• Home  /  
  • Learn  /  
  • சிசேரியனுக்கு பின் எடையை குறைக்க என்ன தான் வழி?
சிசேரியனுக்கு பின் எடையை குறைக்க என்ன தான் வழி?

சிசேரியனுக்கு பின் எடையை குறைக்க என்ன தான் வழி?

10 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

கர்ப்பமாக இருக்கும்போது பிள்ளையை காண போகும் ஆர்வத்தில் ஒரு சில விஷயங்களை கண்டுக்கொள்ள மாட்டோம். அவற்றுள் ஒன்று நம்முடைய உடல் எடை. பிள்ளை பிறந்த பின்பு தான், ‘அடடா! இவ்வளவு எடை போட்டு விட்டோமே! எப்படியாவது குறைத்தாக வேண்டுமே…’ என தோன்றும். என்ன செய்வதென குழப்பமும் இருக்கும். ஆம், சிசேரியன் தையல் போட்டுக்கொண்டு எதை செய்வது? செய்யக்கூடாது? என அம்மாக்கள் புரியாமல் தவிப்பர். அதுவும் உண்மை தான். சிசேரியன் புண் முழுமையாக ஆற, ஆறு வாரங்களாவது ஆகும் என்பதால் எடையை குறைக்க யோசனையுடனும் இருக்கத்தான் செய்வோம்.

இப்போது ஆரோக்கியமான வழியில், சிசேரியனுக்கு பின் எடையை குறைப்பது எப்படி என இந்த பயனுள்ள பதிவின் மூலம் நாம் காணலாம் வாருங்கள்.

 

1. தாய்ப்பாலூட்டுவது:

நீங்கள் தாய்ப்பால் தரும் அம்மாக்களாக இருந்தால், இதை விட ஒரு அற்புதமான வழி இருக்கவே இருக்காது. ஆம், தாய்ப்பால் தருவதனால் நம்முடைய பிள்ளைகளின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படுவதோடு, நம் உடலில் உள்ள கூடுதல் கலோரிகள் குறைந்து மீண்டும் நாம் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.

 

2. ஆரோக்கியமான உணவு:

கர்ப்பமாக இருக்கும்போது ஆரோக்கியமான உணவை சாப்பிட்டது போல எடை குறையவும் இதனை நாம் செய்ய வேண்டும். உங்கள் உடல் எடை அதிகரிக்க முக்கியமான காரணம் தேவையற்ற உணவுகளை சாப்பிடுதல். நீங்கள் வைட்டமின்கள் மற்றும் மினெரல்கள் அடங்கிய உணவுகளை சேர்த்துக்கொண்டு, அதிக கலோரி உள்ள உணவை தவிர்த்தாலே போதும். இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பலாம்.

 

3. உடற்பயிற்சி செய்தல்:

இது நம்முடைய உடல் எடையை குறைக்க அற்புதமான வழியாகும். ஆனாலும், மிகவும் கடினமான உடற்பயிற்சிகளை சிசேரியன் செய்த பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். மெல்ல நடந்து செல்லுதல் கூட உங்கள் உடல் எடையை குறைக்க உதவும் ஒரு பயிற்சி தான்.

 

4. இனிப்புக்கு ‘நோ’ சொல்லுங்கள்:

சர்க்கரை என்பது அதிக கலோரி கொண்ட உணவாகும். அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்ளும்போது உடல் எடை கூடுதல், சர்க்கரை வியாதி, இதய நோய் கூட வர வாய்ப்புள்ளது. அதனால், பேக்கரிகளில் விற்கும் கேக், பிஸ்கட்டுகள், ஜாம் வகைகள், பழ ஜூஸ், இனிப்பான குளிர்பானம், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை கூட தவிர்க்கவும். ஒருவேளை இனிப்பாக சாப்பிட ஆசை இருந்தால், ஃபிரெஷ்ஷான பழங்கள், காய்ந்த பழங்களை நாம் சாப்பிடலாம்.

 

5. உண்மையை ஏற்றுக்கொள்ளுதல்:

ஒவ்வொரு உடலும் வித்தியாசப்படும். உங்கள் தோழி செய்தார் என்பதற்காக ஒரு சில விஷயத்தை நீங்களும் செய்து பார்த்து, பலன் கிடைக்கவில்லை என புலம்புவது தேவையற்ற மன உளைச்சலையே உண்டாக்கும். அதோடு, செரிமான அமைப்புகள், வளர்சிதை மாற்றங்கள், சாப்பிடும் அளவு போன்றவை எல்லாம் ஒவ்வொருவருக்கும் மாறும்.

 

6. நீர்ச்சத்து தேவை:

தாய்ப்பாலூட்டும் அம்மாக்களுக்கு நீர்ச்சத்து அவசியம். நீர்ச்சத்து, நம்முடைய உடலிலுள்ள கூடுதல் கலோரிகளை குறைத்து உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

 

7. வீட்டில் செய்த உணவு:

வீட்டில் செய்த உணவு சுகாதாரமானது. அதோடு, நமக்கு ஏற்றார் போல இருக்கக்கூடியது. இந்த சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடுவதன் மூலம் நம்முடைய உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்கலாம்.

 

8. அருகில் செல்லுதல்:

அருகில் உள்ள கடை, சூப்பர் மார்க்கெட், விருந்தினர் வீட்டுகளுக்கு நடந்தே செல்லலாம். நடக்கும்போது அதிக வலி இருந்தால் தூரத்தை குறைத்துக்கொள்ளவும். உட்கார்ந்துக்கொண்டே போன் பேசுவதை விட நடந்துக்கொண்டும் பேசலாம்.

 

சிசேரியனுக்கு பிறகு சாப்பிட வேண்டிய உணவுகள் எவை?

1. ஆரஞ்சு போன்ற பழங்களும், கீரை போன்ற காய்கறிகளையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம்.

2. பாதாம் பருப்பு, வால்நட் போன்ற பருப்பு வகைகளையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம்.

3. பார்லி, ஓட்ஸ் போன்ற தானியங்களும் இப்போது நமக்கு நல்லது.

 

சிசேரியனுக்கு பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை?

1. வறுத்த உணவு, கடலை மாவில் செய்த உணவு, சர்க்கரை சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

2. பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு, ஃபாஸ்ட் புட், ஃபிரிட்ஜில் வைத்த உணவு, சிப்ஸ், பிஸ்கட்டுகள் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

சிசேரியனுக்கு பின் உடல் எடையை குறைக்க இந்த பதிவு பயனுள்ளதாக இருந்திருக்குமென நாங்கள் நம்புகிறோம். ஆரோக்கியமான உணவை உண்டு, வளமாக வாழலாம் வாருங்கள்.

#momfit #fitness

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.