#tamilbabychakra
#bbccreatorclub
#raisingstars
ரவா பொங்கல்
தேவையானவை வறுத்த ரவை - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது), மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், இஞ்சி - அரை டீஸ்பூன் (நறுக்கியது), முந்திரி - 10-12, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை பாசிப்பருப்பை நன்கு வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்தெடுக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து, இஞ்சித் துண்டுகளைச் சேர்த்து வதக்கி... தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும்... ரவை சேர்த்து, கட்டியில்லாமல் கிளறவும். முக்கால் பாகம் வெந்தவுடன், வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்கு கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து, நெய் சிறிது ஊற்றிக் கிளறி இறக்கினால்... சுவையான ரவா பொங்கல் தயார்.
Source விகடன்
Recommended Articles
BabyChakra User
Naanum seiven