கர்ப்பிணிகள் புளிப்பு சுவையை விரும்புவது ஏன்?

cover-image
கர்ப்பிணிகள் புளிப்பு சுவையை விரும்புவது ஏன்?

மாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்ப காலத்தில் பெண்களின் வித்தியாச தேடல் காலங்காலமாகத் தொடர்கிற ஒன்றே. கர்ப்பிணிப் பெண் கேட்டால் முடியாதெனச் சொல்லாமல், இவற்றை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் ஆட்கள் நிறைய பேர். மசக்கையின் போது இப்படி காரசார, புளிப்பு உணவுகளை உட்கொள்வது சரிதானா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். 

‘‘கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உமிழ்நீரின் சுரப்பு அதிகமாக இருக்கும். வாந்தி உணர்வு இருக்கும். மாங்காய், நெல்லிக்காய் மாதிரி புளிப்புப் பொருட்களை சாப்பிட்டால் வாய்க்கு இதமாக இருக்கும். அதே நேரத்தில் புளிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகமாக்கி நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும். 

கர்ப்பிணிகளுக்கு பொதுவாக இரும்புச்சத்து குறைவாக இருக்கும். இதனால் சிலர் சாம்பல் சாப்பிடுவதை விரும்புவார்கள். சாம்பலை சாப்பிடவே கூடாது. உப்பும், காரமும் அதிகமுள்ள ஊறுகாயைத் தவிர்க்க வேண்டும். உப்பு அதிகமுள்ள உணவுப்பொருட்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் உருவாகும் வாய்ப்புண்டு. 

கர்ப்பிணிகள், ஆசைப்பட்ட உணவுகளை அளவோடு சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்.  காரமான உணவுகளை சாப்பிட நேர்ந்தால் கடைசியாக தயிரோ அல்லது நீர் மோரோ எடுத்துக்கொண்டால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை ஓரளவு குறையும்.’’

பேனர் படம்: curejoy

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

#pregnancymustknow
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!