வேலைக்குச் செல்லும் பெண்களின் ஆரோக்கிய பராமரிப்பு!

cover-image
வேலைக்குச் செல்லும் பெண்களின் ஆரோக்கிய பராமரிப்பு!

இன்றைய நவீன உலகில் 75% பெண்கள் வேலைக்குச் செல்பவர்களாகவே இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் பல பணிகளை (multi-tasking) செய்ய வேண்டிய சூழ்நிலையை சமாளிக்கிறார்கள். அவர்களின் தினசரி வாழ்வில் கால நிர்வாகம் (time management) என்பது மிக மிக முக்கியமானது. அலுவலக பொறுப்புடன் குடும்பத்திற்கு நிதி ஈட்டுபவராகவும், குடும்பத்தின் பட்ஜெட், பிள்ளைகள், அன்றைக்கான உணவு, வீட்டிற்கான அன்றாட தேவைகள், என பலவற்றை ஒரே நேரத்தில் கையாளுகின்றனர். அவர்களின் மிகப் பெரிய கவலை தன்னைத்தானே பேணுவதற்கு நேரம் இருப்பதில்லை.

  

வேலைக்குச் செல்லும் பெண்கள் நேரமின்மை காரணமாக சரும பராமரிப்பில் போதிய கவனம் செலுத்துவதில்லை. பணியில் எதிர்கொள்ளும் நெருக்கடி, அதனால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவைகளும் சருமத்தை பாதிக்கும். மேலும் சுற்றுச்சூழல் மாசு போன்ற வெளிப்புற காரணிகளும்  அவர்களுக்கு சரும பாதிப்பை அதிகப்படுத்தும்.

 

சரும பராமரிப்பு:

அலுவலக வேலை மட்டுமின்றி வீட்டு வேலைகளும் நெருக்கடி தரும்போது பெண்களுக்கு சரும பராமரிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் வேலைக்கு செல்லும் பெண்கள் சருமத்தை பராமரிப்பதற்கான வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.

ஆதாரம்: ZETAJJ

வேலைக்கு செல்லும் பெண்கள் தினமும் இரண்டு முறை முகம் கழுவ வேண்டும். அது சருமத்தில் உள்ள அசுத்தங்களை அகற்ற உதவும். அத்துடன் சருமம் தெளிவாகவும், பளபளப்பாகவும் இருக்க வழிவகை செய்யும்.

 

வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப நீண்ட தூரம் பயணிக்கும் பெண்கள், பணி நிமித்தமாக தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பெண்கள் போன்றவர்கள் சரும பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாசுபட்ட காற்று, புழுதி, வியர்வை காரணமாக சருமத்தில் அழுக்கு படிந்திருக்கும். இறந்த செல்களும் நீங்காமல் சருமத்தில் குடிகொண்டிருக்கும். அவற்றை நீக்குவதற்கு அதற்குரிய பேஸ் வாஷ் (face wash) வகைகளை சருமத்தில் தேய்த்து கழுவுவது நல்லது. அதன் மூலம் அழுக்கு, அசுத்தங்கள் நீக்கப்பட்டு சருமம் பளிச்சென்று ஒளிரும்.

 

சரியான மாய்ஸ்சரைசரை (moisturizer) தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது மிருதுவான, ஆரோக்கியமான சரும பராமரிப்புக்கு உதவும். காலையிலும், இரவிலும் மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது நல்லது. அதன் மூலம் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கும். மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். சருமத்திற்கு பொருத்தமான மாஸ்சரைசரை தேர்ந்தெடுப்பது கவனிக்கத் தகுந்தது.

ஆதாரம்: nerdsleep

வேலைக்கு செல்லும் பெண்கள் இரவில் படுக்க செல்லும்போது சருமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் மேக்கப் போட்டிருந்தால் அதனை அகற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் அது சருமத்திற்கு சோர்வையும், மந்த உணர்வையும் ஏற்படுத்திவிடும். சரும பராமரிப்புக்கு இரவு நேர கிரீம்களும் (night cream) முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனை தொடர்ந்து பயன்படுத்தும்போது சேதமடைந்த செல்கள் சீராகிவிடும். சரும செல்கள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். காலையில் சருமம் பொலிவுடன் காட்சி தரும். அழகான சருமம் பெண்களுக்கு தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதாக பல ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.

   

எளிய நடை பயிற்சி:

ஆதாரம்: ihasovan

அலுவலக நேரம் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து இல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எளிய சிறு நடை பயிற்சி செய்யலாம். இது மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்வை அளிக்கும். பெரும்பாலான நேரம் கணினியின் முன் அமர்ந்து கண் கொட்டாமல் வேலை செய்வதால் கண்கள் உலர ஆரம்பித்துவிடும், இதனால் அடிக்கடி கண்களை சிமிட்டும் பழக்கத்தை நியாபகம் கொள்ள வேண்டும். குளிர்ந்த நீரினால் கழுவவும் செய்யலாம்.

 

உடல்நலம்:

ஆதாரம்: wonderopolis

தீவிர உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை எடுக்கும் பழக்கம் பெண்களிடம் உள்ளது. எனவே சில எளிய சுகாதார நடவடிக்கைகளையும் கைவசம் வைத்திருப்பது நல்லது. உதாரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், அடிக்கடி சளி, இருமல் போன்றவற்றால் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் கைப்பையில் தரமான ஹாண்ட் வாஷ் மற்றும் ஹாண்ட் சானிடைசரை வைத்திருப்பது நல்லது. இது அவர்களின் கைகளின் மூலம் இன்பெக்ஷன் ஏற்படாமல் தடுக்க உதவும். உலர் உணவுகளை (dry snacks) உண்ட பிறகு சானிடைசரை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.

 

மனநலம் பராமரிப்பு:


ஆதாரம்: walesonline

வேலை அழுத்தம், குடும்ப பொறுப்பு ஆகியவற்றின் காரணமாக சில பெண்கள் அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். அதனை தவிர்க்க 3 (அ) 6 மாதத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சுற்றுலா சென்று வரலாம். வார இறுதி நாட்களில் சினிமா, பீச், ஷாப்பிங் போன்றவற்றிக்கு செல்வதன் மூலம் மனதை லேசாக்கலாம். அடிக்கடி மனதுக்கு பிடித்த பாடல்களை ஓட விட்டு வீட்டு வேளைகளில் ஈடுபடலாம்.

பணிபுரியும் பெண்கள் தங்கள் உடல்/மன நலத்தில் கண்டிப்பாக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். “சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும்” என்பதுபோல, தன் நலனை பேணுவதன் மூலமே, குடும்பத்தை கவனிப்பதற்கான ஆற்றலை பெற முடியும்.

 

பேனர் படம்: economictimes

#momhealth
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!