7 Dec 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
கர்ப்பமாக இருக்கும்போதே, நடக்கவிருப்பது சுகப்பிரசவமா அல்லது சிசேரியனா என்ற குழப்பம் நமக்கு இருக்கும். இதற்கு பதிலை நம்மால் கூறிவிட முடியாது. காரணம், கர்ப்பமாக இருக்கும்போது நாளுக்கு நாள் நம்முடைய உடலில் பலவித மாற்றங்கள் நிகழும். இவை நல்ல மாற்றங்களாகவும் இருக்கலாம். சில சமயம், நன்மை தரக்கூடிய மாற்றங்களாக இல்லாமலும் போகலாம். எது எப்படியோ, இன்றைய நவீன காலக்கட்டத்தில் எப்பேற்பட்ட பிரச்சனைக்கும் நம்மால் தீர்வு காண முடிகிறது. பிள்ளைகளின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றிக்கொண்டாலும், இப்போது அதற்காக யாரும் பயப்படுவதில்லை. காரணம், சிசேரியனில் சுகமாக பிள்ளைகளை பெற்றுக்கொள்கின்றனர். இக்கட்டான சூழலில் செய்யப்படும் சிசேரியன் மற்றும் சுகப்பிரசவத்துக்கு தோராயமாக எவ்வளவு வாங்கப்படுகிறது என்பதை நாம் காணலாம்.
1. RKP மருத்துவமனை – நன்மங்கலம்
இங்கு சிறந்த முறையில் பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது.
சுகப்பிரசவத்துக்கு ஆகும் செலவு: ரூ. 50000.00 (தோராயமாக)
சிசேரியனுக்கு ஆகும் செலவு: ரூ.75000.00 (தோராயமாக)
2. கர்ப்ப ரக்ஷாம்பிகை கருத்தரித்தல் மையம்
அனுபவமிக்க மருத்துவர்களால் வைத்தியம் பார்க்கப்படுகிறது. பலரும் நல்ல மாதிரியான கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ள இந்த மருத்துவமனை கோடாம்பாக்கத்தில் உள்ளது.
சுகப்பிரசவத்துக்கு ஆகும் செலவு: ரூ. 50000.00 (தோராயமாக)
சிசேரியனுக்கு ஆகும் செலவு: ரூ.75000.00 (தோராயமாக)
3. ப்ளூம் ஹெல்த் கேர் – வேளச்சேரி
இதுவும் பிரசவத்துக்காக சென்னையில் காணப்படும் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாகும். பல அம்மாக்கள் இங்கு மருத்துவம் பார்த்து பிள்ளையை பெற்றுக்கொண்டு மகிழ்வுடன் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். இங்கு அனைத்து விதமான வசதிகளும் இருப்பதோடு, தலைசிறந்த நிபுணர்களை கொண்டும் மருத்துவம் பார்க்கப்படுகிறது.
சுகப்பிரசவத்துக்கு ஆகும் செலவு: ரூ. 50000.00 (தோராயமாக)
சிசேரியனுக்கு ஆகும் செலவு: ரூ.75000.00 (தோராயமாக)
4. பிரசாந்த் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் – வேளச்சேரி, சேத்துப்பட்டு, மாதாவரம்
சுகப்பிரசவத்துக்கு ஆகும் செலவு: ரூ. 45000.00 (தோராயமாக)
இன்ஸ்ட்ரூமெண்டல் டெலிவரிக்கு ஆகும் செலவு: ரூ. 45000.00 (தோராயமாக)
LSCS சிசேரியனுக்கு ஆகும் செலவு: ரூ. 72500.00 (தோராயமாக)
5. KS மருத்துவமனை – வேளச்சேரி
சுகப்பிரசவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் சென்னையில் உள்ள பல மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றென பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்களின் சிறந்த சேவை காரணமாக இரண்டாவது பிள்ளை பிரசவமும் இங்கு தான் நடந்தது எனவும் சிலர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
சுகப்பிரசவம் ஜெனரல் வார்டு: ரூ. 27000.00 (தோராயமாக)
சுகப்பிரசவம் பிரைவேட் வார்டு (Non AC): ரூ. 28800.00 (தோராயமாக)
சுகப்பிரசவம் பிரைவேட் வார்டு (AC): ரூ. 30000.00 (தோராயமாக)
சிசேரியன் ஜெனரல் வார்டு: ரூ. 48000.00 (தோராயமாக)
சிசேரியன் பிரைவேட் வார்டு (Non AC): ரூ. 50000.00 (தோராயமாக)
சிசேரியன் பிரைவேட் வார்டு (AC): ரூ. 54000.00 (தோராயமாக)
6. சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷன் – அண்ணா நகர்
இங்கும் சுகப்பிரசவமும் சிறந்த முறையில் பார்க்கப்படுகிறது. இங்குள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சிறந்த முறையில் உதவுகின்றனர்.
சுகப்பிரசவத்துக்கு ஆகும் செலவு: ரூ. 40000.00 (தோராயமாக, பெட் வாடகை அறையை பொறுத்து மாறும்)
சிசேரியனுக்கு ஆகும் செலவு: ரூ.65000.00 (தோராயமாக, பெட் வாடகை அறையை பொறுத்து மாறும்)
7. சரஸ்வதி மல்டிஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் – சதாசிவம் நகர்
இங்கேயும் சிறந்த முறையில் பிரசவம் பார்க்கப்படுகிறது. நல்ல முறையில் மருத்துவமனை சூழலை நமக்கு அமைத்து தருவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுகப்பிரசவத்துக்கு ஆகும் செலவு: ரூ. 25000.00 (தோராயமாக)
சிசேரியனுக்கு ஆகும் செலவு: ரூ. 45000.00 (தோராயமாக)
இங்கே தரப்பட்டுள்ள தொகைகள், தரவின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. சரியான தொகையை தெரிந்துக்கொள்ள மருத்துவமனையை அணுகவும். இந்த தொகை தோராயமானதே. இதற்கு பேபி சக்ரா பொறுப்பேற்காது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.
மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.