• Home  /  
  • Learn  /  
  • சென்னையில் உள்ள சிறந்த குழந்தைகள் காப்பகம்
சென்னையில் உள்ள சிறந்த குழந்தைகள் காப்பகம்

சென்னையில் உள்ள சிறந்த குழந்தைகள் காப்பகம்

9 Dec 2021 | 1 min Read

பிள்ளைகள் என்பது கடவுள் அளிக்கும் வரம். அவர்களுக்கு அருமையான நிகழ்காலத்தை அமைத்து தரும்போது, எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனையாளர்களாக கூட வர வாய்ப்புள்ளது. ‘எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கலையிலே, அவர்கள் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.’ என்பது ஓர் அற்புதமான பாடல். ஆனால், இந்த பாடலை பாட கூட பலருக்கு பாக்கியம் இல்லாமல் இன்றைய நாளில் போய்விட்டது என்பதே உண்மை. பிள்ளைகளை குப்பை தொட்டியில் போட்டு செல்வது, கழிவறையில் விட்டு செல்வது என நாளுக்கு நாள் அவலங்கள் அரங்கேறி தான் வருகிறது. இது ஒருபுறமிருக்க, நாம் என்றாவது ஒரு நாள் கைகளில் பிள்ளையை தாங்கி கொஞ்சிவிட மாட்டோமா என ஏங்கும் தம்பதியினரும் இருக்கின்றனர். பல தம்பதியினர், பிறர் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக நினைத்து குழந்தைகள் காப்பகத்துக்கு சென்று தத்தெடுப்பது, அவர்களுக்கு உணவு, உடை போன்றவற்றை வழங்குவது என பல செயல்பாடுகளை செய்கின்றனர். இப்படி உதவும் பல உள்ளங்களை பாராட்டவும், இந்த வலியை பதிவு செய்ய தான் குழந்தைகள் காப்பகம் குறித்து நாம் இப்போது காணவிருக்கிறோம்.

 

1. உதவும் உள்ளங்கள் – ஆதம்பாக்கம்

இவர்கள் பல பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒளியை ஏற்றி சிறந்த கல்வியையும் வழங்குகின்றனர். இவர்களின் சேவையை பார்த்து பிரமித்த பலரும் இன்று தன்னார்வ தொண்டை எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து வருகின்றனர். இவர்களால் இன்று பல நல்ல உள்ளங்கள் உருவாகி இவர்களுடன் இணைந்து தன்னால் இயன்றதை கொடுத்து வருகின்றனர்.

http://www.helpingheartshome.org/ 

 

2. ஸ்ரீ சாரதா சக்தி பீடம் – பெருங்களத்தூர் (பழசு)

இங்கு உதவி செய்தவர்கள் மனமார கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். 100% திருப்தியாக உதவியதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னை பெருங்களத்தூரில் இருக்கும் இந்த குழந்தைகள் காப்பகம் சென்னையில் காணப்படும் சிறந்த ஒன்றும் கூட. இவர்கள் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து பலரும் தங்களால் முடிந்தவரை உதவி வருகின்றனர்.

http://www.sspeetam.in/ 

 

3. குட் லைஃப் சென்டர் – தாம்பரம் மேற்கு

இந்த குழந்தைகள் காப்பகம், சூழலை அங்குள்ள பிள்ளைகளுக்கு சிறந்த முறையில் அமைத்து தருவதாக சொல்லப்படுகிறது. எந்தவொரு பாரபட்சமும் இன்றி ஆரோக்கியமான உணவை இங்குள்ள பிள்ளைகளுக்கு இந்த காப்பகம் அளிக்கிறது. இங்குள்ள பிள்ளைகளுக்கு நன்கொடை அளிப்பது ஒருபோதும் வீண் போவதில்லை என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

http://www.goodlifecentre.org/ 

 

4. அவ்வை ஹோம் & ஆர்பனேஜ் – அடையார்

ஒற்றை வார்த்தையில் இந்த காப்பகத்தை பற்றி சொல்ல வேண்டுமானால், ‘அருமை’ எனலாம். 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த காப்பகம் இன்று வரை பல பிள்ளைகளின் வாழ்வில் ஒளியேற்றி உள்ளது என்பதே உண்மை.

http://avvaihome.org/ 

 

5. அன்னை அன்பாலயா டிரஸ்ட் சைல்டு – ராயபேட்டை

இங்குள்ளவர்கள் அன்பாக அனைவரிடமும் பழகுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். பிள்ளைகளை அக்கறையுடன் கவனித்துக்கொள்ளும் இவர்கள். சிறந்த முறையில் உணவு, உடை மற்றும் உறைவிடத்தை பிள்ளைகளுக்கு அமைத்து தருகின்றனர். இங்கு வந்த பிறகு தான் பல பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளனர்.

http://www.annaianbalayaa.org/ 

 

6. சாய் பாபா குருகுலம் – பொலிச்சலூர்

1994 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது இந்த இடம். இன்று வரை இன்றியமையாத சேவையை வழங்கி பல பிள்ளைகளுக்கு எதிர்கால வாழ்க்கையை பிரகாசமாக அமைத்து தந்துள்ளனர். பிள்ளைகளுக்கு வாழை இலை விருந்து என மிகவும் நன்றாக கவனித்துக்கொள்கின்றனர் என சொல்லப்படுகிறது. அதோடு யாருமற்ற குழந்தைகளுக்கு கல்வி என பல வசதிகளையும் இந்த குருகுலம் கொண்டு சிறந்த முறையில் சென்னையில் விளங்குகிறது.

http://www.saibabagurukulam.com/ 

சென்னையை சுற்றி இதுபோல இன்னும் பல சிறந்த குழந்தைகள் காப்பகம் உள்ளது. நாம் அவர்களுக்கு உதவி செய்ய நினைத்தால் தாராளமாக மனமுவந்து செய்யலாம், தவறில்லை. நாம் குழந்தைகள் காப்பகத்துக்கு சென்று நேரடியாக நம்மால் இயன்ற உதவியை செய்யும்போது, அந்த இறைவன் ஆசியே நமக்கும், நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கிடைத்ததற்கு சமம் எனலாம். பிறப்பால் நாம் அனைவரும் ஒன்றே. மனிதம் இருக்கும் வரை, இவ்வுலகில் யாரையுமே ஆதரவற்றவர் என்று நாம் சொல்லிவிட முடியாது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#childrenhome #babycare #childsafety

Home - daily HomeArtboard Community Articles Stories Shop Shop