வாழை இலையில் ஏன் உண்ண வேண்டும்?

cover-image
வாழை இலையில் ஏன் உண்ண வேண்டும்?

மரங்களில் மிகவும் தனித்துவம் வாய்ந்தது வாழை மரம். வாழை மரத்தின் இலை, வேர், பூ, காய், கனி, தண்டு முதலிய அனைத்தும் சக்தி வாய்ந்த உணவுப்பொருளாக விளங்குகின்றது. இப்பொழுது நாம் வாழை இலையில் உணவு உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி காண்போம் நண்பர்களே.

 

நம் முன்னோர்கள் எப்பொழுதும் வாழை இலையில் உணவு உண்டு நீண்ட நாட்கள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.

1. இரத்தத்தினை சுத்தம் செய்யும்

வாழை இலையில் தினமும் உணவு உண்டு வந்தால் உங்கள் இரத்தத்தில் உள்ள தேவையற்ற  நச்சுக்கள் அனைத்தையும் நீக்கி உங்கள் இரத்தத்தினை சுத்தமாக்கும். எனவே தினமும் ஒரு வேளையாவது வாழை இலையில் உணவு உண்பதை வழக்கமாக மாற்றுங்கள் நண்பர்களே.

2. செரிமான ஆரோக்கியத்தினை மேம்படுத்தும்

நாம் நமது உணவினை சில்வர் மற்றும் இதர பாத்திரங்களில் உண்ணும்போது நாளடைவில் நமக்கு பலவித ஆரோக்கிய கோளாறு ஏற்படும். அதுவே நாம் தினமும் வாழை இலையில் உணவு உண்டு வந்தால் நமது செரிமான மண்டலம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மலசிக்கல் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.

3. அல்சரை குணப்படுத்த உதவும்

இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவு பழக்கம் மற்றும் நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது போன்ற காரணத்தினால் நம்மில் பல பேருக்கு அல்சர் மற்றும் வையரு எரிச்சல் போன்ற பிரச்சினை உள்ளது. இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் தினமும் வாழை இலையில் உணவு உண்டு வந்தால் விரைவில் நல்ல மற்றம் காண முடியும். முக்கியமாக தினமும் வாழை இலையில் உணவு உண்டு வந்தால் அல்சர் பிரச்சினை முற்றிலும் வராமல் தடுக்கலாம்.

4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

வாழை இலையில் உணவு உண்டால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். மேலும் உங்களுக்கு நோய் வராமல் தடுக்கும்.

5. சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

வாழை இலையில் உணவு உண்பது உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. இது உங்களுக்கு சிறுநீரக கற்கள், சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் முற்றிலுமாக தடுக்க உதவும். எனவே பிளாஸ்டிக் போன்ற பொருட்களில் உணவு உண்பதை தவிர்த்து வாழை இலையில் உணவு உண்பதை வழக்கமாக கொள்ளுங்கள் நண்பர்களே.

6. புற்று நோய் வராமல் தடுக்கும்

வாழை இலையில் பலிபீனால்ஸ் என்னும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதில் நாம் உணவினை உண்டு வரும்பொழுது நமக்கு புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் நமக்கு ஏற்படும் செல் அழிவினை தடுத்து எப்பொழுதும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.

7. உணவின் ருசியை அதிகரிக்கும்

நீங்கள் இதுவரை அனுபவித்தது உண்டா ?. வாழை இலையில் உணவினை பரிமாறி உண்ணும்பொழுது உங்கள் உணவின் ருசி அதிகரிக்கும். உணவின் ருசியினை கூடும் சக்தி வாழை இலைக்கு உண்டு. எனவே வாழை இலையில் உணவினை உண்டு வாருங்கள் நண்பர்களே.

8. சுற்று சூழலுக்கு மிகவும் நல்லது

பிளாஸ்டிக் போன்ற பொருட்களை காட்டிலும் நீங்கள் வாழை இலையில் உணவினை உண்டு வந்தால் உங்களுக்கு ஆரோக்கியம் ஏற்படுவது மட்டுமின்றி உங்கள் சுற்று சூழலும் பாதிப்படையாமல் காக்கும். எனவே தினமும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வாழை இலையில் உணவு உண்டு வாருங்கள் நண்பர்களே.

ஆதாரம்: இயற்கை ஆயுர்வேதம்

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

#momhealth #childhealth #familyhealth
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!