புரதச்சத்தின் நன்மைகள் அறிவீர்களா?

cover-image
புரதச்சத்தின் நன்மைகள் அறிவீர்களா?

நமது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கிய தேவையாக அமைவது புரதசத்து ஆகும். இப்பொழுது பபுரதசத்தின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகளை பற்றி தெளிவாக காண்போம் உறவுகளே.

 

1. உடல் அமைப்பு

உடல் அமைப்பினை கொடுப்பது சதை மற்றும் எலும்புகள் ஆகும். அந்த சதை மற்றும் எலுaம்புகளின் வடிவத்திற்கு புரதம் மிக மிக அவசியம். உங்கள் சதை மற்றும் எலும்புகள் எல்லாமுமே புரதத்தால் ஆனவை. எனவே தசைகளின் வலிமைக்கு புரதம் நிறைந்த உணவுகளை எடுத்து வாருங்கள் நண்பர்களே.

 

2. முடியின் ஆரோக்கியம்

நமது முடி புரதத்தால் ஆனது. நமது முடி கெராட்டீன் என்னும் புரதத்தால் ஆனது. உங்கள் உணவில் தேவையான அளவு புரதம் கிடைக்காவிட்டால் உங்களுக்கு முடி உதிர்வு, குறைவான முடி வளர்ச்சி போன்ற பலவித பிரச்சினைகள் ஏற்படும். எனவே தினமும் புரதம் நிறைந்த உணவுகளை அதிக அளவில் உட்கொண்டு வாருங்கள்.

 

3. உடல் செல்களை புதுப்பிக்க உதவும்

உடலின் உறுப்பு புதுப்பிக்கவும் மற்றும்  செல்களின் வளர்ச்சிக்கும் புரதசத்து மிக மிக அவசியம். நமது உடலில் புரதச்சத்து குறையும் போது செல்கள் புதுப்பிப்பும்  குறையும்.

 

4. உடலின் வளர்ச்சிக்கு உதவும்

உடல் வளர்ச்சிக்கு முக்கிய தேவையாக அமைவது புரத உணவு. வளரும் இளம்பருவத்தினர்க்கு புரத சத்தானது அதிக அளவில் தேவைப்படுகின்றது. அவர்கள் குறைவாக புரதம் எடுத்துக்கொண்டால் அவர்களின் வளர்ச்சியானது பாதிக்கப்படும்.

 

5. ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலம்

உடலில் புரதச்சத்து குறைந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும். எனவே  நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தினை வலுப்படுத்த புரதச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். 

 

6. மூட்டுகளின் ஆரோக்கியம்

கால் மற்றும் கைகளின் மூட்டுக்கள் ஏராளமான தசைகள் மற்றும் ஜவ்வுப்பகுதி நிறைந்த ஒன்று. ஆரோக்கியமான மூட்டுகளுக்கு புரதச்சத்து மிக மிக அவசியம். முக்கியமாக விளையாடும் குழந்தைகளுக்கு தினமும் தேவையான அளவு புரதசத்தினை கொடுப்பது அவசியம். 

 

புரதம் நிறைந்த உணவுகள்

சைவ உணவுகள்

ஆதாரம் : theindusparent

 • பருப்பு வகைகள் 
 • பாதாம், வேர்க்கடலை 
 • பிஸ்தா, முந்திரி 
 • பால், பால் பொருட்கள் 
 • கொண்டைக்கடலை 
 • சோயா வகைகள் 
 • கோதுமை 
 • ராகி 

 

அசைவ உணவுகள்

 • முட்டை 
 • இறைச்சி 
 • மீன் 
 • இறால்
 • நண்டு  

 

 • எவ்வளவு புரதம் தேவை?

 

ஒவ்வொரு ஆரோக்கியமான மனிதனுக்கும் சராசரி ஓவ்வொரு கிலோகிராம் எடைக்கும் ஒரு கிராம் புரதம் தேவைப்படும். உதாரணமாக 70 கிலோ எடை உள்ள ஒரு மனிதனுக்கு தினமும் 70 கிராம் புரதம் தேவைப்படும்.

 

ஆதாரம்: மூன்சாட் தமிழ்   

பேனர் படம்: eatthis

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

#childnutriton #momnutrition #familynutrition
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!