6 Mar 2020 | 1 min Read
Komal
Author | 138 Articles
தம்பதிகள் வாழ்வின் ஒரு கட்டத்தில் கருத்தடையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலுக்கு வர நேரிடும். இந்த வகையில் தம்பதிகள் மூன்று பிரிவுகளாக உள்ளனர். முதல் பிரிவில் உள்ளவர்கள் திருமணம் ஆன உடனே குழந்தை பெற விரும்பாமல், குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட விரும்புகின்றவர்கள். இரண்டாம் பிரிவில் உள்ளவர்கள் முதல் குழந்தை பிறந்த பிறகு இரண்டாம் குழந்தைக்கான திட்டமிடுதலைத் தாமதப்படுத்த விரும்புகின்றவர்கள். மூன்றாம் பிரிவில் உள்ளவர்கள் இரண்டு குழந்தை பிறந்த பிறகு நிரந்தர அல்லது தற்காலிக கருத்தடையை நாடுகின்றவர்கள்.
இதில் மூன்றாம் பிரிவினர்கள் உள்ள பெரும்பாலானவர்களின் தேர்வு கருத்தடை அறுவை சிகிச்சை ஆகவே உள்ளது. இரண்டாம் பிரிவில் உள்ள பெரும்பாலானோர்கள் மற்றும் மூன்றாம் பிரிவில் சிலர் மற்ற கருத்தடை வழிமுறைகளை நாடுகின்றனர். இதிலும் பெரும்பாலானவர்கள் கருத்தடை மாத்திரைகளை நம்பியுள்ளனர். இதற்கு மாற்றாக இன்னொரு வழி உள்ளது. அது இன்ட்ரா யுட்ரைன் சாதனம் எனப்படுவது.
இந்த இன்ட்ரா யுட்ரைன் சாதனம் வட்டவடிவம், வலை வடிவம், நான்கு கால் சிலந்தி வடிவம் என்று பல அமைப்புகளில் இவை விற்கப்படுகின்றன. இதில் ‘டி’ வடிவ சாதனமே அதிக அளவு பெண்களால் பயன்படுத்தப்படுகின்றன. இதனையே ‘காப்பர் டி’ என்று பிரபலமாகக் கூறுகின்றனர். இந்த காப்பர் டி சாதனம் பெண்களின் உடலில் எப்படிப் பொருத்தப்படுகிறது? இதனால் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன? என்று அனைத்தையுமே இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.
காப்பர் டி பற்றிய விளக்கம்
இந்த ‘காப்பர் டி’ கருத்தடை சாதனம் செம்பில் ஆனது. இது டி வடிவத்தில் காணப்படும். இந்த சாதனத்தின் கீழ்ப்புறத்தில் நூல் மாதிரி அமைப்பு காணப்படும்.இந்த நூல் போன்ற அமைப்பானது இந்த காப்பர் டி-யை வெளியே எடுக்க உதவுகின்றது. இந்த காப்பர் டி ஆனது பெண்ணின் கர்ப்பப்பையில் மருத்துவர்களால் பொருத்தப்படும். ஆகப் பெண்ணின் கருப்பையில் உள்ள இந்த காப்பர் டி கருத்தரித்தல் ஏற்படாமல் தடை செய்யும்.
ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையைச் சென்று சேராமல் இருப்பதை இந்த சாதனம் சாத்தியப் படுத்துகின்றது. ஆக இதன் மூலம் கருத்தரித்தல் ஏற்படாமல் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த சாதனத்தை மருத்துவரின் உதவியோடு மட்டுமே பொருத்த வேண்டும். இது ஒரு மிகச்சிறந்த கருத்தடை சாதனம் என்றால் மிகையில்லை.
காப்பர் டி யின் சிறப்பு அம்சங்கள் என்ன?
ஆணின் விந்து பெண்ணின் கருப்பையை வந்தடையும் இடத்திற்கு ரத்த வெள்ளை அணுக்கள் விரைந்து செல்கின்றன. இதற்குக் காரணம் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிக அளவு காணப்படுவதே. இந்த வெள்ளை அணுக்கள் விந்து அணுக்களுக்கு எதிராகச் செயல்பட்டு அவற்றை விரைவில் அழித்துவிடும். இதனால் விந்து செயலற்றதாக மாற்றிவிடும். ஆகக் காப்பர் டி இந்த ரத்தத்தின் வெள்ளை அணுக்களின் அளவை மிகவும் அதிக அளவு ஆக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த சாதனம் செம்பால் செய்யப்பட்டது இன்னொரு சிறப்பம்சமாகும். இந்த செம்பு உலோகம் விந்தணுக்களை அழிக்கும் தன்மை கொண்டது.
காப்பர் டி எந்த வகை பெண்களுக்கு ஏற்றது?
ஒரு தடவையாவது பிரசவம் ஏற்பட்ட தாய்மார்களுக்குத் தான் இந்த காப்பர் டி ஏற்புடையது. இதற்குக் காரணம் பிரசவம் நிகழ்ந்த பிறகு இயற்கையாகவே பெண்ணின் பிறப்பு உறுப்பு இளக்கமாகி விடும்.
காப்பர் டி எப்போது மாற்ற வேண்டும்?
