• Home  /  
  • Learn  /  
  • தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தில் அற்புதங்கள் நிகழ்த்தக்கூடிய துணை உணவு
தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தில் அற்புதங்கள்  நிகழ்த்தக்கூடிய  துணை உணவு

தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தில் அற்புதங்கள் நிகழ்த்தக்கூடிய துணை உணவு

30 Jan 2020 | 1 min Read

P.Tamizh Muhil

Author | 8 Articles

நான் டாக்டர். அமிர்தா மாலிக், ஒரு மருத்துவ அதிகாரி. பெற்றோர் ஆகப் போகும் தம்பதியரை, அவர்கள்  வாழ்வில்  வரவேற்கவிருக்கும்  நற்செய்திக்காக  நான் வாழ்த்தும் போது, பொதுவாக, கலவையான  எதிர்வினைகளை  பெறுவேன். சில தம்பதியர்  மிக  உற்சாகமாக இருப்பார்கள். சிலரோ  இந்த செய்தியை அறிந்ததும் மகிழ்வர், ஆனால் கவலை கொள்வர். பொதுவாக, தாயின் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் குறித்து  கவலையும்  பதட்டமும்இன்னும், காரணமே  இல்லாமல்  பயமும்  கொள்கிறார்கள். நேர்மறையான  உத்தரவாதம் மற்றும்  சில  தேவையான  அறிவுரைகள்  அவர்களை  அமைதிப்படுத்துகின்றன.

 

அன்னையின் ஊட்டச்சத்தின் மீது கவனம் செலுத்த வேண்டுமென்பதே என் முதல் அறிவுரை ஆகும். கர்ப்பத்தினை  கண்டறியும்  கருவியில், இரண்டு  பிங்க்  நிற கோடுகளைக் கண்ட நொடி முதலே, நீங்கள் ஒரு தாயாக மாறிவிட்டீர்கள்நீங்கள் துடிக்கும்  இரண்டு  இதயங்களுடன், வீரியமும், வாழ்க்கையும் கொண்ட அபரிமிதமானவர்இரண்டாவதாக, நம்  சமூகத்தில், பொதுவாகச் சொல்லப்படுவதும், பரவலாக விரவிக் கிடப்பதுமான  தாய்சேய்,  “இருவருக்காக சாப்பிடுதல்”  என்ற கட்டுக்கதையை  உடைத்தெறிகிறேன்எதை, எந்த அளவு சாப்பிட  வேண்டும் என்பதை  தீர்மானிக்கக்  கூடிய  காரணிபெண்ணின் விருப்பமே ஆகும். கர்ப்ப கால உணவு  மிதமானதாகவும், சத்து  நிறைந்ததாகவும், எளிதில்  செரிமானம்  ஆகக்கூடியதாகவும், தாது, புரதம், வைட்டமின் நிரம்பியதாகவும்  இருக்க வேண்டும்.  கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து  தேவைகள் அதிகரிப்பது  உண்மை தான், ஆனால், என்ன தேவை, எவ்வளவு அதிகமாக தேவை என்பதை அறிய வேண்டும்.


இனப்பெருக்க வயதில், ஒரு கர்ப்பிணி அல்லாத பெண்ணுடன் ஒப்பிடுகையில், கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் புகட்டும் தாயின் அதிகரிக்கும் ஊட்டச்சத்து தேவைகளைக் குறித்து வழிகாட்டும் எளிய அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 


ஒரு கர்ப்பிணிப் பெண், தனது முதல் மும்மாத காலத்தில், தான் எப்போதும் உட்கொள்ளும் அளவிலான உணவையே எடுத்துக் கொள்ளலாம். ஆனால், கர்ப்பத்தின் பிற்பாதி காலத்தில், அவருக்கு, கர்ப்பமுறாத போது தேவைப்படும் ஆற்றலை விட, 300 கிலோ கலோரி அளவு ஆற்றல் அதிகமாக தேவைப்படுகிறது. இதுவே, பாலூட்டும் தாய்மார்களுக்கு, 400 கிலோ கலோரி ஆற்றல் அதிகமாக தேவைப்படுகிறது. முதல் மும்மாத காலத்தில், வைட்டமின் B, ஃபோலிக் அமிலம், கோலின் மற்றும் DHA ஆகியவை குழந்தையின் முளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது. இரண்டாம் மும்மாத காலத்தில் இருந்து புரதம், கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், அயோடின், வைட்டமின் A மற்றும் D இவற்றின் தேவையும் அதிகரிக்கிறது. ஏனெனில், இப்போது கருவின் வளர்ச்சி நிலையில், தசைகள், எலும்புகள், இவற்றின் உருவாக்கம் மற்றும் உறுப்புகளின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி ஆகிய செயல் முறைகள் ஆரம்பம் ஆகின்றன.

