• Home  /  
  • Learn  /  
  • கர்ப்பமாக இருக்கும்போது ஹேர் டை பயன்படுத்துவது பாதுகாப்பா?
கர்ப்பமாக இருக்கும்போது ஹேர் டை பயன்படுத்துவது பாதுகாப்பா?

கர்ப்பமாக இருக்கும்போது ஹேர் டை பயன்படுத்துவது பாதுகாப்பா?

2 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

சாதாரண நாட்களில் நம் உடலின்மீது கூடுதல் கவனம் செலுத்துவதில்லை. ஆனால், கர்ப்பமாக இருக்கும்போது பல வித குழப்பங்கள் மனதில் குடிகொள்ள தொடங்குகிறது. இதற்கு காரணம், ஹார்மோன்களின் மாற்றம் தான். அதுவரை நமக்கு பிடித்த விஷயங்கள் கூட கர்ப்பத்தின்போது பிடிக்காமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. ஒரு சில விஷயம், அலர்ஜியை ஏற்படுத்தி கருவில் உள்ள குழந்தையை பாதிக்குமோ எனவும் பயப்பட செய்வோம். அவற்றுள் ஒன்று தான் ஹேர் டை அடிப்பது. பல பெண்களுக்கு கர்ப்பத்தின்போது ஹேர் டை பயன்படுத்தலாமா? கூடாதா? என்ற குழப்பம் உள்ளது. அவர்களுக்கான பயனுள்ள பதிவு தான் இது.

 

ஹேர் டையும், கர்ப்பமும்:

கர்ப்ப காலத்தில் நாம் சாப்பிடும் அனைத்திலும், செய்யும் விஷயங்கள் அனைத்திலும், கருவிலுள்ள குழந்தைக்கும் பங்குண்டு என்பதை முதலில் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு, நாம் ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவை உண்டால், அது கருவிலுள்ள குழந்தையையும் பாதிக்க செய்யும்.

கர்ப்பிணி பெண்கள் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறைப்பிரசவம், பிறக்கும் போது எடை குறைவாக இருத்தல், கருச்சிதைவு போன்றவையாகும். இவற்றை மனதில் கொண்டு மிகவும் கவனமாக கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியுடன் அவர்கள் கழிக்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் மீன்கள் சாப்பிடுவது நல்லது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. ஆனால், அதிக மெர்குரி அளவு கொண்ட மீன்களை கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனென்றால், குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை இந்த மெர்குரி பாதிக்கக்கூடும்.

ஹேர் டையும் இதே போலத்தான் என்றாலும், இந்த அளவிற்கு அது ஒன்றும் ஆபத்தானது அல்ல. அதனால், ஹேர் டை பயன்படுத்துவது கர்ப்பிணிகளை பாதிக்காது.

அதோடு, ஹேர் டை என்பது உங்களுடைய முன்னந்தலை அல்லது உச்சந்தலையில் தேய்ப்பதால் சிறிய அளவிலான கெமிக்கலையே உங்கள் சருமம் உறிஞ்சுகிறது. இதனால் கருவில் வளரும் குழந்தையை, இது எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை.

 

தலைமுடியை பாதுகாப்பாக எப்படி கலர் செய்வது?

கர்ப்பமாக இருக்கும்போது ஹேர் டை அடிப்பது பாதுகாப்பானது என்றாலும், ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் நம்முடைய குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பை நம்மால் வழங்க முடியும்.

 

1. இரண்டாவது மூன்று மாதம் வரை காத்திருத்தல்:

கர்ப்பமாக இருக்கும்போது வேகமாக முடி வளரும். அப்படி என்றால், ஒன்பது மாதங்களில் எவ்வளவு முடி வளரும் என்பதை நீங்களே யூகித்து பாருங்களேன்! அதனால் தான், முதல் 12 வாரங்களுக்கு ஹேர் டை அடிப்பது பாதுகாப்பற்றது என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இரண்டாவது மூன்று மாதம் வரை காத்திருக்கலாம். அது நேரடியாக கருவில் வளரும் குழந்தையை எந்த விதத்திலும் பாதிப்பது கிடையாது.

 

2. பாதுகாப்பான ஹேர் கலரை உபயோகித்தல்:

ஹேர் கலரை தேர்ந்தெடுக்கும்போது அது பாதுகாப்பானதா என்பதை முதலில் உறுதி செய்யவும். அம்மோனியா அற்ற, ப்ளீச் இல்லாத, செமி பெர்மெனென்ட் ஹேர் கலரை உபயோகிப்பது நல்லது.

செமி பெர்மெனென்ட் ஹேர் கலர் என்பது தலையில் நீண்ட நேரத்துக்கு இருக்காத ஒரு ஹேர் டையாகும். அதனால், கெமிக்கல் வெளிப்பாடு அதிகம் இருக்காது. இது கர்ப்பிணிகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

மற்றொரு சிறந்த ஹேர் டை, இயற்கையான காய்கறி மற்றும் மருதாணி கொண்டு தயாரிக்கும் ஹேர் டையாகும்.

 

கெமிக்கல் வெளிப்பாட்டை வேறு எவ்வாறெல்லாம் கட்டுப்படுத்துவது?

ஹேர் டையின் நுரையில் கெமிக்கல் இருக்கும். அதனால், காற்றோட்டமான பகுதியில், சுவாசிப்பதற்கு சிரமம் இல்லாத இடத்தில் அமர்ந்து அடிப்பது நல்லது. அதேபோல, கையில் க்ளவ்ஸ் அணிந்துக்கொண்டு அடிப்பதை உறுதி செய்யவும்.

வழிமுறைகளை கவனமாக படித்து, அதன்படி நடந்துக்கொள்ளவும். அடித்துவிட்டு வெகுநேரத்துக்கு வைத்திருக்க கூடாது. டை அடித்து முடித்தபிறகு, உங்களின் உச்சந்தலை மற்றும் முன்னந்தலையை நன்றாக கழுவவும். உங்கள் சருமத்தில் எவ்வித டையும் ஒட்டிருக்கவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.

 

குறிப்பு: அதிகமாக ப்ளீச் செய்வதும், கெமிக்கல் அதிகம் நிறைந்த ஹேர் டையும் கருச்சிதைவுக்கு கூட வழிவகுக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹேர் ஸ்டைலிஸ்ட்டிடம் சென்றால், பின்வருவனவற்றை அவர்கள் செய்கிறார்களா என்பதை உறுதி செய்யவும், அவை:

  • பாதுகாப்பு கையுறைகளை அடிக்கடி மாற்ற வேண்டும்
  • ஏதும் சாப்பிட்டுக்கொண்டு அவர்கள் இருக்கக்கூடாது
  • கெமிக்கல் ட்ரீட்மென்டின் போது பேஸ் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்
  • சருமத்தில் ஒட்டி இருக்கும் ஹேர் டையை கட்டாயம் அகற்ற வேண்டும்

 

உங்களுடைய முடி, ஹேர் டை அடித்தால் மட்டுமே பார்க்க நன்றாக இருக்கும் என்ற பட்சத்தில், மேல் காணும் வழிகளை பின்பற்றி பாதுகாப்பாக அடிக்கலாம். இதனை செய்வதால் கருவில் இருக்கும் உங்கள் குழந்தையை எந்த விதத்திலும் பாதித்து விடாது. ஆனால், உங்கள் தலை முழுக்க உடனடியாக ஹேர் டை அடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

உங்களின் கர்ப்பக்காலம் பாதுகாப்பாகவும், பூரிப்புடனும் செல்ல எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

#momhealth

A

gallery
send-btn

Related Topics for you