூட்டுகின்றனர்.

http://www.kidzee.com/

 

8. யூரோ கிட்ஸ்

இந்த ஸ்கூல் பிள்ளைகளுக்கான பாதுகாப்பான சூழலை அமைத்து தருவதாக இங்கு படிக்க வைக்கும் பெற்றோர்கள் அவர்களின் மனதை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். பிள்ளைகளின் உடல் நலனிலும் அக்கறை கொண்டு அவ்வப்போது செக்கப் இங்கே செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ரிமோட் கார் விளையாட்டு, ஆக்கப்பூர்வமான சிந்தனையை உருவாக்கும் விளையாட்டு, பொம்மைகளை கொண்டு உடல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என பல விஷயங்கள் இங்கே சிறப்பாக அமைகிறது. இங்குள்ள ஆசிரியர்கள் பிள்ளைகளிடம் மிகுந்த அன்போடு நடந்துக்கொள்கின்றனர்.

http://www.eurokidsindia.com/

 

9. காஞ்சனா பாட்டி மை கிராண்ட்மா பிளேஸ்

பெயரே கூறுகிறது, பிள்ளைகளை நாங்கள் பாட்டி போல கவனித்துக்கொள்வோம் என்பதனை. விளையாட்டு பொருட்கள் நிரம்ப காணப்படுகிறது இந்த இடம். அதோடு, பிள்ளைகள், அவர்களின் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைவதற்கு உண்டான அனைத்து வித பழக்க வழக்கங்களையும் சிறந்த முறையில் இங்குள்ள ஆசிரியர்கள் சொல்லி தருகின்றனர். ஓவியம் வரைதல், எப்படி சாப்பிடுவது, மற்ற பிள்ளைகளிடம் எப்படி அன்பாக நடந்துக்கொள்வது என அனைத்தையும் அழகாக கற்கின்றனர். நம்முடைய பிள்ளைகளை சேர்க்க சென்னையில் காணப்படும் சிறந்த இடங்களுள் இதுவும் ஒன்று.

http://www.kanchanapaati.in/

 

10. கோ பனானா & மயூர் எஜூகேஷனல் டிரஸ்ட்

சென்னை, கோபாலபுரத்தில் உள்ள இந்த ஸ்கூல் பிள்ளைகளை அக்கறையாக கவனித்துக்கொள்வதாக பலரும் கூறுகின்றனர். சென்னையில் உள்ள சிறந்த பிளே ஸ்கூல்களுள் இதுவும் ஒன்று என்கின்றனர் சிலர். எனது சொந்த அனுபவத்தில் கூறுகிறேன், தளிர்நடை போடும் நம் பிள்ளைகளுக்கு ஏற்ற சிறந்த ஸ்கூல் இது தான் என்றும் ஒரு பெற்றோர் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

http://www.gobananasmayur.com/

 

பெற்றோர்களே, சென்னையில் உள்ள சிறந்த கிட்ஸ் பிளே ஸ்கூல் எவை என்பதை நாம் இப்போது பார்த்தோம். இது போல நமக்கு தெரியாத இன்னும் பல சிறந்த ஸ்கூல்கள் உள்ளது என்பதே உண்மை. எப்போதும் பிள்ளைகளை ஸ்கூலில் சேர்க்கும் முன்பு விசாரித்து நல்லதொரு ஸ்கூலை தேர்ந்தெடுப்பதே அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக அமையும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#playschool #earlylearning #boostingchilddevelopment
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!