கர்ப்பகாலத்தில் முதல் மூன்று மாதம் எவ்வளவு முக்கியம்?

cover-image
கர்ப்பகாலத்தில் முதல் மூன்று மாதம் எவ்வளவு முக்கியம்?

தாயாகப் போகிறேன் என்ற செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியில் இருக்கும் தருணம். வயிற்றில் குழந்தை கருவாக இருக்கும்போதே குழந்தையின் பாலினம், ரோமம், தோல், நிறம், குணம், உயரம், திறன் ஆகியவை முடிவு செய்யப்படும். குழந்தையின் முதல் 3 மாதங்களின் (First Trimester) வளர்ச்சி எப்படி இருக்கும் எனத் தெரியுமா?

 

1. முதல் வாரம்

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் எனத் தெரியாது. எனினும்  உங்களது உணர்வுகளில் மாற்றங்கள் இருக்கும். தாய்மை உணர்வு, சொல்ல முடியாத உணர்வு தோன்றியிருக்கும்.

 

2. வது வாரம்

ஹார்மோன்கள் சுரந்து மாதவிலக்கை வர விடாமல் தடுக்கும். தாய்மைக்கு உடலைத் தயார் செய்ய ஆரம்பிக்கும்.

 

3. வது வாரம்

வாந்தி, குமட்டல், வயிறு பிரட்டுவதுப் போன்ற உணர்வுகள் வரலாம். வயிற்றில் உள்ள கருவுக்கு மூளை செல்கள், முதுகுத்தண்டுவடம், நரம்பு மண்டலம் என அடிப்படையான விஷயங்கள் உருவாகியிருக்கும். லேசாக இதயத்துடிப்பும் தெரிய ஆரம்பிக்கும்.

 

4. வது வாரம்

குழந்தையின் மூளையும் நரம்பு மண்டலமும் முழு வடிவத்தைப் பெற்றிருக்கும். முதுகு எலும்புகள், தசைகள், கை, கால்கள், கண்கள், காதுகள் எல்லாம் வளரத் தொடங்கும். குழந்தை 3 மில்லி மீட்டருக்கு குறைந்த அளவில் தாயின் வயிற்றில் காணப்படும். குழந்தை பாதுகாப்பாக இருக்க, உங்களது கர்ப்பப்பையே தடிமனான மெத்தையை குழந்தைக்காக உருவாக்கும். இந்தக் காலத்தில் தாய் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தொடங்குவார். வாந்தியும் குமட்டலும் அதிகரித்திருக்கும் காலமும் இது.

 

5. வது வாரம்

உங்கள் குழந்தை உங்களது வயிற்றில் 5 மீட்டர் அளவுக்கு வளர்ந்திருக்கும். சின்ன சிறிய அழகான விரல்களும் தோன்ற ஆரம்பிக்கும். சில தாய்மார்களுக்கு பிறப்புறுப்புகளில் ரத்த சொட்டுக்கள் லேசாக ஆரம்பிக்கும். இப்படி இருந்தால் ஒருமுறை மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று வருவது நல்லது. இயற்கையாக நீங்கள் கர்ப்பமாகி இருந்தால், மருத்துவர் ஆலோசனைப்படி லேசான உடற்பயிற்சிகளை செய்யலாம். அதிக சோர்வு சிலருக்கு இருக்கலாம்.

தலைவலி இக்காலத்தில் வரலாம். சோர்வாக இருந்தால் அவ்வப்போது ஓய்வு எடுங்கள். இரவில் வெகு நேரம் கண் விழிக்கும் பழக்கம் இருந்தால், அதையெல்லாம் இனி விட்டு விடுங்கள். உங்கள் குழந்தையின் நலனுக்காக.

மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

 

6. வது வாரம்

குழந்தை 6-7 மில்லி மீட்டர் உயரம் வரை காணப்படும். சிறிது சிறதாக வளர்ச்சி அதிகரிக்கும். 4 அறைகளும் உள்ள முழுமையான இதயம் உருவாகும். கைகளும் கால்களும் நீண்டு வளரக்கூடும். குழந்தையின் மூளை நன்றாக செயல்படும். இதனால் குழந்தையின் உள்ளுறுப்புகளின் வளர்ச்சியை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும் வேலையை குழந்தையின் மூளை செய்ய தொடங்கிவிடும்.

இந்த காலத்தில் கர்ப்பிணிகள் காற்றோட்டமான இடத்தில் இருப்பதை அதிகரித்துக் கொள்ளுங்கள். மாலை வெயிலில் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வது நல்லது. வைட்டமின் டி சத்து வெயிலிருந்து தாய்க்கு கிடைக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்லும் சூழலும் வரும்.

