தேவையானவை:
பூண்டுப் பற்கள் - 5 முதல் 6 வரை
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 1
பச்சை கொத்துமல்லி இலை - சிறிது
புதினா - சிறிது
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்றவாறு
செய்முறை:
ஒருகம்பியில் (வடை கம்பி அல்லது கூரான ஏதாவது கம்பி) பூண்டு பற்களை வரிசையாகக் குத்தி (தோல் நீக்கத் தேவையில்லை), அடுப்பு தீயில் காட்டி நன்றாக சுட்டெடுக்கவும். சற்று ஆறியவுடன், தோலை நீக்கி விட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாகக் கீறிக் கொள்ளவும். இஞ்சி, கொத்துமல்லி, புதினா ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு சுத்தமான மெல்லிய துணியில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, புதினா ஆகியவற்றை வைத்து, ஒரு சிறு மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு அதில் வெங்காயத்தைப் போட்டு சற்று வதக்கவும். பின்னர் சுட்ட பூண்டு, 2 அல்லது 3 கப் தண்ணீர் சேர்த்து, கட்டி வைத்துள்ள துணி முடிச்சை அதன் நடுவில் வைத்து, மூடி போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
பின்னர், துணி மூட்டையை வெளியே எடுத்து, சூப்பிலேயே பிழிந்து விடவும். அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து சூப்பில் ஊற்றி கொதிக்க விடவும். தேவையான அளவிற்கு சூப் திக்கானதும், இறக்கி வைத்து, எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். உப்பு, மிளகுத்தூள், சிறிது புதினா இலை ஆகியவற்றைத் தூவி பரிமாறவும்.
படம்: கூகுள்
#tamilinfographics #babynutrition
BabyChakra User
aarthysiva Mari Muthu Nafi Fazlu nandhini Rahman Siba latha ramamoorthy Parveen Begam Sheeba Vinothkanna
Recommended Articles
BabyChakra User
Try pandren