கர்ப்பிணிகள் பயணிக்கலாமா?

cover-image
கர்ப்பிணிகள் பயணிக்கலாமா?

கர்ப்பம் என்பது அனைத்து பெண்களும் சந்திக்க வேண்டிய பயணம். அந்த தாயாகப் போகும் தருணத்தில் பலவித செய்ய வேண்டியவை; செய்ய கூடாதவைகளும் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அறிவுரைகளை வழங்குவர். பெற்றோர்கள், சொந்த பந்தங்கள், நண்பர்கள், அண்டை அயலார் உள்பட அனைவரும் தாய்-சேயின் நலனையே பிரதானமாக கொள்வர். 

 

கர்ப்பிணிகள் பயணம் செய்யலாமா?

ஒவ்வொருவரின் உடல்நிலையும் ஒவ்வொரு மாதிரி. நீங்களும்  உங்களது கருவும் ஆரோக்கியமாக இருந்தால் 38வது வாரம் வரை நீங்கள் பயணம் செய்யலாம். சிலருக்கு உடல்நிலை மோசமாக இருக்கும். அவர்கள் பயணிக்க கூடாது. பயணித்தால் கருவுக்கு பாதிப்பு வரலாம். இந்த மாதிரி பிரச்னையுள்ளவர்கள் குறைவான சதவிகிதம்தான். எனவே, தங்களின் மருத்துவரின் ஆலோசனைப்படி ஏற்று நடப்பது நல்லது.

 

கர்ப்பக்காலத்தில் எந்தக் காலம் பயணிக்கப் பாதுகாப்பானது?

முதல் மற்றும் மூன்றாவது ட்ரைமெஸ்டர் பாதுகாப்பானது அல்ல. ஆரோக்கியமாக உள்ளவர்கள், 14-28 வது வாரம் வரை பயணிக்கலாம்.

 

யாரெல்லாம் கர்ப்பக்காலத்தில் பயணிக்க கூடாது?

இரட்டைக் குழந்தை வயிற்றில் இருப்பவர், ப்ரீகிளப்சியா, ப்ரீடர்ம் லேபர், ப்ரீமெச்சுர் ரப்சர் ஆஃப் மெம்ப்ரேன் போன்ற பிரச்னை உள்ளவர்கள் பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

 

சுற்றுலா செல்ல திட்டமிட்டால்?

சுற்றுலா செல்லும் முன் உங்களது மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையை கேட்டுவிட்டு செல்லலாம். உங்களுடன் வருபவர் உங்களை நன்கு பார்த்துக்கொள்பவராக இருக்க வேண்டும். ஏதாவது எமர்ஜென்ஸி என்றால் அதை சமாளிக்க தெரிபவராக இருக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள், ப்ரீநேடல் விட்டமின், முதலுதவி கிட் இருப்பது நல்லது. எந்த இடத்துக்குப் போக திட்டமிட்டாலும், அந்த இடத்துக்கு எந்த டிரான்ஸ்போர்ட் விரைவில் செல்லுமோ அதைத் தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில், நீண்ட நேரம் பயணத்தில் இருப்பதைத் தவிர்க்கலாம். டிராவல் திட்டம் எளிதில் மாற்றக்கூடியதாக இருப்பதைத் தேர்ந்தெடுங்கள்.

 

டீப் வெயின் த்ரோம்போசிஸ் 

கால்கள் அல்லது மற்ற இடங்களில் உள்ள வெயின்களில் ரத்தம் கட்டியிருக்கும் பிரச்னை இது. ரத்தம் கட்டி இருக்கும் நிலை நுரையீரலுக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம். நீண்ட நேரம் உட்கார்ந்து இருத்தல், நீண்ட நேரம் அசையாமல் இருத்தல் ஆகியவை இந்த வெயின் பிரச்னையை அதிகரிக்கும். இந்த வெயின் பிரச்னை உள்ளவர்கள், முடிந்தவரை பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும். பயணிப்பதாக இருந்தால், நிறைய நீர்ச்சத்து உணவுகளை எடுக்க வேண்டும். தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். சரியான இடைவெளியில் அடிக்கடி எழுந்து நடப்பது நல்லது. காரில் செல்வதாக இருந்தால், சில இடங்களில் நிறுத்தி எழுந்து, கை, கால்களை அசைத்து ரிலாக்ஸ் செய்துவிட்டு பின்னர் பயணிக்கலாம்.

