17 Dec 2021 | 1 min Read
பாபாய்க்ரா தமிழ்
Author | 317 Articles
பொதுவாக அழகு என்றாலே பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். காரணம், எப்போதுமே ஆண்களை விட பெண்களே தங்கள் உடல் மீது கூடுதல் அக்கறை காட்டுவார்கள். பெண்கள் அழகு நிலையங்கள் செல்வது அழகுக்காக மட்டுமல்ல. இது போன்ற அழகு நிலையங்களில் தான் அவர்கள் சக தோழிகளுடன் நேரத்தை செலவிட ஆசைப்படுவார்கள். உணவு விஷயத்தில் ஆண்கள் அதிக ஆர்வம் கொண்டு பல்வேறு வகையான உணவை சுவைக்க ஆசைப்படுவது போல தான் பெண்கள் விதவிதமாக தங்களை அழகுப்படுத்திக்கொள்ள ஆசைக்கொள்வார்கள். இப்போது சென்னையில் பெண்களுக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சிறந்த அழகு நிலையங்கள் எவை என்பதை நாம் காண்போம்.
1. கன்யா பியூட்டி பார்லர் – மைலாப்பூர்
சென்னையில் சிறந்த சேவைகளை வழங்கும் அழகு நிலையங்களுள் இதுவும் ஒன்றாகும். பெண்களுக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இந்த அழகு நிலையத்தில் பெண்கள் மட்டுமே இருக்கின்றனர் என்பதால், மிகுந்த சவுகரியத்தை தருகிறது. தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை இந்த அழகு நிலையமானது இயங்குகிறது. பெண்களுக்கான அழகு பொருட்கள், குழந்தைகளுக்கான அழகு பொருட்கள், ஆயுர்வேத பொருட்கள், ஹேர் பாண்டிங், ஹேர் வீவிங், ஹெர்பல் ட்ரீட்மெண்ட், காது குத்துதல் என பல நவீன வசதிகளுடன் இந்த அழகு நிலையம் சிறந்த முறையில் இயங்கி வருகிறது.
2. டாலிஸ் பியூட்டி பார்லர் – புரசைவாக்கம்
இங்கு சிறந்த முறையில் அழகுப்படுத்தப்படுகிறது. நிபுணர்களை கொண்டு சிறந்த முறையில் இயங்கி வரும் இந்த அழகு நிலையம் சென்னையில் உள்ள சிறந்த அழகு நிலையங்களுள் ஒன்று என்பதில் சந்தேகம் வேண்டாம். பெண்களுக்காக மட்டுமே இயங்கி வரும் இந்த அழகு நிலையத்தில், மெஹெந்தி ஆர்டிஸ்ட், மேரேஜ் மெஹெந்தி ஆர்டிஸ்ட் போன்ற பல நிபுணர்களும் உள்ளனர். இவை தவிர ஹேர் கலரிங், ஹேர் டிரீட்மென்ட், ஹெர்பல் டிரீட்மென்ட், ஹேர் பாண்டிங், பேசியல், ஹேர் ஸ்ட்ரைட்டனிங் என எண்ணற்ற சேவைகள் வழங்கப்படுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும் இந்த அழகு நிலையம், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 24 மணி நேரமும் இயங்குவதாக தெரிய வருகிறது.
3. டிரெண்டி ஏஞ்சல்ஸ் பியூட்டி பார்லர் – பெரம்பூர்
‘சூப்பர் பியூட்டி பார்லர். நான் எனது தலைக்கு ஹாட் ஆயில் மசாஜை இங்கு செய்தேன். இங்குள்ளவர்கள் என் தலைமுடி மீது கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டனர். வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விக்கு, பொறுமையாக கோபப்படாமல் பதில்களை வழங்குகின்றனர்.’ என்றுள்ளார் ஒரு பெண்மணி. ‘நான் திருமண மேக்கப்புக்காக இந்த பியூட்டி பார்லருக்கு சென்றேன். இவர்கள் நிர்ணயித்த கட்டணமும், அவ்வளவு ஒன்றும் கூடுதலாக எனக்கு தெரியவில்லை. இங்குள்ள ஸ்டாப், கஸ்டமர்களிடம் நடந்துக்கொள்ளும் விதம் மிகவும் இனிமை.’ என்றுள்ளார். தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் இந்த அழகு நிலையம், ஞாயிற்றுக்கிழமையும் இயங்குகிறது.
4. லா ரெய்னா – மடிப்பாக்கம்
சென்னையில் பெண்களுக்காக இயங்கும் சிறந்த பியூட்டி பார்லரில் இதுவும் ஒன்றாகும். இவர்கள் நம்முடைய கூந்தலை பராமரிக்கவும், சருமத்தை பராமரிக்கவும், பாடி மசாஜ், ஹேர் கட், ஹேர் கலரிங், மேரேஜ் மேக்கப் என பல சேவைகளை சிறந்த முறையில் வழங்கி வருகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் அழகு பொருட்கள் யாவும், எந்த விதத்திலும் நம் சருமத்திற்கு எரிச்சல் தருவதில்லை. இவர்கள் கூடுதலாக பியூட்டி டிரையினிங் கோர்ஸ் கொடுத்து, அதற்கான சான்றிதழையும் வழங்குவதாக தெரிய வருகிறது. விலை குறைவு முதல் அதிகம் வரை என அனைத்து வரம்புக்குட்பட்ட மேக்கப் பேக்கஜ்களும் இங்குள்ளது.
5. மலர் அழகு நிலையம் – மேற்கு மாம்பலம்
சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக மட்டுமே இயங்கும் சிறந்த அழகு நிலையங்களுள் இதுவும் ஒன்றாகும். நார்மல் விலைக்கு அனைத்து விதமான அழகு சேவைகளும் இங்கு வழங்கப்படுகிறது. பெண்களுக்கான பியூட்டி பார்லர், மேரேஜ் மேக்கப் ஆர்டிஸ்ட், மேரேஜ் மெஹந்தி ஆர்டிஸ்ட், பேசியல், வாக்சிங், மெனிக்யூர் என அனைத்து விதமான சேவைகளும் குறைவான விலைக்கு வழங்கப்படுகிறது. நார்மல் பட்ஜெட்டில் உங்களை நீங்கள் அழகுப்படுத்திக்கொள்ள விரும்பினால், இந்த சிம்பிளான மலர் அழகு நிலையத்துக்கு சென்று வரலாம். நல்ல முறையில் இயங்குவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது போல இன்னும் பல அழகு நிலையங்கள் சென்னையில் சிறந்த முறையில் இயங்கி வருகிறது. நாம் இப்போது பார்த்தது அவற்றுள் வெறும் 5% அழகு நிலையங்கள் மட்டும் தான். சென்னைவாசிகளே, நீங்கள் எந்த அழகு நிலையத்திற்கு செல்வீர்கள்? அவை பெண்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக இயங்குகிறதா? அவற்றின் சேவை எப்படி இருந்தது? என்பதனை கமெண்டில் கூறுங்கள். உங்களின் கருத்துக்கள் சிறந்த முறையில் இருக்கும் பட்சத்தில் ஆர்டிக்களாக வெளிவர வாய்ப்புள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.
மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.