• Home  /  
  • Learn  /  
  • கருமுட்டை வெளியாகும் நாளை (ஓவுலேசன்) அறிய வழிகள்
கருமுட்டை வெளியாகும் நாளை (ஓவுலேசன்) அறிய வழிகள்

கருமுட்டை வெளியாகும் நாளை (ஓவுலேசன்) அறிய வழிகள்

11 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் சந்தேகமிது. கருமுட்டை எப்போது வெளியாகும் என்பது தான் அது. சினைப்பையில் இருந்து ஒரு முதிர்ச்சியடைந்த முட்டை வெளியாவதை அண்டவிடுப்பு (ஓவுலேசன்) என்கிறோம். இந்த முட்டையானது, அதன் பின் ஃபெலோபியன் குழாய்க்கு செல்கிறது.

அண்டவிடுப்புக்கு முக்கியமான ஒரு ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன் ஆகும். பீரியட் சுழற்சியின் ஆரம்ப நிலையில் இதன் லெவல் கம்மியாக இருக்கும். அதன்பிறகு படிப்படியாக அதிகரித்து ஒரு ஹார்மோனை தூண்டி முட்டையை வெளியிட செய்கிறது.

 

எப்போது கருமுட்டை வெளியாகும்?

பொதுவாக பெண்களுக்கு 14-ஆவது நாள் கருமுட்டை வெளியாகும். அதாவது, 28 நாள் மாதவிடாய் சுழற்சி உள்ள பெண்களுக்கு இப்படி நடக்கும். இது பெண்ணுக்கு பெண் மாறுபடவும் செய்கிறது. அவர்களின் சுழற்சி நிலை பொறுத்தே இது அமையும். குறைந்தது மூன்று மாதங்களாவது மாதவிடாயை கவனிப்பதனால், உங்கள் மாதவிடாய் சுழற்சி ஒழுங்கானதா? ஒழுங்கற்றதா? என்பது தெரிய வரும்.

 

நீங்கள் எப்போது கருவுருவீர்கள்?

28 நாட்கள் மாதவிடாய் சுழற்சியில், ஆறாவது நாளுக்கு மேல் கருத்தரிக்க உகந்த நாட்கள் எனப்படும். அதாவது அண்டவிடுப்புக்கு ஐந்து நாள் முன்னரை கருத்தரிக்க உகந்த நாள் என சொல்லப்படுகிறது. ஏனென்றால், மூன்று முதல் ஐந்து நாட்கள் ஆணின் விந்தணுக்கள் பெண் உடம்பில் வாழும். இந்த ஆறு நாட்களில் நீங்கள் உடலுறவு கொள்வதன் மூலமாக, கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ளது. ஆம், வெளியான விந்தணு, கருமுட்டையுடன் இணைய காத்திருக்கும். கருமுட்டை வெளியான உடன் இது ஃபெலோபியன் குழாயில் உள்ள விந்தணுவுடன் இணைந்து விடும்.

கருமுட்டை வெளியாவதை கணக்கிடுவது எளிதான காரியமல்ல என்றாலும், ஒரு சில அறிகுறிகளை கொண்டும் நாம் இதனை கணக்கிடலாம்.

 

கருமுட்டை வெளியாவதற்கான அறிகுறிகள் என்னென்ன?

1. கர்ப்பப்பை வாய் சளி அதிகரித்தல்:

கருமுட்டை வெளியாவதற்கு முன்பு, ஒன்பது நாட்களில் இருந்து கர்ப்பப்பை வாய் சளி அதிகரித்து காணப்படும். இது நான்கு நாட்கள் முன்பு மிக அதிகமாகவும் இருக்கக்கூடும். இது முட்டையின் வெள்ளை நிறத்தை போன்றிருக்கும். பிசுபிசுவெனவும் இருக்கும்.

 

2. உடலின் வெப்பநிலை அதிகரித்தல்:

கருமுட்டை வெளியாவதற்கு முன், உடலின் வெப்பநிலை குறைந்து காணப்படும். அதுவே கருமுட்டை வெளியான பிறகு, உடலின் வெப்பநிலை அதிகமாக காணப்படும். இதற்கு காரணம் புரோகிராஸ்ட்ரோன் லெவலாகும். உங்களின் உடல் வெப்பநிலை அதிகரித்தால், கருமுட்டை வெளியாகிவிட்டதென அர்த்தமாகும். இதனை கணக்கில் கொண்டும் நாம் கருமுட்டை வெளியாகும் நாளை கணக்கில் வைத்திருக்கலாம்.

