கர்ப்பமுற்ற மற்றும் தாய்ப்பால் புகட்டும் தாய்மார்களுக்கான பலம் நிறைந்த துணை உணவு

cover-image
கர்ப்பமுற்ற மற்றும் தாய்ப்பால் புகட்டும் தாய்மார்களுக்கான பலம் நிறைந்த துணை உணவு

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு வயதிலும், சரியான ஊட்டச்சத்துகளை உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியம். குறிப்பாக, கர்ப்ப காலத்தில், ஊட்டச்சத்து பெரும் பங்கு வகிக்கிறது. ஏனெனில், கர்ப்ப காலத்தில், ஊட்டச்சத்து தேவைகள் மும்மடங்கு அதிகரிக்கின்றது. முதல் முறை அன்னையான என்னை இது மிகவும் பாதித்தது. ஒவ்வொரு தாயாகப் போகும் பெண்ணைப் போல, நானும் எனது குழந்தைக்கு மிகவும் சிறந்ததையே வழங்க வேண்டுமென்பதில் கவனமாக இருந்தேன். ஆனால், வளரும் கரு மற்றும் கர்ப்பகால தேவைகட்கு ஈடுகட்டும் வகையில், என் உடலுக்கும் தொடர் ஊட்டச்சத்து தேவை என்பது எனக்கு தோன்றவில்லை.

 

எனது மருத்துவருடனான ஆரம்ப கால கலந்துரையாடலில், நமது உடல் அனைத்து வகையான ஊட்டச்சத்துகளையும் தேவையான அளவில் உருவாக்குவதில்லை என்று விளக்கினார். சிலஊட்டச்சத்துக்களை, நாம் உணவு மற்றும் துணை உணவுகளின் வாயிலாக எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில், இந்த ஊட்டச்சத்துக்களுக்கான தேவை அதிகரிப்பதால், எனது மருத்துவர் உடனடியாக, ஊட்டச்சத்து குறைபாடுகளை ஈடு செய்ய, கூடுதல் உணவினை பரிந்துரை செய்தார். அவரது உடனடியான பரிந்துரை மதர்ஸ்  ஹார்லிக்ஸ் ஆகும்.

 

முதல் மும்மாத காலத்தில், எனக்கு அதிகமான வாந்தி மற்றும் குமட்டல் உணர்வு இருந்தது நினைவிருக்கிறது. கடைசியாக, நான் எடுத்துக் கொள்ள முடிந்தது பால் மட்டுமே. மதர்ஸ் ஹார்லிக்ஸ்’ன் சுவையுடன், பால் குடிப்பது பெரும் சவாலாக இருக்கவில்லை.மதர்ஸ் ஹார்லிக்ஸ்’ன் பலன்களால் நான் மிகவும் பயனடந்தேன். இதை என் நண்பர்களுக்கு பரிந்துரை செய்கையில், இதே நம்பிக்கையை என்னால் அவர்களுக்கும் வழங்க இயலும்.

 

கர்ப்ப காலத்தில் மதர்ஸ் ஹார்லிக்ஸ்

 

மதர்ஸ் ஹார்லிக்ஸ் கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் நுண்ணூட்டச் சத்துக்களின் தேவையை ஈடுகட்ட சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் கருவின் வளர்ச்சி மற்றும் குழந்தையின் பிறப்பு எடையை அதிகரிக்கும் நுண்ணூட்டச் சத்துக்களான இரும்புச் சத்து, அயோடின், ஃபோலிக் அமிலம், துத்தநாகம், மக்னீசியம், வைட்டமின் A, B6, B12, D ஆகியவை இருக்கின்றன.கர்ப்ப காலத்தில், ஒவ்வொரு நாளும் மாதமும், முன்னேற முன்னேற, என்னால், என் உடலிலும், கருவில் வளரும் குழந்தையிடமும் ஏற்படும் மாற்றங்களை உணர முடிந்தது. பல ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் என் குழந்தையிடம் ஏற்படுகிறது, இந்த மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க, நாட்கள் அதிகரிக்க, அதிகரிக்க, என் குழந்தைக்கு அதிக அளவிலான கலோரிகள் தேவைப்படும். கர்ப்ப காலத்தில், கருவில் இருக்கும் குழந்தைகள், தங்களது அனைத்து தேவைகளுக்கான ஊட்டச்சத்துகளையும், தங்களது தாயின் ஊட்டச்சத்திலிருந்தே எடுத்துக் கொள்கின்றன. எனவே, ஒரு தாய், நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவினை உட்கொள்ளாவிட்டால், அவருக்கு வெகு விரைவிலேயே ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படும். மதர்ஸ் ஹார்லிக்ஸ்’ல் ஒவ்வொரு 100 கிராம் அளவுக்கும், 352 கிலோ கலோரி அளவு ஆற்றல் கிடைக்கிறது. இது, அதிகரிக்கும் எனது ஆற்றல் தேவைகளை ஈடுகட்ட உதவிகரமாக இருக்கும். 

