• Home  /  
  • Learn  /  
  • கர்ப்பமாக இருக்கும் போது வரும் வாந்தி, குமட்டல் மயக்கம் போன்றவை குறித்த தகவல்கள்
கர்ப்பமாக இருக்கும் போது வரும் வாந்தி, குமட்டல் மயக்கம் போன்றவை குறித்த தகவல்கள்

கர்ப்பமாக இருக்கும் போது வரும் வாந்தி, குமட்டல் மயக்கம் போன்றவை குறித்த தகவல்கள்

13 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

‘முதல் முறை கர்ப்பமாக இருந்தபோது இந்த வாந்தி, குமட்டல், மயக்கம் எல்லாம் எனக்கு ஆரம்பத்தில் அளவற்ற ஆனந்தத்தை தந்தது. ஆனால், அதன்பிறகு அவை ஏன் தான் வருகிறதோ என்ற எரிச்சல் உணர்வையும் தந்தது.’ என்கின்றனர் பல அம்மாக்கள். இன்னும் சில அம்மாக்கள், ‘என்னால் கர்ப்ப காலத்தை கடந்து வெற்றிக்கரமாக பிள்ளையை பெற்றுக்கொள்ள முடியுமா என்ற பயமே வந்தது. ஆனால் இப்போது பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.’ என்று தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வரக்கூடிய இந்த பிரச்சனை மிக பொதுவான ஒன்று தான். இது காலை அல்லது இரவு என எந்த நேரத்திலும் இருக்கக்கூடும். பெரும்பாலான பெண்களுக்கு முதல் மூன்று மாதங்கள் இந்த பிரச்சனை இருக்கக்கூடும். ஆனால் சில பெண்களுக்கோ கர்ப்ப காலம் முழுவதுமே இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. இதை பற்றிய கூடுதல் தகவலை இப்பதிவின் மூலம் நாம் காணலாம் வாருங்கள்.

 

இதற்கான அறிகுறிகள் என்னென்ன?

ஒரு சில வாசனைகள் பிடிக்காது இருத்தல், காரமான உணவை கண்டால் ஏற்படும் ஒவ்வாமை, உடல் வெப்பமாக காணப்படுதல், அதிகமாக எச்சில் சுரத்தல் போன்றவை இதற்கான அறிகுறிகள் ஆகும். ஆனால், இவை ஒவ்வொரு பெண்ணுக்கு மாறுபட்டும் காணப்படுகிறது.

எதனால் இவை உண்டாகிறது?

வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்பட முக்கியமான காரணம் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் மட்டும் தான்.

 

எப்போது இவை அதிகம் ஏற்படுகிறது?

ஒன்றுக்கும் மேல் பிள்ளைகள் வயிற்றில் இருந்தால்
பிள்ளை பிறப்பதை கட்டுப்படுத்தும் மாத்திரைகளை நாம் முயன்றிருந்தால்
உங்களது முந்தைய கர்ப்பத்தின்போது வாந்தி, குமட்டல், மயக்கம் அதிகமாக இருந்திருந்தால்

 

சிக்கல்கள்:

இப்போது இருக்கும் வாந்தி மற்றும் குமட்டலால் நமக்கோ, கருவில் உள்ள பிள்ளைக்கோ எந்த வித பாதிப்பும் இருப்பதில்லை.

ஒருவேளை இவை அதிகமாக உங்களுக்கு இருக்கும்போது, நீர்ச்சத்து தொடர்ந்து நம் உடலில் இருந்து வெளியாகி கொண்டே இருக்கும். இதனால், அதனை தாங்கும் சக்தி நம் உடலில் இல்லாமல் போகலாம்.

 

எவ்வாறு இதனை குறைக்கலாம்?

1. இஞ்சி சாப்பிடுதல்:

வாந்தி மற்றும் குமட்டலை போக்க இஞ்சி உதவுகிறது. அதேபோல, அதிகமாக இஞ்சி எடுத்துக்கொள்வது தேவையற்ற நெஞ்சரிச்சலை உண்டாக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

 

2. பெப்பர்மிண்ட்:

குமட்டலை போக்குவதில் பெப்பர்மிண்ட் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

3. வைட்டமின் B6:

வைட்டமின் B6 எடுத்துக்கொள்வது வாந்தி, குமட்டலுக்கு நல்லது. கொண்டைக்கடலை சுண்டல், கிழங்கான் மீன், உருளைக்கிழங்கு, வாழைப்பழம் போன்றவற்றில் வைட்டமின் B6 உள்ளது.

