தொப்புள் கொடி ஸ்டெம் செல் சேமிப்பு குறித்து நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

cover-image
தொப்புள் கொடி ஸ்டெம் செல் சேமிப்பு குறித்து நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

ஸ்டெம் செல்களின் பயன்களை ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவை சேதமடைந்த உறுப்பு அல்லது திசுக்களை மாற்றியமைக்க பயன்படும் ஒன்றாகும். பல மரபணு குறைபாடுகளுக்கு ஸ்டெம் செல்கள் உதவுவதை ஆய்வுகள் நிரூபித்துள்ளது. அதனால் தான், பிள்ளைகள் பிறக்கும்போது தொப்புள் கொடி இரத்தத்தை சேமித்து வைக்கும் வசதியை இரத்த வங்கிகள் வழங்குகிறது. இதை பற்றிய விரிவான தகவலை இந்த பயனுள்ள பதிவின் மூலம் இப்போது நாம் காணலாம்.

 

தொப்புள் கொடி இரத்த வங்கி பற்றி நாம் அறிய வேண்டியது எது?

இந்த இரத்த வங்கிகள், உயிரை காக்கும் ஸ்டெம் செல்களை தொப்புள் கொடி மற்றும் நஞ்சுக்கொடியிலிருந்து சேமித்து பிற்கால தேவைக்காக வைத்துக்கொள்ள உதவுகிறது. இந்த ஸ்டெம் செல்கள் முதிர்ச்சியடையாத செல்கள் ஆகும். அவை மற்ற உயிரணுக்களின் வடிவத்தை பெறலாம்.

தொப்புள் கொடி உறவென்பது தாய்க்கும் சேய்க்குமான பந்தத்திற்கு சிறந்த உதாரணமாகும். முன்பெல்லாம், இதன் அருமை தெரியாமல் வீணடித்தனர். ஆனால், இப்போதோ பல பெற்றோர்கள் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதனை சேமித்து வைக்க தொடங்கிவிட்டனர்.

 

இது எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?

ஸ்டெம் செல்களுடன் தொப்புள் கொடி இரத்தம் இருக்கும். இவை புற்றுநோய், இரத்த சோகை என சில எதிர்ப்பு சக்தி பிரச்சனைகளுக்கும் தீர்வை தருகிறது.

இவை சேகரிக்க எளிதானது. இது, எலும்பு மஜ்ஜையில் இருந்து சேகரிக்கப்பட்டதை விட பத்து மடங்கு கூடுதலான ஸ்டெல் செல்களை கொண்டுள்ளன.

 

இதனை எப்படி பெறுவது?

இந்த இரத்தத்தை நீங்கள் சேமிக்க விரும்பினால், தொப்புள் கொடியில் டாக்டர்கள் இரண்டு இடங்களில் கிளிப் போட்டு கட் செய்வார்கள். அதாவது 10 இன்ச் தள்ளி கட் செய்வார்கள். அதன்பிறகு ஒரு நீடிலை சொருகி, குறைந்தது 40 மில்லி லிட்டர் இரத்தத்தை தொப்புள் கொடியிலிருந்து சேகரிப்பார்கள். அந்த இரத்தம், ஒரு பேக்கில் சீல் செய்யப்பட்டு ஆய்வகம் அல்லது தொப்புள் கொடி வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த செயல்பாட்டில் தாய் மற்றும் பிள்ளைக்கு எந்தவொரு வலியும் இருப்பதில்லை.

ஸ்டெம் செல் வங்கி, டியூப்களையும் அனுப்புவதால், அம்மாக்களின் இரத்தமும் எடுக்கப்படக்கூடும். வங்கிகள் சேகரிப்பதற்கு உண்டான வழிமுறைகளையும் நம்மிடம் வழங்குகிறது.

 

எங்கே சேமிக்கப்படுகிறது?

அரசு ஸ்டெம் செல் வங்கிகள்:

இதற்கு நாம் எந்த தொகையும் செலுத்த வேண்டியதில்லை. அதோடு, யாருக்காவது தேவைப்பட்டாலும் டொனேட் செய்வார்கள். அதோடு, வங்கி, ஆய்வுக்காக இந்த இரத்தத்தை உட்படுத்தவும் செய்யும்.

 

தனியார் ஸ்டெம் செல் வங்கிகள்:

இது டோனர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யாராலும் பயன்படுத்த முடியாது. ஆனாலும், இது கொஞ்சம் காஸ்ட்லி தான். இந்த வங்கிகள் செயல்படுத்தவும், வருடாந்திர சேமிப்பு தொகையையும் உங்களிடம் பெற்றுக்கொள்ளும்.

டைரக்ட்-டொனேஷன் வங்கிகள்: இவை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டாக நடத்தும் ஒரு வங்கியாகும். இவை, பொது பயன்பாட்டிற்காக பாதுகாக்கப்படுகிறது. எந்தவித கட்டணமும் வசூலிக்கவில்லை.

 

யாருக்கெல்லாம் உதவும்?

சகோதரன் அல்லது சகோதரி, யாராக இருந்தாலும் 25% மரபணு பொருத்தம் கண்டிப்பாக இருக்க வாய்ப்புள்ளது. உடன்பிறந்தவர்களுக்கு தொடர்பில்லாத டோனரிடமிருந்து எலும்பு மஜ்ஜை அல்லது தொப்புள் கொடி இரத்தம் தேவைப்படலாம்.

நீங்கள் இரத்தத்தை சேகரிக்க முடிவு செய்தால், மனதில் கொள்ள வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். பிள்ளை பிறக்கும் முன்பே இரத்த வங்கியுடன் ஆலோசித்து தேவையான தகவல்களை பெற்றுவிடுவது மிகவும் நல்லது.

 

எதிர்காலத்தில் எதற்கெல்லாம் உதவும்?

ஸ்டெம் செல்கள் உங்களுக்கு எப்படி எதிர்காலத்திற்கு பயன்பட போகிறதென்பது யூகிக்க முடியாத ஒன்றாகும். ஆனாலும், ஆராய்ச்சியாளர்கள் இவை அல்சைமரின் நோய், சர்க்கரை நோய், இதய குறைபாடு, தண்டு வட பாதிப்பு போன்றவற்றை குணப்படுத்தலாம் என்கின்றனர்.

இப்போது இந்த ஸ்டெம் செல்கள் பயன்படாமல் போனாலும், பிறகு என்றாவது ஒருநாள் நிச்சயம் பயன்பட வாய்ப்புண்டு.

எனவே, கர்ப்பமாக இருக்கும்போதே ஸ்டெம் செல்களை சேமிப்பது குறித்து உங்களின் கணவர் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாடி, விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். நம்முடைய பிள்ளைகளுக்கு நல்லதோர் எதிர்காலத்தை அமைத்து தரலாம்.

#stemcell #pregnancymustknow
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!