5 Feb 2020 | 1 min Read
revauthi rajamani
Author | 44 Articles
கர்ப்பம் உங்களை ஒரு ஊட்டச்சத்து மிகுந்த வழக்கத்திற்கு மாறக் கட்டாயப்படுத்தியதா?
நாங்கள் இந்த கேள்வியை தினமும் எங்கள் மேடையில் சேரும் ஆயிரக்கணக்கான கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களிடம் கேட்டோம். அவர்களில் 91% பேர் “ஆம்” என்று கூறினார். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு ஒரு தாய் பின்பற்ற வேண்டிய ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறையை உணர இந்த எண்ணிக்கை மிக முக்கியமானதாக அமைகிறது.
கர்பம் தரிக்கும் வயதினரில் பெரும்பான்மையான பெண்கள் உண்மையில் கர்ப்பத்திற்கு ஊட்டச்சத்து ரீதியாக தயாராக இல்லை என்பதே உண்மை. அவர்களில் ஏறக்குறைய 30% பேர் கர்ப்பத்திற்கு முன்னர் தசை சோர்வு பற்றிய புகார்களைக் கூறுகின்றனர். மேலும் 35% க்கும் அதிகமானவர்கள் எடை குறைவாக உள்ளனர். ஊட்டச்சத்து என்று வரும்போது அவை குறைபாடு அல்லது போதுமானதாக இல்லை என்பது தெரிய வருக்கிறது. கர்ப்ப காலத்தில், ஊட்டச்சத்து தேவைகள் பல மடங்குகள் அதிகரிக்கும். தோராயமாக கர்ப்ப காலத்தில் 34% அம்மாக்கள் ஊட்டச்சத்து தேவைகளை அறிந்திருக்கிறார்கள், மேலும் 40% சரியான ஊட்டச்சத்து முறையை தெரிந்ததுக்கொள்ள தங்கள் மருத்துவரை அணுகுகிறார்கள்.
கர்ப்ப காலம் மற்றும் பாலூட்டலின் போது, குழந்தை அம்மாவிடமிருந்து வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் எடுத்துக்கொள்கிறது. இதன் காரணமாக ஆரோக்கியமாக இருக்க தேவைபடும் ஊட்டச்சத்துக்கள் தாய்க்குக் குறைக்கிறது. கர்ப்பத்திற்கு முன்னர் சத்தான சமச்சீர் உணவின் பற்றாக்குறை ஏற்படுவதால், தேவைக்கு போதுமான ஊட்டச்சத்து நிரப்பியை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் . சராசரியாக 66% கர்ப்பிணிப் பெண்களுக்கு தங்கள் அன்றாட உணவில் கூடுதல் சுப்ளிமெண்டுகள் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் 33% தாய்மார்களுக்கு சிறந்த சப்ளிமெண்டாக மதர்ஸ் ஹார்லிக்ஸ் பரிந்துரைக்கப்படுகின்றது.
40% அம்மாக்களுக்கு பால் புரதச்சத்து நிறைந்த மூலமாகும் என்பது தெரியும். கர்ப்ப ரீதியாக ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றங்களாலும் அதன் விளைவாக ஏற்படும் குமட்டலாலும், பாலை ஓதிக்கிவிடுகின்றார்கள் பலர். பால் என்பது ஊட்டச்சத்துக்கான ஒரு ஆதாரமாகும், இது பல அம்மாக்கள் கர்ப்ப காலத்தில் உட்கொள்ள முடியாமல் போகிறது. மதர்ஸ் ஹார்லிக்ஸில் வெண்ணிலா அல்லது சாக்லேட்டுடன் கலந்த பால் சுவை இந்த கவலையை போக்கி ஊட்டச்சத்தின் வேலையைச் செய்ய உதவுகிறது.
மதர்ஸ் ஹார்லிக்ஸ் என்பது டிஹெச்ஏ மற்றும் சோலின் ஆகியவற்றின் வளமான மூலமாகும், மேலும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கான முக்கிய ஊட்டச்சத்துக்கள் இவை என்பதை நம் அம்மாக்களில் 41% பேர் அறிந்திருக்கிறார்கள். வைட்டமின் பி 6, பி 12, இரும்பு, ஜிங்க், சோடியம், ஃபோலிக் அமிலம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உட்பட, மதர்ஸ் ஹார்லிக்ஸ் 25 க்கும் மேற்பட்ட முக்கிய ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்டுள்ளது. இது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் ஒரு தாயின் ஊட்டச்சத்து தேவைக்கும் அவசியமானது. 100% அமினோ அமில மதிப்பெண்ணுடன், இது போன்ற ஒரு துணை ஒரு தாய் மற்றும் அவரது குழந்தைக்கு அதிசயங்களைச் செய்யலாம்.
கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஊட்டச்சத்து அளிப்பது மட்டுமல்லாமல், அவரது உடல் தகுதி மற்றும் வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வும் பெறுகிறார்கள். 60% க்கும் மேற்பட்ட அம்மாக்கள் தவறாமல் யோகா செய்யத் தொடங்குகிறார்கள். 40% ஆரோக்கியமான உணவுத் திட்டத்தைப் பின்பற்றுகிறார்கள்.
எங்கள் கணக்கெடுப்பில் இருந்து சரியாகக் காணப்பட்டபடி, கர்ப்ப காலம் சீராக செல்ல ஆரோக்கியமான உணவு, ஒழுக்கமான வாழ்க்கை முறை மிக அவசியம் என்று புரிகிறது. மதர்ஸ் ஹார்லிக்ஸ் போன்ற சப்ளிமெண்ட்ஸ் கூடுதலாக தேவைப்படும் ஊட்டச்சத்தின் இடைவெளிகளை நிரப்ப உதவுகிறது. மேலும் தாய்மார்களை தங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலாக உள்ள “தாய்மை” என்னும் கட்டத்திற்கு தயாராக்குகிறது.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.