• Home  /  
  • Learn  /  
  • சென்னையில் உள்ள தலைசிறந்த 5 குடும்ப உணவகங்கள்
சென்னையில் உள்ள தலைசிறந்த 5 குடும்ப உணவகங்கள்

சென்னையில் உள்ள தலைசிறந்த 5 குடும்ப உணவகங்கள்

16 Dec 2021 | 1 min Read

வார விடுமுறை வந்துவிட்டால் போதும். குடும்பத்தோடு எங்காவது வெளியில் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரத்தான் செய்கிறது. ஆனால், கொரோனா ஒரு பக்கம் நம்மை டார்ச்சர் செய்து கொண்டு தான் இருக்கிறது, இருப்பினும், சுகாதாரமான உணவகங்களுக்கு குடும்பத்தோடு செல்வதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியம் எந்தவித குறையுமின்றி பாதுகாக்கப்படும். அப்படிப்பட்ட தலைசிறந்த 5 உணவகங்களை தான் நாம் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

1. மெட்ராஸ் பெவிலியன்

சென்னை மௌன்ட் ரோட்டில் அமைந்துள்ள இந்த உணவகம், கொரானாவுக்கான சிறப்பு சுகாதார முன்னேற்பாடுகளை செய்துள்ள சிறந்த ஒரு உணவகமும் கூட. உள்ளூர் உணவுகள், இந்திய உணவுகள், ஆசியாவின் சிறந்த உணவுகள், சர்வதேச பிரபல உணவுகள் என அனைத்து சைவ மற்றும் அசைவ உணவுகள் இங்கு கிடைக்கிறது. நாமாக உணவுகளை தேர்வு செய்து வீணடிக்காமல் சாப்பிடும் பஃபெட் முறையும் இங்குள்ளது. இந்த உணவகத்துக்கான பிரத்யேகமான பீட்பேக்குகள், இன்டர்நெட்டில் வலம்வருகிறது. இங்கு, பகிரப்படும் கருத்துக்கள் மேனேஜ்மெண்டால் பார்க்கப்பட்டு, உடனடியாக அதற்கான பதில்களும் தரப்படுகிறது. இந்த உணவகத்தில் நமக்கான சேவையும் சிறந்த முறையில் தரப்படுவதாக பலரும் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அதனோடு, நல்ல முறையில் அமைதியாக குடும்பத்தோடு செலவிடுவதற்கு ஏற்ற சிறந்த சூழலும் பணியாளர்களால் அமைத்து தரப்படுகிறது.

2. சீசனல் டேஸ்ட்ஸ்

வேளச்சேரி மெயின் ரோட்டில் இந்த உணவகம் அமைந்துள்ளது. இங்கும் கொரோனா சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்ட அழகிய பேமிலி டேபிள்கள், சுகாதாரத்தை கடைபிடிக்க சாநிட்டைஷர் என எந்நேரமும் நம்முடைய ஆரோக்கியத்தில் அக்கறை காட்டிய வண்ணம் இங்குள்ளவர்கள் வலம்வருகின்றனர். உள்ளூர், உணவுகள், இந்திய உணவுகள், ஆசிய உணவுகள், சைவ உணவுகள், ஹலால் உணவுகள் என அனைத்து விதமான உணவுகளும் இங்கு கிடைக்கிறது. இங்கு வரும் நீங்கள் இவர்களால் ஸ்பெஷலாக செய்து தரப்படும் தேங்காய் சாதத்தை கட்டாயம் முயற்சி செய்யவும். ‘நான் சிக்கன் பிரைடு ரைஸ் சாப்பிட்டேன். அதனோடு, கொங்கு மட்டன் கறியும் சாப்பிட்டேன். ருசியை பற்றி கூற வார்த்தைகளே இல்லை. அவ்வளவு அருமை.’ என்றுள்ளார் ஒருவர். இந்த உணவகம் குறித்து ஆயிரக்கணக்கானோர், நல்ல கருத்துக்களை மனம் விட்டு பகிர்ந்துள்ளனர்.