இது பெரும்பாலான பெண்களின் சந்தேகம் ஆகும். பொதுவாகக் காப்பர் டி பொருத்திய காலத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து மாற்றப்பட வேண்டும். அதேபோல இன்னும் மாற்ற நேரம் உள்ளது என்று எண்ணித் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அப்படியே கவனிக்காமல் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. 6 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரைச் சந்தித்துக் காப்பர் டி சரியான முறையில் உள்ளதா? என்பதைச் சோதனை செய்து கொள்வது மிக அவசியம். சில சமயம் காப்பர் டி நகர்ந்து விட மிகவும் சிறிய
வாய்ப்புள்ளது.
காப்பர்-டி சாதனத்தைப் பயன்படுத்த உள்ளவர்கள் எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்?
இதனால் உடனே மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
காப்பர் டி சாதனத்தை யார் பயன்படுத்த வேண்டாம்?
காப்பர் டி சாதனத்தில் உள்ள குறைபாடுகள் என்ன?
பொதுவாகவே எல்லா விஷயத்திலும் நன்மை மற்றும் தீமை இரண்டுமே இருக்கும். அதற்கு இந்த காப்பர் டி சாதனமும் விதிவிலக்கு அல்ல. உதாரணமாகப் பெண்கள் பலர் கருத்தடை மேற்கொள்ள கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிக அளவு எடுத்துக் கொள்கின்றனர். இதனால் பல்வேறு விதமான பின்விளைவுகள் மற்றும் ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படுகின்றன. ஏன் ஒரு கட்டத்தில் குழந்தை பெறுவது சாத்தியம் அற்ற நிலை கூட ஏற்பட்டு விடுகின்றது.
அதனை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது காப்பர் டி கருத்தடை சாதனம் பெரிய அளவு பாதிப்புகளை ஏற்படுத்தாது. ஏன் பல பெண்களுக்குக் காப்பர் டி பற்றிய விழிப்புணர்வு கூட இருப்பதில்லை. இதற்குப் பிரதான காரணம் கருத்தடை மாத்திரைகளை ஒப்பிடும்பொழுது இந்த காப்பர் டிக்கு கொடுக்கப்படும் விளம்பரங்கள் மிகவும் குறைவே ஆகும்.ஒருவேளை நீங்கள் காப்பர் டி கருத்தடை சாதனத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிவு செய்தால் அதில் உள்ள குறைபாடுகள் என்னவென்பதையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
மற்ற எல்லா கருத்தடை வழிமுறைகளைப் போல இந்த வழியிலும் 100% கர்ப்பம் தரித்தல் ஏற்படாது என்று கூற முடியாது. அதாவது 10 ஆண்டுகளில் 8% அளவு கருத்தரிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த காப்பர் டியானது கர்ப்பப்பையில் உள்ள சவ்வின் துணை கொண்டு செலுத்தப்படுகின்றது. ஆக இதைப் பயன்படுத்திய பெண்களுக்கு சில அசௌகரியம் ஏற்படலாம். ஆனால் எல்லா பெண்களுக்கும் இந்த அசௌகரியம் நிகழ்வதில்லை. ஆயிரத்தில் ஒருவருக்கு இந்த நிலை ஏற்படுகின்றது என்று ஆய்வுகள் சொல்கின்றன. இந்த காப்பர் டி ஆனது சரியான முறையில் பொருத்தப்படாத பட்சத்தில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
ஒருவேளை எதிர்பாராதவிதமாகக் கருத்தரித்தல் நிகழும் பட்சத்தில், கருவானது கர்ப்பப் பையில் வளராமல் கருக் குழாயில் வரும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும்.
காப்பர் டி-யை உடலில் பொருத்திக் கொண்டால் வலி அளவுக்கு அதிகமாக இருக்குமோ என்ற பயம் பல பெண்களுக்கு இருக்கிறது. ஆனால் இது அப்படி இல்லை.இந்த காப்பர்-டி பொருத்திக் கொள்ளும் போது மிதமான வழி ஏற்படும்.ஆனால் அதுவும் சில நேரத்தில் சரியாகிவிடும். இன்று மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுத்த பின்னரே காப்பர் டி பொருத்துகின்றனர். அதனால் வலி ஏற்படாது. பயம் தேவையில்லை.
காப்பர் டி குறித்து நிலவிவரும் வதந்திகள் என்ன?
காப்பர் டியைப் பற்றிய தெளிவான தகவல்களை அறிந்து இருப்பீர்கள். காப்பர் டி (Copper T)-யின் நன்மைகள் மற்றும் பாதகங்களைப் பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகின்றோம். ஆக இந்த வகை கருத்தடை சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு யோசித்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அதேபோல பெண்கள் மருத்துவரின் பரிந்துரைத்தல் மற்றும் குடும்பத்தின் நிர்ப்பந்தத்திற்கு மட்டும் கீழ்ப்படிந்து இந்த மாதிரி கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது. இது முழுக்க முழுக்க சம்பந்தப்பட்ட பெண்ணே எடுக்க வேண்டிய முடிவு என்பதை நினைவில் உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பேனர் படம்: frau-adler.de
மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.
A