#tamilbabychakra
#bbccreatorclub
#raisingstars
சோயா கொழுக்கட்டை
தேவையானவை அரிசி மாவு - ஒரு கப், சோயா உருண்டைகள் 20-30, வெல்லம் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் ஸ்பூன், உப்பு, நெய் - தேவையான அளவு.
செய்முறை சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு, உடனே எடுத்து குளிர்ந்த தண்ணீரில் அலசி, பிழிந்து கொள்ளவும். அவற்றை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும். அரிசி மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, கொழுக்கட்டை மாவு பதத்துக்கு தயார் செய்யவும். கடாயில் நெய் விட்டு, லேசாக அரைபட்ட சோயாவை போட்டு வதக்கவும். கரைத்து வடிகட்டிய வெல்லக் கரைசலைச் சேர்த்துக் கலந்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து சுருள கிளறினால் பூரணம் தயார்!
மாவிலிருந்து கொழுக்கட்டை உருட்டி, அதன் நடுவில் சோயா பூரணத்தை வைத்து மூடி, ஆவியில் வேக வைத்து எடுத்தால், புரோட்டீன் ரிச் சோயா கொழுக்கட்டை தயார்.
Source விகடன்
Recommended Articles