 

4. தண்ணீர்:

கர்ப்பமாக இருக்கும்போது நீர்ச்சத்து குறையாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்தை விட ஒரு அற்புதமான மருந்து இந்த சமயத்தில் இருக்காது.

 

5. ஃபிரெஷ்ஷான காற்றை சுவாசித்தல்:

நம்முடைய வீட்டில் உள்ள ஜன்னல்களை திறந்து வைக்கவும். அதேபோல கொஞ்ச தூரம் நடந்தும் செல்லலாம்.

 

6. அக்யூபிரெஷர்:

ஒரு சில பெண்களுக்கு இதுவும் நல்ல பலன் அளித்துள்ளதாக கூறுகின்றனர்.

 

7. பெருஞ்சீரகம்:

குமட்டலுக்கு பெருஞ்சீரகமும் ஒரு அற்புதமான மருந்தாகும். பெருஞ்சீரக டீ போட்டு நாம் குடிக்கலாம். சுவைக்கு தேனும் சேர்த்துக்கொள்ளலாம்.

 

8. ப்ரோக்கோலி:

இதனில் உள்ள ஃபோலிக் அமிலம் குமட்டலை குறைக்க உதவுகிறது. இதனை கொண்டு கூடுதலாக இஞ்சி, பெப்பெர்மிண்ட் போன்றவை சேர்த்து சூப் வைத்தும் சாப்பிடலாம்.

 

9. தயிர்:

தயிர் நம்முடைய செரிமான மண்டலத்தை ஒழுங்குப்படுத்த உதவுகிறது. தயிரில் உள்ள வைட்டமின் B12, கர்ப்பமாக இருக்கும்போது உண்டாகும் வாந்தி, குமட்டல் போன்றவற்றை குறைக்க உதவுகிறது. இந்த தயிருடன் கூடுதலாக நாம் ஃபிரெஷ்ஷான பழங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

 

10. கிவி பழம்:

கிவி பழம் குமட்டலுக்கு நல்லதாகும். இந்த கிவி பழத்தை, வாழைப்பழம், ப்ளூ பெர்ரியுடன் சேர்த்தும் சாப்பிடலாம். சுவைக்கு தேனும் சேர்த்துக்கொள்ளலாம்.

 

11. ஆப்பிள்:

ஆப்பிளில் நார்ச்சத்து இருப்பதால் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் குறைய வாய்ப்புள்ளது.

 

12. பருப்பு வகைகள்:

பருப்பு வகைகளில் புரதச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுவதோடு, ஆற்றலை தக்க வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

 

13. இலவங்கப்பட்டை:

இதுவும் குமட்டலுக்கு அற்புதமான மருந்தாகும். இதனை கொண்டு டீ போட்டு நாம் குடிக்கலாம்.

 

எப்போது டாக்டரை பார்ப்பது?

  • குமட்டல் அல்லது வாந்தி அதிகமாக இருந்தால்
  • கொஞ்சமாக யூரின் செல்வது அல்லது அது அடர் நிறமாக இருத்தல்
  • நிற்கும்போது ஏற்படும் மயக்கம்
  • இதயத்துடிப்பு சீரற்று இருத்தல்
  • 12 மணி நேரத்துக்கு மேலாக எதுவுமே சாப்பிட முடியாவிட்டால்
  • டீரென எடை குறைய தொடங்கினால்
  • அடிவயிறு அல்லது இடுப்பில் வலி இருந்தால்

வாந்தி, குமட்டல், மயக்கம் போன்றவை இப்போது எல்லா கர்ப்பிணிக்கும் இருக்கும் பிரச்சனை தான். இதனால் எந்தவொரு நீண்ட கால உபாதைகளும் உண்டாவதில்லை. இது தற்காலிகமாக இருந்தாலும், எரிச்சலடைய செய்யக்கூடியதே. ஆனாலும், மேல்காணும் வீட்டு வைத்தியங்கள் இதிலிருந்து நிவாரணம் பெற உங்களுக்கு உதவலாம்.

இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறது என நினைத்தால் உங்கள் நண்பிகளுக்கும் இதனை பகிரலாமே.

#pregnancymustknow #morningsickness

A

gallery
send-btn

Related Topics for you