கர்ப்பக்காலத்தில் வரும் கனவுகளுக்கு இவ்வளவு அர்த்தமுள்ளதா!

cover-image
கர்ப்பக்காலத்தில் வரும் கனவுகளுக்கு இவ்வளவு அர்த்தமுள்ளதா!

கர்ப்பமாக இருக்கும்போது பல கனவுகளை நாம் காண்போம். அவற்றுள் பல கனவுகள் நம் நினைவில் இருக்கும். அவை யாவை என்பதையும், அவற்றிற்கான அர்த்தம் என்ன என்பதையும் இந்த சுவாரஸ்யமான பதிவில் காண்போம்.

 

கனவுகள் எப்படி வித்தியாசப்படுகிறது?

மனிதராய் பிறந்த அனைவர்க்கும் கனவு வருவது பொதுவான விஷயமே. இந்த கனவுகள் யாவும் நம்முடைய ஆழ்ந்த உறக்கத்தை ஆக்கிரமித்து வருவனவே.

இந்த கனவுகளில், பிம்பத்தையோ, உணர்வுகளையோ சில சமயம் யோசனைகளையோ கூட நாம் காண்போம். சிலருக்கு அவர்கள் கண்ட கனவு நினைவில் இருக்கும். சிலருக்கோ, எழும்போது எதுவுமே ஞாபகம் இருக்காது.

 

தெளிவான கனவுகள்:

அதாவது சிலருக்கு ஆழ்ந்த உறக்கத்தின் போது தெளிவான கனவுகள் வரும். சொல்லப்போனால், இவை நிஜத்தில் நடப்பது போலவே நம் மனதுக்கு தோன்றும்.

 

கர்ப்பக்காலத்தில் அடிக்கடி வரும் கனவுகள்:

கர்ப்பமாக இருக்கும்போது ஒரு சிலர் அடிக்கடி கனவு காண்பதாய் நினைப்பார்கள். இதற்கு காரணம் அவர்கள் அதிக நேரம் உறங்குவதாலே. இப்போது அவர்கள் உணரும் சோர்வு, அதிக கனவை வரவழைக்கலாம்.

 

கர்ப்ப அல்லது தாய்மை குறித்து வரும் கனவுகள் எவை?

பதட்டமான கனவுகள்:

இதை கண்டு பயப்பட வேண்டாம்.
நம்முடைய பிள்ளைகள் உருவாகும்போது நம் ஆற்றலை அதிகமாக செலவு செய்கின்றனர். இத்தகைய காரணத்தினாலே நமக்கு பதட்டமான கனவுகள் வரக்கூடும்.

 

எளிதில் நினைவிலிருக்கும் கனவுகள்:

கர்ப்பமாக இருக்கும்போது வரும் கனவுகளில் பல நம் நினைவில் நன்றாக இருக்கும். இதுவே கர்ப்பத்துக்கு முன்னால் கனவை நினைவில் வைத்துக்கொள்ள நமக்கு கடினமாக இருந்திருக்கும்.

 

மோசமான கனவுகள்:

கருச்சிதைவு ஏற்படுவது போன்று கனவு வருகிறது என்றால், ஏற்கனவே உங்களுக்கு ஏற்பட்ட கருச்சிதைவு நினைவின் காரணமாக வரலாம். பிள்ளையை கீழே விடுவது போன்ற கனவுகளும் இதனாலே என்பதால், இது போன்ற கனவுகளை கண்டு ஒருபோதும் நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் பயந்தால் மட்டுமே கருவில் இருக்கும் குழந்தையை அது பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

 


முதல் மற்றும் இரண்டாவது மூன்று மாதம் வரும் கனவு எவை?

பெண்களின் உடல்நிலை பொறுத்து, வரும் கனவுகளும் மாறக்கூடும். அவர்கள் மனதில் இருக்கும் நம்பிக்கைகளும், பதட்டங்களும், பயங்களும் கனவாக பிரதிபலிக்கும்.

பொதுவாக வசந்தகாலமாக கருதப்படும் முதல் மூன்று மாதத்தில், தோட்டத்தில் நடப்பது போன்று கனவு வரலாம். அல்லது பழங்கள், பூக்கள் என கனவுகளில் வரலாம். ஒருவேளை நீங்கள் பயந்த சுபாவமாக இருந்தால், மோசமான கனவுகளும் நம் தூக்கத்தை ஆக்கிரமிக்கும். கனவுகள் வெறும் மாயை என்பதை உணர வேண்டும், அவ்வளவு தான்.

கர்ப்பத்தின் தொடக்கத்தில் கனவில் தண்ணீரை காண்பது பொதுவான ஒரு கனவு தான். சிலருக்கு மீன் நீந்துவது போன்றும் கனவில் வரும். இது பனிக்குட நீரில் இருக்கும் நம் பிள்ளையை குறிக்கிறதாம்.

சிலருக்கு குட்டி விலங்குகள் கனவில் வரலாம். இதுவும் வளர்ந்து வரும் நம் பிள்ளைகளையே குறிக்கிறதாம்.

 

மூன்றாவது மூன்று மாதத்தில் வரும் கனவு எவை?

உடலுறவு குறித்த கனவுகள்:

மூன்றாவது மூன்று மாதத்தில் இது போன்ற கனவுகள் உங்களுக்கு வரக்கூடும். இது ஒவ்வொரு பெண்ணிற்கும் வேறுபட்டும் காணப்படும். உங்களின் பிறப்புறுப்புக்கு இரத்தம் அதிகமாக செல்லும்போது, ஹார்மோன் அளவின் காரணமாக இது போன்ற கனவுகள் நமக்கு வரலாம்.

அது போல குழந்தைகளின் பாலினம் குறித்த கனவுகளும் நம்முடைய மனக்கதவை தட்டலாம்.

சிலருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம், விடுமுறை சுற்றுலா போன்ற கனவுகளும் வரும். இவை நம்முடைய குழந்தையை காணப்போகும் மகிழ்வை வெளிப்படுத்தும் கனவுகளாகும்.

இன்னும் பல கனவுகள், நம்முடைய கர்ப்ப காலத்தில் வரலாம்.

பொதுவாக ஒரு விஷயத்தை நாம் அதிகமாக நினைத்தாலோ அல்லது அதனை நினைத்தபடியே தூங்கினாலோ இது போன்ற கனவுகள் வரக்கூடும்.

மற்றபடி, கனவுகளில் நாம் காணும் அனைத்து அசம்பாவிதங்களும் நடந்துவிடும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இவ்வுலகில் இல்லை. எப்போதும் பாசிட்டிவாக வரும் கனவுகளை கொண்டாட செய்து, நெகட்டிவாக வரும் கனவுகளை நினைத்து கூட பார்க்காமல் தூக்கி தூர வீசிவிட்டு நம் கருவில் வளரும் குழந்தையை வரவேற்க காத்திருப்பதே, புத்திசாலித்தனம்.

அப்போது தான் நம்முடைய பிள்ளைகளும் பாதுகாப்பாக உணர்வார்கள். கருவிலிருக்கும் போதே நம்முடைய செயல்களை நம் பிள்ளைகள் உணர தொடங்கிவிடுவார்கள் என்பதை மனதில் வைத்து கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியுடன் மெய் சிலிர்க்க கொண்டாடலாம் வாருங்கள்.

#pregnancymustknow
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!