 

3. கருப்பை வாய்ப் பகுதியில் மாற்றம்:

கருப்பை லேசாக திறக்கும் அளவிற்கு இருப்பது, நன்றாக உயர்ந்து, மென்மையாகி, விரிந்து காணப்படும். இப்படி நம்முடைய கருப்பை வாய்ப் பகுதி காணப்படுவதை நாம் உணர்ந்தால், சுத்தமான விரலை பிறப்புறுப்பில் விட்டு பார்க்கும்போது, நம்மால் முக்கிய பகுதியை லேசாக தொட முடியும். இதனை தினமும் செய்து பார்த்து கருமுட்டை வெளியாகும் நாளை கண்டுபிடிக்கலாம்.

 

வேறு என்னவெல்லாம் அரிதான அறிகுறியை காண முடியும்?

1. லேசான இரத்தக்கசிவு:

சில பெண்கள், மாதத்தின் நடுவில் இளஞ்சிவப்பு நிற அல்லது பிரவுன் நிற கசிவை உணர்வார்கள். அதாவது உற்பத்தியாகும், புரோகிராஸ்ட்ரோன் போதுமான அளவு இல்லாது இருக்கும்.
இதன் காரணமாக இரத்தக்கசிவு காணப்படும்.

 

2. இடுப்பு வலி:

இடுப்பின் ஒருப்பக்கத்தில் உங்களுக்கு அடிவயிற்றில் வலியும், பிடிப்பும் இருக்கலாம். இதுவும் கருமுட்டை வெளியாவதற்கான ஒரு அறிகுறியாகவே உள்ளது.

 

3. மார்பக புண்:

ஹார்மோன்கள் மார்பகத்தை தூண்ட இதனால் மார்பகமானது விரிவடைகிறது. இந்த காரணத்தால், மென்மை அடைந்து புண் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆனால், கருமுட்டை வெளியாவதை இதை மட்டுமே கொண்டு கணக்கிடுவதும் சிரமமான ஒரு விஷயம்.

 

4. உப்பி காணப்படுதல்:

வயிற்று பகுதி தண்ணீரை தக்க வைத்துக்கொள்கிறது. இதனால் உப்பி காணப்படுகிறது. இருப்பினும், மாதவிடாயின் முதல் நாளும், நீரை வயிற்றுப்பகுதி தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

 

5. பாலுணர்ச்சி அதிகரித்தல்:

எஸ்ட்ரோஜன் லெவல் அதிகரிப்பதன் காரணமாக உடலுறவில் ஆர்வம் அதிகம் காணப்படும். ஆனாலும், இந்த அறிகுறி கருமுட்டை வெளியான பின்பும் ஏற்படும்.

 

6. நாடித்துடிப்பு அதிகரித்தல்:

கருமுட்டை வெளியாகும்போது நாடித்துடிப்பு அதிகரித்து காணப்படும். ஆனால், இது மாதவிடாயின்போது குறைந்தும் காணப்படும். அதே கருமுட்டை வெளியாகும்போது இரண்டு முதல் ஐந்து நாட்களுக்கு முன்பு அதிகமாக காணப்படும். அதாவது, ஒரு நிமிடத்துக்கு இரண்டு தடவை துடிக்கும்.

நண்பிகளே, கருமுட்டை வெளியாவது குறித்த உங்கள் சந்தேகத்திற்கு பதில் கிடைத்திருக்குமென நம்புகிறோம். உங்களுக்கு ஒழுங்கான மாதவிடாயா? ஒழுங்கற்ற மாதவிடாயா? நீங்கள் கருமுட்டை வெளியாவதை எப்படி உணர்ந்துக்கொள்ள முயல்கிறீர்கள் என்பதை நீங்களும் மற்ற அம்மாக்களோடு பகிர்ந்துக்கொள்ளலாமே.

#momhealth #planningababy

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.