சென்னையில் உள்ள சிறந்த தோல் மருத்துவர்கள்

cover-image
சென்னையில் உள்ள சிறந்த தோல் மருத்துவர்கள்

நம்மை அழகாக வைத்துக்கொள்ள முக்கிய பங்களிப்பது நம் சருமம் தான். சருமம் என்பது வெளிப்புற தோற்றத்தில் அழகை பிரதிபலிக்கும் ஒரு விஷயம் என்றாலும், அதனை கடந்து பாதுகாக்க வேண்டிய ஒன்று என்பதை நாம் நினைவில் கொண்டு, அதற்கு முதலில் முக்கியத்துவம் தர வேண்டும். அப்போது தான் பக்கவிளைவுகள் ஏற்படாமல் சருமத்தை நம்மால் பேணி பாதுகாக்க முடியும். இப்போது சென்னையிலுள்ள தலைசிறந்த தோல் நிபுணர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

 

1. Dr. ஸ்னேகலதா - தாம்பரம்

நம்முடைய பிரச்சனைகளை தெளிவாக கேட்டு அதற்கான தீர்வையும் அழகாக இவர் வழங்குவதாக பலரும் கூறுகின்றனர். பல வருடங்கள் கடந்து எனக்கு சருமத்தில் இருந்த அடையாளம் ஒன்றை நீக்க இவர் உதவியதாக ஒருவர் கூறியுள்ளார். சருமம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் இவரிடம் நம்பி வரலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். நிலா ஸ்கின் கேர் கிளினிக்கில் இவரை நாம் காணலாம்.

கன்சல்டேஷன் ஃபீஸ்: 500 ரூபாய்

 

2. Dr. கார்டெலியா பபிதா - பெசன்ட் நகர்

‘கடந்த மூன்று வருடமாக நான் என் மகளை அழைத்து செல்கிறேன். இவர் மிகவும் பணிவன்புடன் சிகிச்சை அளிக்கிறார். நம்முடைய பிரச்சனைகளை பொறுமையாக கேட்டு, அதற்கு ஏற்ப சிகிச்சை வழங்குகிறார்.’ என்று ஒருவர் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். இவர் பரிந்துரைத்த மருந்துகள், எனக்கு நற்பலனை அளித்தது என்றும் ஒருவர் கூறியுள்ளார். சில நாட்களிலேயே என் சருமத்தில் நல்லதொரு மாற்றம் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கன்சல்டேஷன் ஃபீஸ்: 600 ரூபாய்


3. Dr. ராதா சுப்பிரமணியன் - T.நகர்

எனக்கு இந்த டாக்டரிடம் வைத்தியம் பார்ப்பது மிகவும் சவுகரியமாக இருந்தது என ஒருவர் தன்னுடைய அனுபவத்தை அழகாக பகிர்ந்துக்கொண்டுள்ளார். ஒரு பிரெண்டை போல என்னுடைய பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளையும் சிறப்பாக வழங்கினார் என்றும் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். எந்தவொரு பிரச்சனைக்கும் நிரந்தரமான தீர்வை பெற இவர் உதவுவதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவரை ஸ்பேட் ஸ்கின் & ஆஸ்திட்டிக்ஸ் என்ற கிளினிக்கில் நம்மால் பார்க்க முடியும்.

கன்சல்டேஷன் ஃபீஸ்: 500 ரூபாய்

 

4. Dr. மஞ்சுமீனா - கந்தன்சாவாடி

என் குழந்தைக்கு சரும பிரச்சனை இருந்தது. அப்போது அருகில் உள்ள சிறந்த தோல் நிபுணரை தேடினேன். அப்போது தான் Dr. மஞ்சு மீனா அவர்களை பார்த்தேன். இவர் மிகவும் பிரெண்ட்லியாக என்னிடம் பேசினார். என் பிள்ளைக்கு என்ன பிரச்சனை என்பதை ஆழமாக கேட்டறிந்து, அதற்கு ஏற்ப தீர்வையும் வழங்கினார். யாராவது ஸ்கின் பிராப்ளம் என என்னிடம் சொன்னால், நிச்சயம் இவரை நான் பரிந்துரைப்பேன் என்கிறார் ஒரு பெண்மணி.