 

காரில் பயணிக்கும் கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ்

குறுகிய நேரம் பயணிப்பது நல்லது. நீண்ட நேரம் பயணித்தால், சில இடங்களில் நிறுத்தி எழுந்து, கை, கால்களை அசைத்து ரிலாக்ஸ் செய்துவிட்டு பின்னர் பயணிக்கலாம். வயிற்றுக்கும் இடுப்பு எலும்புக்கும் இடையே சீட் பெல்ட் அணியுங்கள். தோள்ப்பட்டை பெல்ட்டை வயிற்றுக்கும் மார்பகங்களுக்கும் இடையே அணியலாம்.

 

ப்ளெயினில் (விமானம்) பயணிப்பவருக்கான டிப்ஸ்

ஆதாரம் : ekincare

மருத்துவர் பரிந்துரைத்தால், டிகம்ப்ரஷன் ஸ்டாக்கிங்க்ஸ் அணிந்து கொள்ளலாம். ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். வாந்தி, வயிற்றுப்போக்கு, வாயு, குமட்டல் ஆகியவற்றுக்கு மருந்துகளைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். உங்களது பிரசவ நாளை மனதில் வைத்த பின், ப்ளெயின் டிக்கெட் புக் செய்யுங்கள். 36 வது வாரம் வரும் முன்னரே உங்களது பிளெயின் பயணத்தைத் திட்டமிட்டு கொள்ளுங்கள். ஏர்லென் பாலிசி செக் செய்த பின் நீங்கள் பயணம் செய்யவேண்டியதைத் திட்டமிடுங்கள். பிளெயினில் ஏறும் முன்னரே வாயு ஏற்படுத்தும் உணவுகள், கார்பானேட்டட் பானங்களை சாப்பிட்டு இருக்க கூடாது. சீட் பெல்ட் எப்போதும் போட்டு இருப்பது நல்லது.

 

பயணம் செய்யும் போது எந்த பிரச்னை வந்தால் அது எமர்ஜென்ஸி?

  • ரத்தப்போக்கு வருவது 
  • அடிவயிற்றில் அதிக வலி 
  • பனிக்குட நீர் உடைதல் 
  • நீங்காத தலைவலி 
  • முகம், கைகள் வீக்கம் 
  • தீவிரமான வாந்தி (அ) வயிற்றுப்போக்கு 
  • வெயின் பிரச்னை 

போன்ற அசௌகரியம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை நாடுவது நல்லது.

 

பொதுவான டிப்ஸ்

பயணிக்கையில் எப்போதும் உட்கார்ந்தே இல்லாமல் அடிக்கடி எழுந்து கை, கால்களை ஸ்ட்ரெச் செய்து கொள்ளுங்கள். தண்ணீர், ஜூஸ், மோர் போன்றவற்றைப் பருகுவது நல்லது. பயணிக்கையில், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். மலச்சிக்கலை விரட்ட நார்ச்சத்து, நீர்ச்சத்து உணவுகளை சாப்பிடுவது. மிதமான உடற்பயிற்சி செய்வது நல்லது. சிறுநீர் கழிக்கும் உணர்வு வரும் முன்னரே சிறுநீர் கழித்துவிடுங்கள். சிறுநீர் அடக்கி வைத்தால் யூடிஐ பிரச்னை வந்துவிடும். பிளாடர் முழுமையாகவதற்கு முன்னரே அடிக்கடி சிறுநீர் கழித்துவிடுங்கள். ஹெல்தி ஸ்நாக்ஸை கைகளில் வைத்திருங்கள். மெடிக்கல் இன்ஸ்சூரன்ஸ் கைகளில் வைத்திருங்கள். இருசக்கர வாகனம் ஓட்டுவது, இருசக்கரத்தில் தொடர்ந்து பயணிப்பது பாதுகாப்பானது அல்ல. எப்போதாவது மிதமாக வேகத்தில் இரு சக்கரத்தில் பின்னாடி உட்கார்ந்து செல்லலாம். பேருந்தைவிட ரயிலில் பயணிப்பது நல்லது. நீண்ட நேரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

 

தவிர்க்க முடியாத காரணம் எனில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். தேவையில்லாத பயணத்தை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் நம்முடைய கவனக்குறைவால் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் மிகவும் வருத்தமடைய நேரிடும். 

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

#pregnancytravel #momhealth
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!