கர்ப்பத்தினால் உடலில் ஓர் எதிர்மறை இரும்பு சமநிலை ஏற்பட்டு, உடலில் இரும்புச் சத்தின் அளவு குறைகிறது. இதனை, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் மட்டுமே பெற்றுவிட முடியாது. இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் ஹீமோகுளோபின் அளவுகளை அதிகரிக்க துணை உணவு அவசியம். வைட்டமின் A மற்றும் D, இவற்றின் அதிக அளவு தேவைகளை, விலங்குகளைடம் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களின் வாயிலாகவே பெற இயலும். மற்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களினை பெற பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் கொட்டைகள், இவற்றின் உட்கொள்ளும் அளவினை அதிகரிக்க வேண்டும். உணவின் பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள், சமைப்பதால் அழிந்து விடுகின்றன, அல்லது, உடலால் கிரகிக்கும் நிலையில் இருப்பதில்லை. கால்சியத்தின் தேவை, கர்ப்ப காலத்தில் இரண்டு மடங்காகவும், தாய்ப்பால் காலத்தில் மூன்று மடங்காகவும் அதிகரிக்கிறது. கால்சியம் மற்றும் வைட்டமின் D யின் சிறந்த ஆதாரமாக விளங்குவது பசுவின் பால். நல்ல தரமான ஒரு லிட்டர் பசும்பாலில், ஒரு கிராம் கால்சியம் இருக்கிறது. பெரும்பாலான பெண்கள், பாலின் வாசனை மற்றும் சுவையை வெறுக்கிறார்கள், அல்லது, ஒட்டுமொத்தமாக பால் பொருட்களின் வாசனையே பிடிப்பதில்லை. வாந்தி மற்றும் குமட்டலுக்கு பயந்து, பெரும்பாலான பெண்கள், தங்களது கர்ப்பகால உண்வில், பால் சம்மந்தப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்க்கிறார்கள்.

 

இதுவே, கருவுற்ற தாய்மார்களுக்கு மதர்ஸ் ஹார்லிக்ஸை பரிந்துரை செய்ய என்னை வற்புறுத்துகிறது. ஒன்றரை தேக்கரண்டி மதர்ஸ் ஹார்லிக்ஸ், இருநூறு மில்லி லிட்டர் பாலின் சுவை மற்றும் மணத்தினை மாற்றுவதோடு, பாலில் ஏற்கனவே இருக்கும், தோராயமாக, எட்டு கிராம் கால்சியத்துடன், கூடுதலாக ஐந்து கிராம் கால்சியத்தை சேர்த்து,  அதை மேலும் பலப்படுத்துகிறது. கால்சியம் தவிர, நூறு சதவிகித அமினோ அமில மதிப்பு கொண்ட உயர் தரமான, புரதங்கள் மற்றும் கரு வளர்ச்சிக்கும், வெற்றிகரமான தாய்ப்பாலூட்டலுக்கும் தேவையான, இதர 25 அத்தியாவசிய ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது. இதை ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப, காலை அல்லது மாலை நேரத்தில் சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம்.


கர்ப்ப காலத்தில், எடை அதிகரிப்பு கண்காணிக்கப்பட வேண்டும். சாதாரண உடற் திணிவுச் சுட்டு கொண்ட ஆரோக்கியமான பெண், தன் முழு கர்ப்ப காலத்தில், பதினோறு கிலோ வரை எடை அதிகரிக்க வேண்டும். 26 முதல் 29 வரை உடற் திணிவுச் சுற்று கொண்ட மிகை எடை பெண்கள் ஏழு கிலோ வரை எடை அதிகரிக்கலாம். 29ற்கும் அதிகமான உடற் திணிவுச் சுற்று கொண்ட பெண்கள், கூடிய மட்டும், குறைவான எடை ஏற்றத்திற்கு தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.  


ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு, தினசரி, பல சிறு சிறு அளவுகளில், ஊட்டச்சத்து நிறைந்த உணவு, போதுமான ஓய்வு, மிதமான செயல்பாடு ஆகியவை பரிந்துரைக்கப்படுகிறது. கடைசியாக, கர்ப்பிணி மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு, மாத்திரைகளை துணை உணவாக கொடுப்பதைக் காட்டிலும், மதர்ஸ் ஹார்லிக்ஸை பரிந்துரை செய்கிறேன்.

மூலம்: டி.சி. தத்தாவின் மகப்பேறியல் பாடநூல்

மறுப்பு: இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள், பதிவுகள் மற்றும் பரிந்துரைகள் ஆசிரியரின் கருத்துக்கள் மட்டுமே மற்றும் கல்வி உதவியாக கருதப்படுகின்றன

#momnutrition

A

gallery
send-btn

Related Topics for you