14 Feb 2020 | 1 min Read
Komal
Author | 138 Articles
பொதுவாக பெண்களுக்கு இரத்த சோகை (ஹீமோகுளோபின் அளவு குறைந்து காணப்படுதல்) ஏற்படுவது இயல்பே. இரத்த சோகை இருக்கும் பெண்களுக்கு உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் சிவப்பு இரத்த அணுக்கள் மூலம் தசைகளுக்கு போதுமான அளவு கிடைக்காமல் போகின்றது. சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடலில் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அதிகம் இரத்தம் உற்பத்தி ஆகும். இப்படி இருக்கும் போது கர்ப்பிணிப் பெண்கள் போதுமான இரும்புச் சத்து நிறைந்த உணவை உண்ணாமல் இருந்தால், உடலுக்குத் தேவையான போஷாக்கு கிடைக்காமல் போகலாம். இதனால் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியும் குறையத் தொடங்கலாம்.
ஹீமோகுளோபின் தேவையான அளவிலிருந்து சற்று குறைந்து இருந்தால், அதில் பெரிதாக எந்த உபாதைகளும் உடலுக்கு ஏற்படாது. எனினும், கர்ப்பிணிப் பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் மிகப் பெரிய வகையில் ஹீமோகுளோபின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படக் கூடும். இந்த வகையில், அதிக அளவு உடலில் இரும்புச் சத்து குறைந்து அல்லது உயிர்ச்சத்து அளவு குறைந்தால், இரத்த சோகை அதிக அளவு ஏற்படக் கூடும்.
பெண்களின் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், போதுமான சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்வதோடு, உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். உங்கள் உணவில் அனைத்து சத்துக்களும் உள்ளதா என்று பார்க்க வேண்டும். நீங்கள் எப்படி ஹீமோகுளோபின் அளவை அதிகரித்துக் கொள்வது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள இங்கே சில தகவல்கள்:
நீங்கள் உண்ணும் உணவில் போதுமான இரும்பு, வைட்டமின் பி12 மற்றும் சி சத்துக்கள் உள்ளதா என்று பார்க்க வேண்டும்
இது மட்டுமல்லாது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, உணவுப் பழக்கத்திலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். முடிந்த வரை குதிரைவாலி, சாமை, திணை, கை குத்தல் அரிசி போன்ற அரிசி வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது அனைத்து சத்துக்களையும் எளிதாகப் பெற உதவும். முடிந்த வரை மருந்துகளைத் தவிர்த்து, இயற்கையாக இரும்புச் சத்து நிறைந்த உணவை ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க எடுத்துக் கொள்வதால், தாய் மற்றும் சேய் இருவரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பார்கள்.
ஆதாரம்: மாலைமலர்
பரிந்துரைத்தவர்: imperial.ac.uk
மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.
A