BabyChakra User
My thought is last three month of during sex pregnancy spouse will get delivery easy
BabyChakra User
No prakash that's a wrong perspective ...Womens body undergoes lot of pressure last 3months she needs rest , no such things will make it easy ,its wrong
Recommended Articles

BabyChakra User
○அனைத்து காய் ,பழங்களும் தேவையான அளவில் சாப்பிடலாம். தேவையான அளவு நீர் ஆகரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
○உயர் அளவில் மெர்குரி நிறைந்த மீன்களை தவிகவும். ஆற்று மீன், சால்மன், நெத்திலி மீன் ஆகியவை சாப்பிடலாம். குறைந்த அளவு சாப்பிடுவதால் எந்த வித பாதிப்பும் உண்டாகாது.
○இடைவேளை விட்டு சிறுக சிறுக உணவு உன்ன வேண்டும்.
○மனதை ஸ்ட்ரெஸ் இன்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
○அதிகமாக பச்சை காய்கறிகள், பழங்கள் கீரைகள் சேர்க்கவும்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்.
○அதிக காரமான உணவுகள், எண்ணெய் பண்டங்கள் அதிகம் சாப்பிட வேண்டாம்.
○உணவுகள் அதிகம் சூடு இல்லாமல் சாப்பிடவும்.
○தினசரி சிறிது நேரம் மருத்துவரின் ஆலோசனையின் படி உடற்பயிற்ச்சி செய்யவும்.
○கர்ப்பத்தின் போது கால் குடைச்சல், குதிகால் வலி போன்றவை ஏற்படும். ஆகவே அப்போது அந்த வலியை சரிசெய்ய தினமும் ஒரு வாழைப்பழத்தை படுக்கும் முன் சாப்பிட வேண்டும். இதனால் அதில் உள்ள பொட்டாசியம் வலிகள் மற்றும் குடைச்சலை சரிசெய்யும்.(சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சாப்பிடலாம்).
○ பச்சை இலைக் காய்கறிகள், பீன்ஸ் மற்றும் சிட்ரஸ் பழங்களில் ஃபோலிக் ஆசிட் உள்ளது. இதை சாப்பிடுவது நல்லது.
○குறைந்தது 8 மணிநேர தூக்கம் அவசியமானது.
○கர்ப்பமாக இருக்கும் போது கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
○போதிய அளவு நீர்ச்சத்து உடலில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.
○கூடுமானவரையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளையே சாப்பிட வேண்டும்.
○வாந்தி வருவதைத் தவிர்க்க அடிக்கடி சிறிய இடைவெளிகளில் சாப்பிட வேண்டும்.
○சளி, காய்ச்சல் என ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
○அதிக வலியோ, லேசாக ரத்தக் கசிவு அல்லது ரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகவேண்டும்.
○நார்மல் டெலிவரி என்பது நீங்கள் எவ்வாறு மகப்பேறுகாலத்தில் முன்னேறுகிறீர்கள், மற்றும் உங்கள் ஆரோக்கியத்தையும் குழந்தை நலனையும் பொறுத்தது. எனவே ,இப்பொழுது பொசிடிவாக இருக்க வேண்டிய நேரம்.
Helpful (1)