மேற்கத்திய உணவுகள் எவ்வளவு ஆரோக்கியம்?

cover-image
மேற்கத்திய உணவுகள் எவ்வளவு ஆரோக்கியம்?

நூற்றாண்டுகளின் மாற்றம் உணவுப் பழக்கத்தையும் மாற்றிவிட்டது. இந்திய உணவுகளைக் காட்டிலும் வெளிநாட்டு உணவு வகைகளை ருசிப்பதில் ஆர்வம் அதிகரித்து விட்டது. அப்படி உலக அளவில் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுப் பட்டியலை மெச்சிகன் பல்கலைக்கழகம்  வெளியிடப்பட்டுள்ளது. அதோடு யாலே ஃபுட் அடிக்‌ஷன் ஸ்கேல் என்கிற நிறுவனத்தோடு இணைந்து அதில் இருக்கும் ஆபத்துகளையும் குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம் : delish

பீட்ஸா 

சீஸும், ஸ்பைஸும் நிறைந்த இந்த இத்தாலிய உணவுதான் உலக அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கோதுமை, மைதா மாவில் செய்யப்பட்ட ரொட்டிகள்தான் இன்று பலரின் அடிக்‌ஷன் உணவாக இருக்கிறது.

ஆதாரம் : eatthis

சாக்லெட்  

கோக்கோ விதைகளில் தயாரிக்கப்படும் இந்த சுவை மிகுந்த சாக்லெட் பலரது விருப்பப்பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த இந்த சாக்லெட்டை அதிகம் உட்கொண்டால் முகப்பருக்கள், இரத்த அழுத்தம் போன்றவற்றை உண்டாக்கும்.

ஆதாரம் : yummy

சிப்ஸ்  

உருளைக் கிழங்கை ஸ்லைஸுகளாக நறுக்கி அதை எண்ணெயில் பொறித்து எடுத்து மேலே உப்பும், மிளகாய் தூளும் தூவி சாப்பிடும் சுவை நாவில் எச்சில் ஊற வைக்கும். ஆனால் ஹெல்த் அடிப்படையில் பார்த்தால் எண்ணெய்யை உறிஞ்சிய இந்த திண்பண்டம் கொழுப்பு, இரத்த அழுத்தம் போன்றவற்றை உண்டாக்கும்.

ஆதாரம் : bakeplaysmile

குக்கீஸ்  

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, வெண்ணெய் , மைதா என எல்லாமே இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள்தான் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் அதன் சுவை தவிர்க்க முடியாததாக இருப்பதாலேயே விருப்பப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

ஆதாரம் : vanakkamamerica

ஐஸ்கிரீம் 

பதப்படுத்தப்பட்ட, உறைய வைக்கப்பட்ட இந்த ஐஸ் கிரீம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவு. ஆனால் அதிக சர்க்கரை நிறைந்த இந்த உணவும் உடல் பருமனை அதிகரிக்கும்.

ஆதாரம் : nypost

ஃபிரெஞ் ஃபிரைஸ்

இதுவும் உருளைக் கிழங்கை துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொறித்து சாப்பிடும் உணவு. சாட், ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் அதிகமாக விற்பனையாகும் இது அதிக கொழுப்பு நிறைந்தது. இதயத்திற்கு கோளாறு கொடுக்கக் கூடிய உணவு.

ஆதாரம் : checkers

சீஸ் பர்கர்

முற்றிலும் கலோரி நிறைந்த இந்த ஜங்க் ஃபுட்டும் பலரின் விருப்ப உணவு. கொழுப்பு, அதிக சோடியம் நிறைந்தது. இதை தொடர்ச்சியாக உண்பது உடல் நலனை பல வகைகளில் பாதிக்கும்.

ஆதாரம் : nypost

சோடா (குளிர் பானம்) 

சோடாவில் கலக்கப்படும் பாஸ்போரிக் ஆசிட் மற்றும் கார்போனிக் ஆசிட் உடலுக்கு நல்லதல்ல. குறிப்பாக இவை பற்களையே முதலில் தாக்கும். சர்க்கரை நிறைந்த இது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானது.

பரிந்துரைத்தவர்: foodnavigator

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

#momhealth #childhealth #familyhealth
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!