6 Dec 2021 | 1 min Read
பாபாய்க்ரா தமிழ்
Author | 317 Articles
பிள்ளைகளின் நலன் என்பது நாம் அக்கறை காட்ட வேண்டிய ஒன்று. பகல் நேரங்களில் அவர்களுக்கு எந்த உடல்நல கோளாறு வந்தாலும், பொறுமை காக்கலாம். ஆனால், இரவில் லேசாக இருமல் எடுத்தால் கூட தாய் என்பவள் பதறி போய் விடுவாள். இது தாய்மைக்கே உண்டான சிறப்பு குணம் என்று கூட சொல்லலாம். அப்போது அருகில் உள்ள மருத்துவமனைகளில் எது சிறந்தது என்ற குழப்பமும் வரும். அந்த குழப்பத்தை குறைக்க இந்த பதிவு நிச்சயம் உதவும் என நாங்கள் நம்புகிறோம். இப்போது 24 மணி நேரங்கள் இயங்கும் சென்னையின் சிறந்த கிளினிக் எவை என்பதை நாம் பார்ப்போம்.
1. அப்போல்லோ சில்ட்ரன்ஸ் மருத்துவமனை
இருபத்து நான்கு மணி நேரமும் இயங்கும் அப்போல்லோ மருத்துவமனை சென்னையின் அடையாளமும் கூட. பிரசவம் முதல் அதற்கு பிறகு பிள்ளைகளுக்கு வரக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் அப்போலோ மருத்துவமனை இரவு பகல் பாராது சிகிச்சை அளிக்க காத்திருக்கிறது. தலைசிறந்த நிபுணர்களை கொண்டு விளங்கும் இந்த மருத்துவமனை பல தீவிர சிகிச்சைகளுக்கு சிறந்த ஒன்றும் கூட.
2. சிம்ஸ் மருத்துவமனை
வடபழனியில் இருக்கும் இந்த மருத்துவமனை பலவித பெற்றோர்கள் தேர்வு செய்யும் ஒரு சிறந்த மருத்துவமனையும் கூட. மாத்திரை மூலம் குணப்படுத்தும் வியாதி முதல் அறுவை சிகிச்சை வரை என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது இந்த சிம்ஸ் மருத்துவமனை. இங்கு நம்முடைய பிள்ளைகளுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்னவென்பதை அறிந்துக்கொண்டு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் சென்று வந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 24 மணி நேரமும் இவர்களின் சேவையானது நமக்கு கிடைக்கிறது.
3. சுகம் மருத்துவமனை
சுகம் மருத்துவமனை சிறந்த சூழலை கொண்டுள்ளதாக சென்று வந்த பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். திருவெற்றியூரில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை இருபத்து நான்கு மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் சிறந்த மருத்துவமனையும் கூட. இந்த மருத்துவமனை பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், ‘அருமை’ என பலரும் அவர்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். சகல வசதிகளையும் கொண்டுள்ளது இந்த சுகம் மருத்துவமனை. அதனால், பிள்ளைகளை அழைத்துக்கொண்டு எந்நேரமும் இவர்களின் மருத்துவமனை கதவை நாம் தட்டலாம்.
https://www.sugamhospital.com/
4. Dr. மேத்தா மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்
சென்னையில் இருபத்து நான்கு மணி நேரமும் பார்க்கும் இந்த சிறந்த மருத்துவமனை சேத்துப்பட்டில் அமைந்துள்ளது. நவீன ரக சாதனங்களை கொண்டு நமக்கு மற்றும் நம்முடைய பிள்ளைகளுக்கு இருக்கும் பிரச்சனைகள் கண்டறியப்பட்டு, உடனுக்குடன் சிகிச்சையளிக்கப்படுகிறது. ‘எனக்கு வயிற்று பிரச்சனை நள்ளிரவு 3 மணி அளவில் இருந்தது. இந்த நேரத்தில் எந்த டாக்டர் இருக்க போகிறார்கள் என நினைத்துக்கொண்டேன். ஆனால், இங்கே எனக்கு உடனடியாக ஊசி போடப்பட்டு, 2 மணி நேரத்தில் வீடும் திரும்பினேன். இரவில், ஏதாவது பிரச்சனை என்றால், நிச்சயம் நான் இந்த மருத்துவமனையை பரிந்துரைப்பேன்.’ என ஒருவர் சிறந்த கருத்தை வழங்கியுள்ளார்.
5. முருகன் மருத்துவமனை
இருபத்து நான்கு மணி நேரமும் திறந்திருக்கும் இந்த மருத்துவமனை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ளது. இங்கே நம்முடைய பிள்ளைகளுக்கு இருக்கும் பிரச்சனைகளை தெளிவாக புரிந்துக்கொண்டு சிகிச்சை அளித்து, தன்னம்பிக்கையை தருகின்றனர் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இங்குள்ள செவிலியர்கள் பிரெண்ட்லியாக நம்முடன் நடந்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. நமக்கும், நம்முடைய பிள்ளைக்கும் நல்லதொரு சூழலை அமைத்து தர இவர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுவதாக வந்து செல்லும் பலரும் கூறுகின்றனர்.
http://www.muruganhospitals.in/
6. ரமணா சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிடல்
சென்னை குரோம்பேட்டில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையும் இருபத்து நான்கு மணி நேரமும் தங்களின் தடையில்லா சேவையை வழங்குகிறது. இங்கே சிறந்த முறையில் நம்முடைய பிள்ளைகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. தீர்வை வழங்கும் சிறந்த மருந்து மற்றும் மாத்திரைகளும் வழங்கப்படுகிறது. ‘என் சகோதரியின் மகனுக்கு நள்ளிரவு 2:30 மணி அளவில் கடுமையான காய்ச்சல். எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ரமணா மருத்துவமனைக்கு போன் செய்தோம். அவர்கள் யோசிக்காமல் உடனே அழைத்து வர சொன்னார்கள். அந்த நேரத்தில் கூட அருமையான சேவையை சிறந்த செவிலியர்களை கொண்டு வழங்கினார்கள் என கூறியுள்ளார்.
7. காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் ஹாஸ்பிடல்
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையும் இரவு பகல் பாராமல் சேவையை வழங்கும் சிறந்த மருத்துவமனையாகும். ‘என் மகனுக்கு இரவு 1 மணிக்கு காது வலி வந்து அழ தொடங்கிவிட்டான். என்ன செய்வது என யோசித்த போது தான் இந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். எதனால் காது வலி வந்தது என்பதை கண்டறிந்து, அதற்கு சிறந்த பரிந்துரையையும் வழங்கினார்கள்.’ என ஒருவர் கூறியுள்ளார். சென்னையில் பலரும் பரிந்துரைக்கும் ஒரு சிறந்த மருத்துவமனையாக இது உள்ளது என்பதில் கடுகளவும் சந்தேகம் வேண்டாம்.
8. ரெயின்போ சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிடல் & பர்த்ரைட்
அனுபவமிக்க மருத்துவர்களையும், செவிலியர்களையும் கொண்ட இந்த சிறந்த மருத்துவமனை கிண்டி, அண்ணா சாலையில் உள்ளது. இவர்களின் சேவை நமக்கு இருபத்து நான்கு மணி நேரமும் தடையின்றி சிறப்பாக கிடைக்கிறது.
https://www.rainbowhospitals.in/
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.
மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.