கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

cover-image
கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

கர்ப்ப காலத்தில் சில உணவுகளைக் கட்டாயம் பெண்கள் தவிர்க்க வேண்டும்.கர்ப்பமாக இருக்கிறார்கள் என்பதற்காக பலர் பெண்களுக்கு அதிக உணவுகளை சாப்பிட கொடுப்பது வழக்கம். அது தவறு. பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடலின் எடை அதிகரிப்பதை கவனமாக கண்காணிக்க வேண்டும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அதிகரிக்க வேண்டிய எடையை விட கூடுதலாகவோ (அ) மிகவும் குறைவாகவோ எடை இருக்க கூடாது.

 

கர்ப்பிணிகள் உண்ணும் சில உணவுகளில் கருச்சிதைவையோ (அ) கரு வளர்ச்சியில் பாதிப்பையோ ஏற்படுத்தும். எனவே ஒவ்வொரு முறையும் கர்ப்பிணி பெண்கள், அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

 

கர்ப்பிணிகள் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. அரை வயிறுதான் சாப்பிட வேண்டும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இது முற்றிலும் தவறு. அப்படியாக அரை வயிற்றுக்கு சாப்பிட்டால், பிரசவத்தின்போது கருச்சிதைவோ, குறைப்பிரசவமோ நிகழும்.அதேவேளையில் `இரண்டு பேருக்கு சாப்பிட வேண்டுமே?’ என்று ஊட்டமாக சாப்பிட்டாலும், சங்கடம்தான். அதிலும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் அதிகபட்சம் பத்து முதல் பன்னிரண்டு கிலோ எடை  வரையில் கூடுதலாக இருக்கலாம். அதற்குமேல் அதிகரிக்க கூடாது.

 

கர்ப்பிணி தவிர்க்க வேண்டிய உணவுகள்:

  1. கர்ப்பிணிகள் அதிகம் டீ, காபி அருந்தக்கூடாது. கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் மாறக்கூடும். இதனால் அவர்களின் முகம், கை, கால்களில் வீக்கம் ஏற்படும். 

 

  1. பொதுவாக எண்ணெய், அதிக மசாலா-காரம் செறிந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது செரிமானத்தை மந்தமாக்கும். மேலும் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு சில மசாலா வாசனைகள் ஒத்துக்கொள்வதில்லை, வாந்தியை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.  

ஆதாரம்: northernvirginiamag

  1. துரித உணவகங்களில் (fast food) தயாரிக்க‍ப்படும் உணவு வகைகளையும் பதப்படுத்த‍ப்பட்டு டப்பாக்களில் அடைத்து வைக்க‍ப்பட்டுள்ள‍ பால் பொருட்களை சாப்பிடக்கூடாது. குளிர் பானங்களை தவிர்ப்பது மிக அவசியம்.    

 

  1. ஆட்டுக்கறி, கோழிக்கறி மற்றும் இதர அசைவ உணவுகள், முட்டை & பால் பொருட்கள் ஆகிய உணவுகளை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். பாதி வேக்காட்டில் சாப்பிடக் கூடாது.

 

  1. பதப்படுத்த‍ப்பட்டு பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள் குடிக்க‍கூடாது. சோடாக்களை தவிர்ப்பதும் நல்லது. 

 

  1. உடலுக்கு குடைச்சல் தரும் வாய்வு உணவுபொருட்களான வாழைக்காய், உருளைக்கிழங்கு, இறால்மீன் போன்றவைகளை அறவே தவிருங்கள்.

 

  1. அதிக காரம் மற்றும் சோடியம் கொண்ட ஊறுகாய் போன்ற உணவுகள், ஜாம், ஜெல்லி,அப்பளம் போன்ற உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.

 

கர்ப்பகாலத்தில் அதிகரிக்கப்படும் எடையானது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். எனவே ஊட்டச்சத்து மிகுந்த உணவு அட்டவணையை உங்களுக்காக  நீங்களே பிரத்யேகமாக தயாரிப்பது நல்லது. அவற்றை உங்கள் கர்ப்ப பயணத்தில் பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம்.  

பரிந்துரைத்தவர்: naijagists

#pregnancymustknow #pregnancymustknow
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!