5 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
கர்ப்பம் தரிப்பதென்பது கணவன் – மனைவி வாழ்வில் அளவில்லா ஆனந்தத்தை தரக்கூடிய ஒன்றாகும். உடலுறவு கொண்டாலே கர்ப்பமாகிவிடலாம் என்ற எண்ணம் பலர் மனதில் உண்டு. ஆனால், உண்மையில் சொல்ல வேண்டுமானால், கருமுட்டை வெளியாகும் நாளை கணக்கில் கொண்டு கர்ப்பம் தரிக்க முயலும்போது, மிகப்பெரிய சந்தோஷத்தை அது நமக்கு நிச்சயம் அளிக்கக்கூடும். ஒரு வருடம் வரைக்கும் இயற்கையாகவே கருத்தரிக்க முயலலாம் என்கின்றனர் மருத்துவர்கள். ஆம், ஒரு வருடம் வரைக்கும் எந்தவொரு சிகிச்சையும் வேண்டியதில்லை என்கின்றனர். இந்த 1 வருடத்தில் அண்டவிடுப்பு நிகழும் நாளை கணக்கில் கொண்டு கருத்தரிக்க முயல வேண்டுமெனவும் அவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். பொதுவாக மாதவிடாய்க்கு பிறகு 15-ஆவது நாளில் கருமுட்டை வெளியாகும். ஆனாலும், ஒழுங்கற்ற மாதவிடாய் உடைய பெண்களுக்கு இது மாறுபடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இப்போது, விரைவில் கருத்தரிக்க என்ன வழி என்பதை இந்த பதிவின் மூலம் நாம் பார்ப்போம் வாருங்கள்.
1. கருத்தரிக்கும் முன்கூட்டிய செக்கப்:
கருத்தரிப்பதற்கு முக்கியமான ஒரு ஊட்டச்சத்து, ஃபோலிக் அமிலமாகும். இதை குறித்து நம் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. இந்த ஊட்டச்சத்து, பிறக்கும் குழந்தையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இன்றைய நாளில் பல பெண்கள் திருமண தேதி முடிவு செய்த பிறகே பிரெனெட்டல் வைட்டமின்களை எடுத்துக்கொள்ள தொடங்கி விடுகின்றனர். இதன் மூலமாக நம்மால் கருத்தரிப்பதை சரியாக திட்டமிட முடியும்.
2. மாதவிடாய் சுழற்சி குறித்த புரிதலுணர்வு:
உங்களின் மாதவிடாய் குறித்து எவ்வளவு அறிவீர்கள்? ஒரு சிலருக்கு, கடைசி மூன்று மாதம் எந்த தேதியில் மாதவிடாய் வந்தததென கேட்டால் கூட தெரியாது. ஆனால், கருத்தரிக்க திட்டமிடும் முன், முதலில் இதனை நீங்கள் நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், அப்போது தான் கருமுட்டை வெளியாகும் தேதியை நம்மால் ஓரளவுக்கு யூகிக்க முடியும்.
ஓவுலேசன் பிரெடிக்ஷன் கிட் பயன்படுத்தி கருத்தரிக்க சிறந்த நாட்களை நம்மால் கண்டுபிடிக்கவும் முடியும்.
3. உடலுறவு பொஷிஷன் குறித்து கவலை வேண்டாம்:
உடலுறவு நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவுகின்றன. உண்மையில் சொல்லப்போனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதனால், குறிப்பிட்ட நிலையில் உடலுறவு கொள்வதால் கர்ப்பம் தரிக்க முடியுமென்று நினைப்பதை விடுங்கள்.
4. அதிகம் உடலுறவுக்கொள்ள வேண்டாம்:
பொதுவாக மாதவிடாய் முடிந்த 7-ஆவது நாளுக்கு பிறகு ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே உடலுறவு கொள்வது நல்லது. காரணம், பெண்களின் கருமுட்டை 1 நாள் மட்டுமே உயிர் வாழும். ஆனால், ஆண்களின் விந்தணு 5 நாட்கள் வரை உயிர் வாழுமென்பதால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் உடலுறவு கொள்வதன் மூலம் நிச்சயம் ஏதாவது ஒரு நாளில் கருமுட்டை விந்தணுவுடன் இணைய வாய்ப்புள்ளது.
