7 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
பெண்களுக்கு மாதந்தோறும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை மாதவிடாய் தான். எவ்வளவு சுறுசுறுப்பான பெண்களும் இந்த மாதவிடாயின் முதல் 3 நாட்கள் மிகவும் சோர்வாகவே காணப்படுவர். அதை தாண்டி, மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணுடைய வாழ்வில், மிகப்பெரிய வலியை மனதளவிலும், உடளவிலும் தந்துவிடுகிறது. இந்த சமூகமும் இன்று வரை மாதவிடாயை தீண்டாமையாக மட்டுமே பார்க்கிறதே தவிர, நாம் அனுபவிக்கும் வேதனையை புரிந்துக்கொள்வதே இல்லை. இதற்காக வருடந்தோறும் ஒரு தொகையை ஒதுக்க வேண்டியும் உள்ளது. இதை கடந்து தொற்று பிரச்சனை ஒருபக்கம். இவ்வளவு இன்னல்களை தரும் மாதவிடாயை சமாளிப்பது எப்படி என்பதை இந்த பயனுள்ள பதிவு விளக்குகிறது.
பேடுகள் என்றால் என்ன?
இது செவ்வக வடிவில் இருக்கும் உறிஞ்சும் பொருளாகும். இதனை பெண்கள் அவர்களின் கீழாடை உள் வைத்து, மாதவிடாய் இரத்தம் வெளியில் தெரியாமல் இருக்க போராடுவார்கள். இதனை நாப்கின் என்றும் அழைப்பர். இப்போது வரும் பேடுகளில் ரத்தக்கசிவை எவ்வளவு மறைக்க முடியுமோ, அவ்வளவு மறைக்க லேயர்கள் காணப்படுகிறது. இதன் விளிம்புகள் மடிக்கும் நிலைக்கு கீழாடை உள்ளே வைக்க சவுகரியத்தை வழங்குகிறது.
பேடுகளில் என்னென்ன வகை உண்டு?
சில பெண்களுக்கு அதிகமாக இரத்தப்போக்கு இருக்கும். சிலருக்கு கம்மியாகவும் இருக்கும். பேடுகள் வெவ்வேறு சைஸ்களில் வருகிறது. பெரிய பேடுகள் அதிக இரத்தத்தை உறிஞ்சக்கூடியது என்றாலும், சிறிய பேடுகள் உள்ளே வைக்க சவுகரியத்தை தருகிறது. ஆனால், பயன்படுத்த, பயன்படுத்த தான் எது நமக்கு சரியானது என்பதை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும்.
சில பேடுகள் வாசனை அடங்கியதாக வருகிறது. ஆனால், இவை நம்முடைய பிறப்புறுப்பில் எரிச்சலை ஏற்படுத்தும். அலர்ஜியை உண்டாக்கவும் வாய்ப்புள்ளது.
டேம்போன் என்றால் என்ன?
பிறப்புறுப்பின் உள்ளே வழியும் இரத்தத்தை உறிஞ்ச டேம்போன் உதவுகிறது. இது பார்க்க சின்ன டியூப் போன்று இருக்கும். டேம்போன், வெவ்வேறு சைஸ்களில் வருகிறது.
டேம்போன்கள் வீசும் வாடையை அகற்ற உதவுகிறது. ஆனாலும், இதன் வாசம் நம்முடைய பிறப்புறுப்பில் எரிச்சலை ஏற்படுத்தலாம். அலர்ஜியும் வர வாய்ப்புள்ளது.
டேம்போன்களை சொருகுவதற்கு எளிதாக பிளாஸ்டிக் அல்லது கார்ட்போர்டு டியூப்புகள் அதனுடன் வருகின்றன. ஆனால், மற்ற டேம்போன்கள் விரல் பயன்படுத்தி சொருகும் வகையில் இருக்கும்.
இந்த வகை டேம்போன்கள், மாதவிடாயை முதன் முதலில் அனுபவிக்கும் பெண்களுக்கு கூடுதல் சவுகரியத்தை தரும் ஒன்றாகும்.
டேம்போன்களை பயன்படுத்துவது எப்படி?
பிளாஸ்டிக் அல்லது கார்ட்போர்டு டியூப்புகள் பயன்படுத்தி டேம்போனை பிறப்புறுப்பில் சொருகலாம். கைகளை சுத்தமாக கழுவிவிட்டு, வழிமுறைகளை கவனமாக படித்து டேம்போன்களை உபயோகிக்கவும்.
