20 Feb 2020 | 1 min Read
Komal
Author | 138 Articles
உடல் பருமன் இன்று பெரும்பாலானோரை வதைக்கும் பொது நோயாக உருவெடுத்துள்ளது. மாறி வரும் உணவு பழக்கம், வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என அதற்கு பல காரணங்களைச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இல்லாமலும், உடம்பு மீது அக்கறை இல்லாமலும் இருந்துவிட்டு, உடல் எடை அதிகரித்ததற்குப் பிறகு ஜிம்முக்கும், மருத்துவமனைக்கும் செல்பவர்கள் அதிகம்.
ஆதாரம்: stylecraze
உடல் எடையை குறைக்க சாப்பிடும் உணவின் அளவானது குறைவாக இருக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் கொழுப்பின் அளவானது குறையும். இதற்காக உணவை தவிர்க்கவும் கூடாது. உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும்.
அதிகம் சாப்பிட்டால் வயிறு தொப்பை போடும் என்று பலரும் கருதுகின்றனர். அது அறவே தவறு. எடையைக் குறைப்பதற்காக நீங்கள் உணவைத் தவிர்த்துவந்தால், உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து மெலிந்துவிடுவீர்கள். அதனால் எடை குறையாது. நீர்ச்சத்து அவசியம் தேவை. எனவே தேவையான அளவு உணவை சாப்பிடுங்கள். பின்வரும் காய்கறிகளை தவறாமல் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சுரைக்காய்:
ஆதாரம்: webdunia
சுரைக்காயில நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது எனவே, இதனை உணவில் சேர்ப்பதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
குடைமிளகாய்:
ஆதாரம்: webdunia
குடைமிளகாயில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்கள் உடல் எடையை குறைப்பதுடன் உடலை ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.
வெள்ளரிக்காய்:
ஆதாரம்: webdunia
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருப்பதால் இதனை கோடையில் அதிகம் சாப்பிட்டு உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.
பசலைக்கீரை:
பசலைக்கீரை உடல் எடையை குறைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. இதில குறைவான அளவே கலோரிகள் உள்ளன. எனவே, இது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
ப்ராக்கோலி:
ப்ராக்கோலியை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும்.
பீன்ஸ்:
பீன்ஸில் உடல் எடையைக் குறைக்கக் கூடிய விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை நாம் உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.
வெங்காயம்:
வெங்காயத்தில் உடலில் தங்கியுள்ள கொழுப்புகளை கரைக்கும் சக்தி அதிகமாக உள்ளது. எனவே, உடல் எடையை எளிதில் குறைக்கலாம். அதுமட்டுமின்றி இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
கேரட்:
கேரட் கண்களுக்கு நல்லது. அதுமட்டுமின்றி உடல் எடையைக் குறைப்பதில் கேரட் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
தக்காளி:
தக்காளி உடல் எடையை குறைத்திடவும் அழகான சருமத்தை பெறவும் பெரிதும் உதவுகிறது.
பாகற்காய்:
கசப்பான பாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதுடன், உடல் எடையை எளிதாக குறைக்கும்.
மேற்கூறிய காய்கறிகளை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற கொழுப்புகளை தவிர்த்து சத்தான வகையில் உங்கள் எடையை குறைக்கலாம்.
பரிந்துரைத்தவர்: tamil.boldsky
மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.