5. மனஅழுத்தம் வேண்டாம்:
குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமே என்ற மன அழுத்தத்தை விடுத்து ஆரோக்கியமான முறையில் உடலுறவு கொள்ளுங்கள். நிச்சயமாக அது நடக்கும் என்பதை மட்டும் நம்பினால் போதும். நாம் சரியாக தான் செல்கிறோமா என்ற அழுத்தம் இருத்தல் கூடாது. மனஅழுத்தம் இல்லாமல் முயன்றாலே நிச்சயம் நல்ல பலன் கிடைக்குமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.
6. ஆரோக்கியமான வாழ்க்கை:
உடற்பயிற்சி மூலம் எடையை ஆரோக்கியமாக வைத்திருப்பது நல்லது. இதுவும் கருத்தரிக்க நமக்கு பெரிதும் உதவுகிறது. அதேபோல அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியும் நிச்சயம் கூடாது. நாள் குறித்து அதிகம் யோசிக்காமல் கருத்தரிக்க முயலும்போது எதார்த்தமாக இருப்பதும் மிகவும் நன்மை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாகும்.
கருத்தரிக்க உதவக்கூடிய உணவுகள் எவை?
ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி நிறைந்த காய்கறிகள்:
கீரை:
கேரட்:
கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது
இதுவும் கருத்தரிக்க உதவுகிறது
மாதுளை:
வைட்டமின்-சி நிறைந்துள்ளது
இது ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது
வாழைப்பழம்:
வைட்டமின் – பி6 மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது
இது கருப்பை சுவற்றை பாதுகாக்க உதவுகிறது
முட்டை:
முட்டையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஃபோலிக் அமிலம், கோளின் மற்றும் வைட்டமின் – டி உள்ளது
இது கருத்தரிக்க அற்புதமான மருந்தாகும்
கிழங்கான் மீன்:
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அடங்கியது
இது கர்ப்பம் தரிக்க சிறந்த மீன் உணவாகும்
பால்:
பாலில் கால்சியம் மற்றும் நல்ல கொழுப்பு உள்ளது
மஞ்சள்:
ஆக்சிஜனேற்ற பண்பு அடங்கியுள்ளது
மாதவிடாய் கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகிறது
பூண்டு:
இது கர்ப்பம் தரிக்க சிறந்த ஒரு உணவு பொருளாகும்
இதனால் விந்தணு நகர்வு சிறப்பாக இருக்கும்
அண்டவிடுப்பின் முன் ஒவ்வொரு நாளும் பூண்டு சேர்க்கும்போது கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும்.
ஆலிவ் எண்ணெய்:
இது ஐ.வி.எஃப் சிகிச்சைக்கு செல்லும் தம்பதியினருக்கு நல்ல பலனை தரக்கூடியது
பூசணி விதைகள்:
துத்தநாகம் அதிகமிருப்பதால் இனப்பெருக்க அமைப்பை ஆரோக்கியமாக்குகிறது
அதோடு துத்தநாகமானது, டெட்டெஸ்ட்ரோன் மற்றும் விந்துநீரை அதிகரிக்க செய்து இனப்பெருக்க உறுப்புக்கான இரத்த ஓட்டத்தை சிறப்பாக்குகிறது
ஆளி விதைகள்:
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் லிக்னின் உள்ளது
கருத்தரிக்க அற்புதமான உணவாகும்
பாதாம் பருப்பு:
வைட்டமின் – ஈ மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் பாதாமில் உள்ளது
வால்நட்:
ஒமேகா 3 கொழுப்பு அமிலம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து இதில் நிறைந்துள்ளது
விந்தணு நகர்வை இது மேம்படுத்துகிறது
கருத்தரிப்பதற்கு பல வழிகள் உண்டு. உடலுறவோடு நம்முடைய உள்ளத்தையும் சிறந்த முறையில் வைத்துக்கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல் ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கத்தையும் நாம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. கருத்தரிக்க முயலும் அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.