12 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
கர்ப்பமாக இருக்கும்போதும், பிரவத்திற்கு பிறகும் நம் உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகிறது. அடிவயிற்றில் ஏற்படும் வலி தொடங்கி, மன நிலையில் ஏற்படும் மாற்றம் வரை என பல மாறுதல்களை நாம் நிச்சயம் காணக்கூடும்.
சிசேரியன் செய்ய வேண்டுமென மருத்துவர்கள் சொன்னதும் நமக்குள் எழும் முதல் கேள்வி, சிசேரியனுக்கு பிறகு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பற்றியது தான். இது குறித்த பயனுள்ள தகவலை இப்போது நாம் காண்போம்.
சிசேரியன் புண்ணை குணப்படுத்துவது எப்படி?
ஓய்வில் இருப்பது:
நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஓய்வில் இருங்கள். உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் தேவையானவற்றை எல்லாம் அருகில் வைத்துக்கொள்வது நல்லது. முதல் சில வாரங்களுக்கு, பிள்ளையை தவிர எதையும் நாம் தூக்க கூடாது.
வலி நிவாரண மாத்திரை:
டாக்டர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே வலிக்கு மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும், டாக்டர் பரிந்துரையின்றி நாமாக எந்த மாத்திரையையும் எடுத்துக்கொள்ள கூடாது.
தொற்று இருக்கிறதா என பார்த்தல்:
நமக்கு சிசேரியன் தையல் போட்ட இடத்தில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். உங்களின் காயம் சிவந்து போய் இருத்தல், வீக்கமாக இருத்தல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் டாக்டரை பார்க்கவும்.
சிசேரியனுக்கு பிறகு தாய்ப்பால் எப்படி தருவது?
சிசேரியனுக்கு பிறகு நாம் தாய்ப்பால் தரலாம். ஆனால், ஒரு சில நிலையில் வைத்து இப்போது நாம் தாய்ப்பால் தருவது நல்லது. அவை,
1. ஃபுட்பால் பிடிப்பது போன்று:
உங்களின் சவுகரியத்துக்காக, உங்கள் பக்கவாட்டில் தலையணை வைக்கலாம். கூடுதல் சவுகரியத்துக்கு நாற்காலியையும் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களின் முழங்கையை மடக்கிக்கொண்டு, பக்கவாட்டில் உங்கள் பிள்ளைகளை பிடிக்கவும். உங்களின் இன்னொரு கையால் பிள்ளையின் தலையை பிடித்துக்கொண்டு, உங்களின் மார்பு நோக்கி பிடித்துக்கொள்ளவும். உங்களின் பிள்ளை முதுகு தலையணையிலும், முன்னங்கையிலும் தாங்கலாக இருக்க வேண்டும்.
2. ஒருப்பக்கமாக படுத்து பிடிப்பது போன்று:
உங்களின் பக்க வாட்டில் படுத்துக்கொண்டு, ஒருப்பக்கத்தில் பிள்ளையை பிடித்துக்கொள்ளவும். அதாவது உங்களின் மார்பகம் நோக்கி பிடித்துக்கொள்ள வேண்டும். குழந்தையை ஒற்றை கைகளால் தாங்கலாகவும் பிடித்துக்கொள்ளவும். இன்னொரு கையால், பிள்ளையின் வாயால் உங்கள் முலைக்காம்பை தொடும் அளவுக்கு இருக்கவும். உங்கள் பிள்ளைகள் சரியாக பால் குடிக்க ஆரம்பித்தவுடன், அவர்கள் தலையை கைத்தாங்கலாக பிடித்திருப்பதை உறுதி செய்துக்கொள்ளவும்.
வேறு என்னவெல்லாம் இப்போது நமக்கு இருக்கும்?
உங்களின் மார்பகத்தின் முலைக்காம்பை சுற்றி சருமம் அடர் நிறத்தில் வட்டமாக இருந்தால், தாய்ப்பால் குடிப்பது நம்முடைய பிள்ளைக்கு கடினமாக இருக்கலாம். மார்பகத்தில் ஏற்படும் அசவுகரியமான நிலையை தவிர்க்க, தாய்ப்பால் தருவதற்கு முன், சுத்தமான துணியை கொண்டு துடைக்கலாம்.
பிரசவத்துக்கு பிறகு முதல் மூன்று வாரங்கள் மிக முக்கியம் என்பதால், டாக்டர் பரிந்துரை நமக்கு மிகவும் அவசியமாகிறது. ஒரு சிறிய சந்தேகமென்றாலும், டாக்டரை ஆலோசித்து அதன்படி செயல்படுவது மிகவும் நல்லது. உங்களுக்கு பிள்ளை பிறந்து எவ்வளவு நாட்கள் ஆகிறது நண்பிகளே? உங்கள் பிள்ளைக்கு என்ன பெயர் வைக்க முடிவு செய்துள்ளீர்கள்? உங்களுக்கு ஆண் குழந்தையா? இல்லை, பெண் குழந்தையா? நீங்களும் மற்ற அம்மாக்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாமே.
A