மகப்பேறுக்கு பிறகான பாரம்பரிய மருந்து!

cover-image
மகப்பேறுக்கு பிறகான பாரம்பரிய மருந்து!

 

தென்மாவட்டங்களில் மகப்பேறுக்கு பின்பு தாயின் உடல்நலம் பேண சில பாரம்பரிய சித்த மருந்துகளை வழங்கி வந்தனர். இப்போது பிரசவம் நவீன மருத்துவமனைகளில் நிகழ்வதால் பாரம்பரிய மருந்துகளைக் கொடுப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். மகப்பேறுக்கு பின்பு பாரம்பரிய மருந்துகளை உட்கொள்வதால் ஆரோக்கியம் அதிகரிக்கும். இதை நமது வருங்காலச் சந்ததிக்கு எடுத்துரைக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

 

மகப்பேறுக்கு பின்பு முதல்நாளில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சளை வெற்றிலையில் வைத்து மடக்கி சாப்பிட வேண்டும். இது கருப்பையில் தடைபட்ட அழுக்கை நீக்கவும், உடல் தளர்ச்சியைப் போக்கவும் உதவும். பின்பு 2 விரல் மஞ்சளை அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி கொடுக்கும்போது கருப்பையின் புண்கள் விரைவாக ஆறிவிடும்.

 

2-ம் நாளில் மஞ்சள், மிளகு, நறுக்குமூலம், சுக்கு, அக்கரகாரம், ஓமம் ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்து இளவறுப்பாக வறுத்து பிரசவ சூரணம் செய்து சாப்பிட வேண்டும்.

3-ம் நாளில் 2 விரல் மஞ்சளை அரைத்து உருண்டைகளாக்கி கொடுக்க வேண்டும்.

 

5-ம் நாளில் சிறிய துண்டுப் பெருங்காயத்தை எடுத்து நன்றாகப் பொரித்து பொடி  செய்து பனைவெல்லத்தில் பொதிந்து கொடுக்க வேண்டும். இம் மருந்து சூதக வாயுவை நீக்கும்.

 

9-ம் நாளில் 5 கிராம் கடுகை நன்கு பொரித்து பொடி செய்து பனைவெல்லத்தில் பொதிந்து சாப்பிட வேண்டும்.

 

11-ம் நாளில் 25 கிராம் சுக்கு, சிறிய துண்டு சாரணைவேர் ஆகியவற்றை நன்கு சூரணம் செய்து 50 கிராம் பனைவெல்லத்தை பாகாக்கி அதில் சூரணத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி நன்கு களி பதம் வரும் வரை கிண்டிக் கொடுக்க வேண்டும்.

 

13-ம் நாளில் 50 கிராம் உரித்த வெள்ளைப்பூண்டை பாலில் நன்கு வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும். பின்பு 100 கிராம் பனை வெல்லத்தைப் பாகாக்கி அரைத்த பூண்டு விழுதை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி களி பதத்தில் கிண்டி கொடுக்கவேண்டும். இந்த மருந்து தாய்ப்பாலை அதிகரிக்கும்.

ஆதாரம் : thehindu

15-ம் நாளில் 50 கிராம் ஓமத்தை நன்கு காயவைத்து மேல்தோல் நீக்கி சூரணம் செய்து 100 கிராம் பனைவெல்லத்தை பாகாக்கி, அதில் ஓமத்தைக் கலந்து நல்லெண்ணெய் ஊற்றி களி பதத்தில் கிண்டிக் கொடுக்க வேண்டும்.

 

பிரசவம் ஆன கர்ப்பிணிப் பெண்களில் பலரும் தாய்ப்பால் சுரக்கவில்லை எனக் கவலைப் படுகின்றனர். அவர்கள் கீழ்க்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் சீராக குழந்தைக்குப் பாலூட்டி மகிழலாம்.

Image result for garlic porridge

ஆதாரம் : thefoodieluv

  • வெள்ளைப் பூண்டை நெய்யில் வதக்கிச் சாதத்தில் போட்டுச் சாப்பிடலாம் (அ) தோசையில் வெங்காய ஊத்தப்பம் போல் பூண்டு ஊத்தப்பமாகச் சாப்பிட்டு வரலாம். நெய்யில் வதக்கிய பூண்டைப் பாலில் வேகவைத்தும் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வரலாம்.
  • முருங்கைக்கீரையை நன்கு ஆய்ந்து நறுக்கி நெய்யில் வதக்கிப்பொரியலாகவோ, சூப் போலவோ வைத்துச் சாப்பிட்டு வரலாம். பருப்புடன் சேர்த்துக் கூட்டாகவும் சாப்பிட்டு வரலாம்.
  • கேழ்வரகை ஊற வைத்து, முளை கட்டி, மாவாக்கி அந்த மாவுடன் எள்ளும், வெல்லமும் சேர்த்து உருண்டைகளாக்கிச் சாப்பிட்டு வரலாம்.
  • புழுங்கலரிசி (அ) சிவப்பரிசியை வறுத்துக்கொண்டு அத்துடன் வெந்தயமும் சேர்த்துக் கஞ்சியாக்கிச் சாப்பிட்டு வரலாம். (இதைப்பிரசவத்திற்கு முன்னாலேயே கர்ப்ப காலத்திலேயே ஆரம்பிக்கலாம்.)
  • சுரைக்காயுடன், பாசிப்பருப்பு சேர்த்து, நெய்யில் கடுகு, சீரகம் தாளித்துப் பொரியல் செய்து சாப்பிடலாம்.
  • முற்றிய பப்பாளிக்காய்களையும் பருப்பு சேர்த்துக் கூட்டாகவோ, சாலடாகவோ, பொரியலாகவோ சாப்பிடலாம்.
  • பூண்டு நிறையப் போட்டு ரசம் வைத்துச் சாப்பிடலாம்.
  • வெங்காயத் தாள், பூண்டுதாள் நறுக்கி வெங்காயம், தக்காளியுடன் தாளிதம் செய்து வதக்கிச் சாதத்தில் போட்டுச் சாப்பிடலாம்.
  • சீரகம் பொடிசெய்து கொண்டு அத்துடன் சம அளவு வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம்.

 

மேற்கூறிய எளிய வீட்டுக்குறிப்புகளை கடைபிடிப்பதன் மூலம்  மகப்பேறுக்கு பிறகான தாய், சேய் நலத்தை சீராக அமைக்கலாம். டெலிவரிக்கு பிறகு உண்ணும் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும், தாயின் மூலமே சேய்க்கு உணவு செல்வதால் ஆரோக்கியமான உணவு கட்டாயமாக்க வேண்டும். 

 

பரிந்துரைத்தவர்: pagetamil, pinimg

ஆதாரம்: மாலைமலர்
#momhealth
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!