கன்சல்டேஷன் ஃபீஸ்: 500 ரூபாய்

 

5. Dr. புவனாஸ்ரீ N - அடையார்

இவர், வரும் நோயாளிகளை வேற்றுமையுடன் பார்க்காமல் மிகுந்த அன்புடன் நடந்துக்கொள்வதாக கூறுகின்றனர். ஒருவர் கூறும்போது, நான் இதுவரை பார்த்த தோல் நிபுணர்களுள் இவர் தான் சிறந்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார். இவர் ஸ்டெப் பை ஸ்டெப்பாக, பிரச்சனைகளை கேட்டறிந்து சிறந்த தீர்வை வழங்குவதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். புவி ஈஸ் டெர்மாஜிக்கல் லேசர், ஸ்கின் & ஹேர் கிளினிக் என்பதில் இவர் பார்க்கிறார்.

கன்சல்டேஷன் ஃபீஸ்: 700 ரூபாய்

 

6. Dr. B. சிந்து ராகவி - வேளச்சேரி

சருமத்தில் என்ன பிரச்சனை என்பதை கேட்டறிந்து சிறந்த உணவுகளை பரிந்துரைத்ததாகவும் ஒரு பெண்மணி பகிர்ந்துள்ளார். இவர் பிரெண்ட்லியாக நம்முடைய பிரச்சனைகளை கேட்டு அன்போடு நடந்துக்கொள்வதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒருவர் கூறும்போது, தனக்கு இருக்கும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக கூறுவதற்கு போதிய நேரம் ஒதுக்கியதாகவும், எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும் பாசிட்டிவான கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார். இவர் கேர்வ்ஸ் ஸ்கின் கிளினிக் என்பதில் பார்க்கிறார்.

கன்சல்டேஷன் ஃபீஸ்: 400 ரூபாய்

 

7. Dr. லக்ஷ்மி துர்கா M - அண்ணா நகர்

‘முடி கொட்டுகிறது என்று நான் சென்றேன். இவர் எனக்கு எதனால் முடி கொட்டுகிறது என்பதை அழகாக விளக்கினார். அதனோடு, அழகிய தீர்வையும் வழங்கினார்.’ என ஒரு பெண்மணி புகழாரம் சூட்டியுள்ளார். நாம் கொடுக்கும் பணம் வீண் போவதில்லை, நன்றாக பார்க்கிறார் எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இவர், ஆலிவியா ஸ்கின் & ஹேர் கிளினிக் என்பதில் பார்க்கிறார்.

கன்சல்டேஷன் ஃபீஸ்: 600 ரூபாய்

 

8. Dr. ஆர்த்தி லட்சுமணன் - MRC நகர்

இவருடைய பொறுமை கடலினும் பெரிது என்றுள்ளார் ஒரு பெண் மணி. அதேபோல நாம் சொல்வதை மிகவும் கவனமாக கேட்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இவர், தனது கிளினிக்கை சிறப்பாக பராமரித்து, வருபவர்களுக்கு நல்ல சூழலை அமைத்து தருவதாகவும் கூறுகின்றனர். ஆர்த்தி ஸ்கின் கேர் கிளினிக் என்பதில் இவர் பார்த்து வருகிறார்.

கன்சல்டேஷன் ஃபீஸ்: 750 ரூபாய்


9. Dr. கங்கா ரவிக்குமார் - அடையார்

‘எனக்கு பொடுகு தொல்லை என்று சென்றேன். இப்போது பொடுகு தொல்லையில் இருந்து நான் முற்றிலும் விடுபட்டு சுதந்திரமாக இருக்கிறேன். டாக்டர், நான் கூறியவற்றை மிகவும் கவனத்தோடு கேட்டு எனக்கு நல்ல தீர்வை வழங்கினார்.’ என ஒரு பெண் மணி கூறியுள்ளார். இவர் மிகவும் அமைதியானவர், அன்பானவர், பண்பானவர் என பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர். ஸ்கின் அலர்ஜி என வந்தால், இவரை தான் நான் என் சொந்த/பந்தங்களுக்கு பரிந்துரைப்பேன் என்றும் பலர் கூறியுள்ளனர். டெர்மிஸ் ஸ்கின் & ஹேர் கிளினிக் என்பதில் இவர் பார்த்து வருகிறார்.

கன்சல்டேஷன் ஃபீஸ்: 600 ரூபாய்

சருமம் என்பது நாம் பாதுகாக்க வேண்டிய ஒன்று. இதனில் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும், பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து தேவையற்ற கிரீம்களை தவிர்க்கலாம். மருத்துவர் பரிந்துரையின்றி நாமாக எதையும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. டாக்டர் ‘ஓகே’ சொன்னால் மட்டுமே அவை நம்முடைய சருமத்துக்கு ஏற்றது என்பதை நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#skincare
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!