• Home  /  
  • Learn  /  
  • அடடே! நான் இதெல்லாம் என் பிள்ளைக்காக வாங்க வேண்டுமா?
அடடே! நான் இதெல்லாம் என் பிள்ளைக்காக வாங்க வேண்டுமா?

அடடே! நான் இதெல்லாம் என் பிள்ளைக்காக வாங்க வேண்டுமா?

7 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

பிறந்த பிள்ளைக்காக பெற்றோர்கள் பார்த்து, பார்த்து ஒவ்வொரு பொருளையும் வாங்குவார்கள். ஆனால், ஒரு சிலரோ, கர்ப்பமாக இருக்கும்போதே பிள்ளைக்கு தேவையான விஷயங்களை எல்லாம் நினைவிற்கு கொண்டு வந்து வாங்கி வைத்து விடுவார்கள். எப்போதும், கர்ப்ப காலத்தில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடியுமோ, அவ்வளவு மகிழ்ச்சியாக நாம் இருக்க வேண்டும். பிறக்கவிருக்கும் பிள்ளைக்கு நாம் பொருட்கள் வாங்குவதை விட மகிழ்ச்சியான ஒரு தருணம் நிச்சயம் இருந்துவிட முடியாது. அவை என்ன என்பது பற்றி விரிவாக விளக்குகிறது இந்த சுவாரஸ்யமான பதிவு.

 

நம் பிள்ளைகளுக்கு என்னென்ன வாங்க வேண்டும்?

1. தொட்டில்:

தொட்டில் வாங்கும்போது எப்போதும் ஒரு சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். அவை என்னவென்றால், தொட்டிலுடன் மெத்தை இருப்பது அவசியம். தொட்டில் ஷீட் நன்றாக ஃபிட் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிள்ளைகளால், அந்த தொட்டிலில் நிம்மதியாக தூங்க முடியுமா என்பதை நினைவில் கொண்டு நல்ல தொட்டிலாக வாங்க வேண்டும்.

 

2. பவுன்சி ஷீட்:

ஒவ்வொரு முறையும் பிள்ளையை நாம் தொட்டிலில் போட்டு விட்டு செல்ல முடியாது. சில சமயம் சமையல் வேலையென செல்வோம், சில சமயம் துணி துவைப்போம். அதனால், சின்னதாக நம்முடைய பிறந்த குழந்தைக்கு ஏற்ற பவுன்சி ஷீட் வாங்கி கொள்ளலாம். இது நகரும் வகையில் இருப்பதால், நம்முடைய பிள்ளையையும் அழைத்து செல்வது எளிதான ஒன்றாகும்.

 

3. பார்முலா பால்:

நீங்கள் தாய்ப்பால் அல்லது பார்முலா பால், எது தந்தாலும், அவசரத்துக்கு கூடுதலாக பார்முலா பாலை வைத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால், உங்கள் பிள்ளைகள் அழும்போது அந்த நேரத்தில் பதட்டமாக என்ன செய்வதென புரியாது. அதனால் முன்கூட்டிய ஏற்பாடு அவசியம் வேண்டும்.

 

4. பீடிங் பாட்டில்கள்:

நீங்கள் குறைந்தது ஒரு 10 பீடிங் பாட்டிலாவது வைத்துக்கொள்வது நல்லது. ஆம், ஒவ்வொரு முறையும் அவர்கள் பால் குடித்த பின்பு, அந்த பாட்டிலை கழுவி வர நமக்கு நேரமிருக்காது. அதனால், கூடுதல் பாட்டில்கள் நம்மிடம் இருப்பது மிகவும் நல்லது.

 

5. டயாப்பர்கள்:

ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் டயாப்பர்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். புதிதாக பிறந்த குழந்தைக்கு இது போன்ற டயாப்பர்கள் தான் சவுகரியத்தை தரும்.

 

6. நியூ கார் சீட்:

கார் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கானது இது. இதனை நீங்கள் கண்டிப்பாக கவனத்தில் கொள்ளவும். இது உங்கள் பிள்ளைகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

 

7. டிஜிட்டல் தெர்மோமீட்டர்:

நம்முடைய பிள்ளைகளால் இப்போது வரக்கூடிய காய்ச்சலை எளிதில் சமாளிக்க முடியாது. அதனால், முடிந்தவரை அவர்களின் வெப்பநிலையை தொடர்ந்து நாம் கண்காணிக்க வேண்டும். அவர்களுடைய காய்ச்சல் அதிகமானால், அது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.