3. பாப்ரிகா

சென்னை, தேனாம்பேட்டையில் அமைந்துள்ளது இந்த அருமையான உணவகம். கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமூக இடைவெளியுடன் அழகாக அமைக்கப்பட்ட பேமிலி டேபிள்கள், சுகாதாரமான சுவையான உணவுகள் என எந்நேரமும் கூட்டம் நிரம்பி வழியும் சிறந்த உணவகம் இதுவாகும். ‘நான் இங்கு தோசை சாப்பிட்டேன், நன்றாக மொறுமொறுவென இருந்தது. அதற்கு தரப்பட்ட சாம்பாரின் சுவை இப்போதும் என் நாவை வருடுகிறது.’ என்றுள்ளார் ஒருவர். இன்னொருவரோ, ‘நான் என் மனைவியுடன் இந்த உணவகத்துக்கு சென்றிருந்தேன். நாங்கள் தாய் சிக்கன் ரெட் கறியையும், ஜாஸ்மின் ரைஸயும் சுவைத்து பார்த்தோம். இதுவரை நாங்கள் அப்படி ஒரு சுவையான உணவை சாப்பிட்டதே இல்லை என்றுள்ளார்.’ இதுபோல இந்திய மற்றும் சர்வதேச உணவுகள் என அனைத்தும் இங்கு சிறந்த முறையில் கிடைக்கிறது.

4. தக்ஷின்

சென்னை, அடையார் பூங்காவில் அமைந்துள்ளது இந்த சுகாதாரமான உணவகம். உணவு, சுவை, சேவை, சூழல் என அனைத்திலும் இந்த உணவகம் சிறந்த ஒன்று என பலரும் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். ‘நான் இவர்களின் ஸ்பெஷல் புட்டு சாப்பிட்டேன், அவ்வளவு அருமையாக இருந்தது. அதனோடு கடலை கறி, வாழை இலை அடை போன்றவையும் சாப்பிட்டேன். குடும்பத்தோடு சென்று மனம்விட்டு பேசி மகிழ்ந்து சாப்பிட இந்த உணவகம் சிறந்த ஒன்று என நிச்சயம் நான் கூறுவேன்.’ என்கிறார். ‘நான் எனது நண்பர்களுடன் அலுவல் வேலையின் போது இங்கு சாப்பிட்டேன். அவ்வளவு அருமையான சூழலை இங்குள்ளவர்கள் எங்களுக்கு அமைத்து தந்தனர்.’ என இன்னொருவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

5. அன்னலட்சுமி உணவகம்

பெயருக்கு ஏற்றார் போல அன்னத்தை அவ்வளவு அழகாக பரிமாறி, சுவையான உணவை வழங்குவதில் இந்த உணவகமும் சிறந்த ஒன்று. சென்னையின் சேத்துப்பட்டில் இந்த உணவகம் அமைந்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியுடன் அமர்ந்து உண்ணவும், சுகாதாரமான உணவை சுவைத்து மகிழவும் இந்த உணவகம் நமக்கு கைக்கொடுக்கிறது. மிக குறைந்த விலைக்கே நம்மால் நிறைவான மனதுடன் சாப்பிட சிறந்த இடமாக இந்த உணவகம் அமைகிறது.

நாம் எப்போதும் சுத்தமும், சுகாதாரமுமாக இருக்கும்போது எந்த ஒரு கிருமியை பார்த்தும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்கும் சென்னையின் சில சிறந்த உணவகங்களை நாம் இப்போது பார்த்தோம்.

நீங்கள் சென்னையில் வேறு எங்கெல்லாம் குடும்பத்தோடு சாப்பிட்டீர்கள்? அந்த உணவகங்கள் எப்படி இருந்தது? நீங்கள் பகிரவிருக்கும் கருத்துக்களை நாங்கள் இலவசமாக இன்னொரு பதிவில் பகிர்ந்து இலவசமாக உங்களை பிரபலப்படுத்துவோம். இப்போதே சென்னையில் உள்ள மற்ற சிறந்த உணவகங்களை குறித்து எங்களோடு பகிர்ந்து கொண்டு எண்ணற்ற பரிசுகளை வரும் நாட்களில் பெறலாமே.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#FamilyRestaurantinChennai

Home - daily HomeArtboard Community Articles Stories Shop Shop