டேம்போனில் நூல் போன்ற ஒன்று தொங்கும். அது நம்முடைய உடம்பின் வெளியில் வந்திருக்கும். டேம்போனை அகற்றும்போது, அந்த நூல் போன்ற அமைப்பை மெல்ல வெளியில் எடுக்கவும். டாய்லெட் பேப்பர் கொண்டு எடுத்து குப்பைத்தொட்டியில் வீசவும்.
ஒருவேளை டேம்போன்களை மாற்ற நீங்கள் மறந்துவிட்டால், உதிரப்போக்கு அல்லது கசிவை காணக்கூடும்.
டேம்போனை மாற்றும்போது நூலை மெல்ல தேடி பிடிக்கவும், அவசரம் வேண்டாம். அதனை தேடி பிடிப்பது கொஞ்சம் கடினமாகவே இருக்கும்.
ஒரு சிலர் டேம்போன் உள்ளே போய்விட்டது என்று கூட நினைப்பர். ஆனால், இதற்கு வாய்ப்பே இல்லை.
மென்சஸ் கப் என்றால் என்ன?
டேம்போன் போன்றது தான் மென்சஸ் கப்பும். பிறப்புறுப்பில் வைப்பது தான் மென்சஸ் கப்பும். இதில் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு பதிலாக கப்பில் தங்குகிறது. இந்த கப்புகள், ரப்பர் அல்லது சிலிக்கானால் ஆனது.
கப் கவரில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாக பின்பற்றவும் வேண்டும்.
மென்சஸ் கப்புகள் மீண்டும் பயன்படுத்தக்கூடியது, பாதுகாப்பானதும் கூட. இதில் இரத்தம் தங்கி விடுவதால் தொற்று ஏற்பட வாய்ப்பு மிகக்குறைவு.
இரண்டு வகையான மென்சஸ் கப்புகள் உள்ளன. அவை பிறப்புறுப்பில் வைப்பது, இன்னொன்று கர்ப்ப பைக்கானது.
மென்சஸ் கப் பயன்கள் என்னென்ன?
கப்புகள், மீண்டும் பயன்படுத்தக்கூடியது என்பதால் இதற்கு செய்யப்படும் செலவு பேடுகளை காட்டிலும் மிக மிக குறைவே. அதேபோல டேம்போன், பேடுகளை காட்டிலும் அதிக இரத்தப்போக்கை கப்பானது சேமிக்கிறது.
கப்புகள் பயன்படுத்தும்போது கசிவென்பது மிக குறைவால், உறக்கத்தில் எந்தவித இடைஞ்சலையும் ஏற்படுத்துவதில்லை.
பேடுகள் மற்றும் டேம்போன்கள் வாசனை அடங்கி வருவதால் அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும். ஆனால், மென்சஸ் கப்புகளில் இந்த வித பிரச்சனை இல்லை.
எது சிறந்தது?
அதனை முடிவு செய்வது உங்கள் கைகளில் உள்ளது. சில பெண்கள் டேம்போன்களை பயன்படுத்த விரும்புகின்றனர். ஏனென்றால், பர்ஸ் அல்லது பாக்கெட்டில் இதனை வைக்க எளிது. ஆனால் சில பெண்கள் பேடுகளை பயன்படுத்துகின்றனர், ஏனென்றால், பேடுகள் நனைவதை எளிதில் அடையாளம் காண முடியும். அதனால் மாற்றவும் மிக எளிதான விஷயமாக இது இருக்கிறது.
சில பெண்கள் சூழ்நிலையை பொறுத்து மாற்றி பயன்படுத்துவதாகும் சொல்கிறார்கள்.
ஆம், ஒரு சிலர் பயணங்களின் போது, அதற்கு ஏற்றார் போல கப்பை பயன்படுத்துகின்றனர். பயணங்களின் போது பேடுகள் சவுகரியமாக இருக்காது.
உங்களுக்கு இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், அதற்கு ஏற்றார் போல கப்புகளை கூடுதலாக வாங்கி வைத்து கொள்ளலாம்.
மாதந்தோறும் வரும் மாதவிடாயை வென்று, அந்த 3 நாட்களையும் சகஜமாக கடக்க பழகுவோம் வாருங்கள்.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.