 

ஒரு கோப்பை பாலில் இருக்கும் பல்வேறு பலன்களுடன், நானும் எனது குழந்தையும், எனது சரிவிகித உணவோடு, சிறந்த ஊட்டச்சத்துக்களை பெறுகிறோம் என்பது எனக்கு தெரியும். எனது குழந்தையும் நன்கு உடல் எடை அதிகரித்து, பிறக்கையில் நல்ல ஆரோக்கியமான குழந்தையாக இருந்தது.

பிரசவத்திற்கு பின் மதர்ஸ் ஹார்லிக்ஸ்

 

கர்ப்ப காலத்தில் மட்டுமல்லாது, பிரசவத்திற்கு பின்னான காலத்திலும், ஒரு தாய் தான் உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்களின் மீது கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, குழந்தை பிறந்த முதல் ஆறு மாத காலத்திற்கு, தாயின் ஊட்டச்சத்து மீது கவனம் கொள்ளுதல் வேண்டும். ஏனெனில், குழந்தை தனது ஊட்டச்சத்து தேவைகளுக்கு, முழுமையாக தாயையே நம்பி இருக்கிறது. தாய்ப்பால் புகட்டும் காலத்தில், ஊட்டச்சத்திற்கான தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது. இவை ஈடுகட்டப்படாத பட்சத்தில், தாய், சேய் இருவரும் வெகுவாக பாதிக்கப் படுகிறார்கள். நான், எனது குழந்தைக்கு பால் புகட்டிய ஓராண்டு காலத்திற்கும், மதர்ஸ் ஹார்லிக்ஸ் குடிப்பதை தொடர்ந்தேன். பாலூட்டும் தாய்மார்களுக்கும், அதில் அதிக பலன்கள் உண்டு என்பதை அறிவேன். வெதுவெதுப்பான பாலில், இரண்டு மேசைக்கரண்டி அளவு மதர்ஸ் ஹார்லிக்ஸ் கலந்து, காலை உணவுடனோ அல்லது இரவு உணவுடனோ எடுத்துக் கொள்வேன். அது எனது ஆற்றலுக்கு தேவையான துணை உணவு.கர்ப்பம் மற்றும் அன்னையென்ற வாழ்வுடன், ஒரு புது ஜீவனின் வாழ்விற்கான பொறுப்பும் நமதாகிறது. “ உங்களது நலனை உதாசீனப்படுத்துவதன் மூலம், உங்கள் குழந்தையின் நலனை உதாசீனப் படுத்தாதீர்கள்” என்ற கருத்தினை நான் நம்புகிறேன். ஆனால், உண்மை என்னவெனில், ஒரு தாய் ஆரோக்கியமாக இருந்தால் தான் சேயும் ஆரோக்கியமாக இருக்கும். நீங்களையும், உங்களது குழந்தையையும், நல்ல ஊட்டச்சத்துக்கள் உட்கொள்வதே, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான வழி ஆகும்.  எனவே, தாயாகப் போகிறவர்களே, இன்றே மதர்ஸ் ஹார்லிக்ஸ் உட்கொண்டு, உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் கிடைக்க இருக்கும் நீண்ட கால பலன்களை அனுபவிக்க பரிந்துரை செய்கிறேன்.ஏனெனில், உண்மையிலேயே, தாயாகப் போகிற, சக்தி வாய்ந்த பெண்களுக்கு, சக்தி வழங்கக் கூடிய துணை உணவு மதர்ஸ் ஹார்லிக்ஸ்.

மறுப்பு: இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள், பதிவுகள் மற்றும் பரிந்துரைகள் ஆசிரியரின் கருத்துக்கள் மட்டுமே மற்றும் கல்வி உதவியாக கருதப்படுகின்றன

 

#breastfeeding #momnutrition #babynutrition
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!