 

7. வது வாரம்

குழந்தை 7-8 மீட்டர் அளவு வளர்ந்திருக்கும். கை, கால்கள் நன்றாக வளர்ந்திருக்கும். சீரான இதயத் துடிப்பு காணப்படும். இந்த காலத்தில் தாய்க்குப் புளிப்பான உணவுகள் பிடிக்க ஆரம்பிக்கும். புளிப்பு சுவையைத் தேடி தாய்மார்கள் செல்வார்கள்.

 

8-வது வாரம்

குழந்தை 8-10 மில்லி மீட்டர் அளவுக்கு வளர்ந்திருக்கும். கருப்பை இரண்டு மடங்கு பெரிதாகக் காணப்படும். இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 160 எண்ணிக்கையாக காணப்படும். தோல் மிகவும் மெலிதாக உருவாகியிருக்கும். பார்ப்பதற்கு மிக சிறிய மனித உருவம் போல தெரியும். சோர்வு வரும் போதெல்லாம் ரெஸ்ட் எடுக்க வேண்டும்.

 

9-வது வாரம்

 

குழந்தையின் உள்ளுறுப்புகள் நன்றாக வேலை செய்யத் தொடங்கும். இதனால் கர்ப்பப்பையில் குழந்தை நகரத் தொடங்கும். குழந்தையின் நடனம் தொடங்கிவிட்டது. அங்கேயும் இங்கேயும் லேசாக குழந்தை நகரும்.

குழந்தை தன் விரல்களை அசைக்கும். உள்ளங்கையைத் தொட்ட படி கைகளை மூடும். தாயின் மார்பகங்கள் கொஞ்ச கொஞ்சமாக பெரிதாகும். அதிகமான ஹார்மோன் சுரப்புகள் ஏற்படும். திடீர் மகிழ்ச்சி, திடீர் அழுகை இப்படி மாறி மாறி மனநிலை இருக்கும். பயப்பட வேண்டாம். இது நார்மல்தான். லேசான மூக்கடைப்பு இருக்கும். மூக்கில் ரத்த கசிவு தோன்றலாம். மூக்குக்கு உள்ளே வறட்சியாக இருப்பது போன்ற உணர்வுத் தெரியும்.

 

10-வது வாரம்

குழந்தை தாடை எலும்புகள் தோன்றியிருக்கும். இதயம் சீராக இயங்கும்.

தாடையைக் குழந்தை அசைக்கும். குழந்தையின் நெற்றியின் சுருக்கங்கள் காணப்படும். தாயின் வயிறு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகும்.

 

11-வது வாரம்

குழந்தை இப்போது 2-3 செ.மீ நீளத்தில் இருக்கும். சீறுநீரகம் நன்கு செயல்பட்டு, சிறுநீர் வெளியாகும். முகத்தோற்றம் சீராக இருக்கும். நகங்களின் வளர்ச்சியும் சீராக இருக்கும். குழந்தையின் நீளத்துக்கு ஏற்றது போல, மூன்றில் ஒரு பங்காக குழந்தையின் தலை காணப்படும். குழந்தையின் எடை அதிகரிக்கத் தொடங்கும்.

 

12-வது வாரம்

உங்கள் குழந்தை இப்போது 6 செ.மீ அளவுக்கு காணப்படும். மணிக்கட்டு, முழங்கை ஆகியவற்றை குழந்தை அசைக்க ஆரம்பிக்கும். கருப்பையில் குழந்தை கொஞ்ச கொஞ்சமாக சுற்ற ஆரம்பிக்கும். குழந்தை தூங்கும்; மீண்டும் எழும். தூக்கமும் விழிப்பும் குழந்தைக்கு மாறி மாறி இருக்கும்.

தன் தசைகளைக் குழந்தை அசைக்கும். இந்தக் காலத்தில் குழந்தை தன் தலையைத் திருப்பும். வாயைத் திறந்து, திறந்து மூடும். தாய்மார்களுக்கும் வாந்தி, வயிற்று பிரட்டல் குறைய ஆரம்பிக்கும். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தாய்மார்கள் இயல்பு நிலைக்கு வருவார்கள். 

 

இந்த முதல் மூன்று மாதங்களும் உங்கள் குழந்தையின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. எனவே நீங்கள் வெகு கவனமாக உங்கள் உடல்நலத்தையும் மனநலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். தாய்மார்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

பேனர் படம்: medicalnewstoday

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

#momhealth
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!