 

8. பிரெஸ்ட் பம்ப்:

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தி பாட்டில்களில் பாலை நிரப்பி வைத்துக்கொள்ளலாம். உங்களால் முடியாத சமயத்தில், உங்களின் கணவர் அல்லது பெற்றோர் பால் கொடுக்க இந்த முறை எளிதாக இருக்கும்.

 

9. டயாப்பர் ராஷஷ் கிரீம்:

பிறந்த பிள்ளைகளுக்கு ராஷஷ் வருவது பொதுவான பிரச்சனையே. அதனால், அதற்கான பக்க விளைவுகள் ஏற்படுத்தாத கிரீமை நாம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

 

10. பேபி பெட் புரொடெக்டர்:

பெட் மீது இந்த புராடெக்டரை பயன்படுத்துவது பெட்டை பத்திரமாக பாதுகாக்கும். ஆனால், நீங்கள் வாங்கும் பெட் புரொடெக்டர் பாதுகாப்பானது தானா, பிள்ளைகளுக்கு ஏற்றதா என்பதை பார்த்து வாங்கவும்.

 

11. பேபி வாஷிங் பவுடர்:

பிறந்த பிள்ளைகளின் சருமம் மிகவும் உணர்திறன் கொண்டதாக இருக்கும். அதனால், அவர்களுடைய துணியை துவைக்க பயன்படுத்தும் பவுடர் போன்ற பொருட்கள் உபயோகத்தில் மிகுந்த கவனம் நமக்கு வேண்டும். இல்லையேல் ராஷஷ் வர வாய்ப்புண்டு.

 

12. குளியல் பொருட்கள்:

குழந்தைகளை குளிப்பாட்ட பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு, மசாஜ் ஆயில், மாய்ஸ்ரைஸர், பவுடர் போன்ற பொருட்களில் கூடுதல் கவனம் நமக்கு தேவை. அதேபோல, வட்ட வடிவ சீப்பு அல்லது மிருதுவான பிரஷ், பேபி நெயில் கட்டர் போன்றவற்றையும் நாம் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. அதேபோல, நம் பிள்ளைகளின் வெளிப்புற காதுகளை மட்டுமே சுத்த செய்ய வேண்டும் என்பதை மறவாதீர்.

 

13. கொசு வலை:

நீங்கள் இருக்கும் இடத்தில் கொசு அதிகமாக இருந்தால், கொசு வலை வாங்கி வைத்திருப்பதை கட்டாயம் உறுதி செய்யவும். இது உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த தூக்கத்தை நிச்சயம் தருகிறது.

 

14. மருந்துகள்:

காய்ச்சல், கோலிக் போன்ற பிரச்சனைகளுக்கு தேவையான மருந்துகளை டாக்டர் பரிந்துரையுடன் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல குளிர்ச்சியான பகுதியில் அதனை வைத்துக்கொள்ளவும். கூடுதலாக முதலுதவி மருத்துவ கிட், அவசர உதவி எண்களையும் நாம் வைத்துக்கொள்ளலாம்.

 

15. பொம்மைகள் மற்றும் பொழுதுபோக்கு:

இப்போது நம்முடைய பிள்ளைகளுக்கு ஆடம்பரமான விளையாட்டு பொருட்கள் கண்டிப்பாக தேவைப்படாது. ஆனால், சில கிளுகிளுப்பைகள், இசை கேட்கும் பொம்மைகள் (மியூஸிக்கல் பொம்மைகள்), மென்மையான பொம்மை போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

என்ன நண்பிகளே! இந்த சுவாரஸ்யமான பதிவின் மூலம் உங்களின் பிள்ளைக்கு என்னவெல்லாம் வீட்டில் வாங்கி வைக்கலாம் என்பதை படித்து அறிந்திருப்பீர்கள். நம்முடைய உலகமென நினைக்கும் நம் பிள்ளைகளுக்கு நல்லதோர் வாழ்வை அமைத்து தந்து அவர்கள் எதிர்காலத்தை பிரகாசமாக்கலாமே.

#pregnancymustknow

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.