28 Jan 2020 | 1 min Read
revauthi rajamani
Author | 44 Articles
சில பெண்கள் கருத்தரிப்பதற்கு முன்பே தங்கள் உடலை கர்ப்பத்திற்காக தயாராக்கத் தொடங்கினாலும், பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் தாய்மைப் பயணத்தைத் தொடங்கும்போது பெரும்பாலும் ஆரோக்கியத்தின் அடிப்படையில் தயாராக இல்லை. உங்கள் கர்ப்ப பரிசோதனைக் கருவியில் இரண்டு இளஞ்சிவப்பு கோடுகளைப் பார்த்ததும், உங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும். உங்கள் மருத்துவர் செய்யும் முதல் விஷயம், ஃபோலிக் அமிலம் நிறைந்த வைட்டமின் சப்லிமெண்ட் மூலம் உங்களைத் கர்ப கால பயணத்திற்கு தயாராக்குகிறார்.
ஃபோலிக் அமிலம் ஃபோலேட் எனப்படும் வைட்டமின் பி இன் ஒரு வடிவமாகும், இது கர்ப்பமாக இருக்கும் அல்லது கர்ப்பத்தைத் திட்டமிடும் பெண்களுக்கு ஒரு வலிமை நிரப்பியாக செயல்படுகிறது. கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலத்தின் தேவை மூன்று மடங்கு அதிகரிக்கிறது. மேலும் 25 முக்கிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட மதர்ஸ் ஹார்லிக்ஸ் போன்ற கூடுதல் சப்ளிமெண்ட் ஃபோலிக் அமிலத்தின் சிறந்த மூலமாகும். இது கர்ப்ப காலத்தில் இந்த ஊட்டச்சத்துக்கான உங்கள் அன்றாட தேவையை உறுதிசெய்யும்.
கர்ப்பம் மற்றும் ஃபோலிக் அமிலம்
ஃபோலிக் அமிலம் அல்லது ஃபோலேட் ‘கர்ப்ப காலத்தின் சூப்பர் ஹீரோ’ என்று குறிப்பிடப்படுகிறது. கருப்பையின் உள்ளே குழந்தையின் சரியான வளர்ச்சிக்காக கர்பம் தரிப்பதற்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட வேண்டிய மிக முக்கியமான வைட்டமின்களில் இதுவும் ஒன்றாகும். ஆய்வுகளின்படி, 1,000 குழந்தைகளில் ஒரு குழந்தை அனென்ஸ்பலி மற்றும் ஸ்பைனா பிஃபிடா போன்ற நரம்புக் குழாய் குறைபாடுகளுடன் (என்.டி.டி) பிறக்கிறது. எனவே, கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமில சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது என்.டி.டி அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது உங்கள் உடல் கூடுதலாக வேலை செய்கிறது. மேலும் ஆரோக்கியமான குழந்தையை உருவாக்க அதற்கு ஊட்டச்சத்து ஆதரவு தேவை. உங்கள் அன்றாட உணவில் நீங்கள் நிறைய ஊட்டச்சத்துக்களைச் சேர்க்க வேண்டும். ஃபோலிக் அமிலம் மிகவும் முக்கியமாகப் பரிந்துரைக்கப்படும் ஊடச்சத்துகளில் ஒன்று. ஃபோலிக் அமிலம் நீரில் கரையக்கூடியது மற்றும் உங்கள் சிறுநீர் வழியாகச் செல்லும்போது உங்கள் உடல் அதை நீண்ட நேரம் சேமிக்க முடியாது. எனவே, போலேட் குறைபாட்டைத் தவிர்க்க உங்கள் உணவில் போதுமான ஃபோலிக் அமிலத்தை சேர்த்துக்கொள்வது மிக அவசியம்.
ஃபோலிக் அமிலத்தை எப்போது எடுக்கத் தொடங்குவது?
கர்ப்ப காலத்தின் முதல் 3-4 வாரங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை. ஏனெனில் இந்த காலகட்டத்தில் பெரும்பாலான பிறப்பு குறைபாடுகள் ஏற்படுகின்றன. எனவே, குழந்தைக்கு ஆரோக்கியமான மூளை மற்றும் முதுகெலும்பு வளர்ச்சி இருப்பதை உறுதி செய்ய ஆரம்ப கட்டங்களில் உங்கள் உடலில் போதுமான ஃபோலேட் இருப்பது முக்கியம். அனைத்து பிரீனேட்டல் வைட்டமின்களும் ஒரே மாதிரியானவை அல்ல, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் அளவு வேறுபடலாம். ஃபோலிக் அமிலம் உட்கொள்வது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
நீங்கள் தாய்ப்பால் கொடுக்கிறீர்கள் என்றால், இந்த கூடுதல் ஃபோலிக் அமிலத்தை எடுத்துக்கொள்வது உங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியம் அளிக்கும். இங்கே ஒரு வித்தியாசமான உண்மை உங்களுக்காக: மனிதனால் உருவாக்கப்பட்ட வடிவம் கொண்ட போலேட் உண்மையில் இயற்கையான வடிவத்தை விட நம் உடல்களால் நன்றாக உறிஞ்சப்படுகிறது. ஆகவே, ஒரு பெண் நன்கு சீரான உணவை உட்கொண்டாலும், பிறப்புக் குறைபாடுகளைத் தடுக்க அவளுக்குத் தேவையான கூடுதல் ஃபோலிக் அமிலம் கிடைக்காமல் போகலாம். எனவேதான் மதர்ஸ் ஹார்லிக்ஸ் போன்ற ஊட்டச்சத்து மிக்க சுப்ளிமென்டுகள் பரிந்துரைக்கப்படுகிறது.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.