13 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
தாய்ப்பால் தரும் அம்மாக்களின் மார்பகம் காயமடைவதற்கு பல காரணங்கள் உள்ளன. உடை, ராஷஷ், தொற்றுகள் போன்றவை இதனால், உங்களின் மென்மையான மார்பகத்தை எரிச்சலடைய செய்து காயத்தையும் உண்டாக்கக்கூடும். மார்பகத்தில் புண் ஏற்படுவது மாதவிடாயின்போதும், கர்ப்பமாக இருக்கும்போதும், தாய்ப்பால் தரும்போதும் பொதுவான பிரச்சனையே. இதுகுறித்த கூடுதல் தகவலை நாம் இப்போது காண்போம் வாருங்கள்.
ஆடை ஏற்படுத்தும் ஆபத்து:
தளர்வான சட்டை அல்லது பிரா உரசும்போது முலைக்காம்பில் காயங்கள் உண்டாகலாம். குறிப்பாக நாம் ரொம்ப தூரம் நடக்கும்போது, மீண்டும் மீண்டும் உரசுவதனால் இது போன்ற காயம் ஏற்படலாம். இரத்தக்கசிவு கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
அதனால், டைட்டாக சட்டையையும், பிராவையும் அணிவது நல்லது. இந்த இடங்களில் நாம் தண்ணீர் புகாத பேண்டேஜ்களையும் பயன்படுத்தலாம். நிப்பிள் கார்டுகளையும் நாம் பயன்படுத்தலாம்.
சருமத்தின் நிலைகள்:
இது போன்று புண்கள் ஏற்படும்போது ராஷஷ், வீக்கம் போன்றவை முலைக்காம்பை சுற்றி வரக்கூடும். இதனை முலையழற்சி என்று அழைப்பர்.
தோல்புண்ணானது, சருமம் வறண்டு போய் இருக்கும்போதும், மரபணு பிரச்சனைகளாலும், எதிர்ப்பாற்றல் குறைப்பாட்டாலும் ஏற்படுகிறது.
வாசனை திரவியம், அலர்ஜி உண்டாக்கும் சோப்பு பயன்படுத்துதல் அல்லது நகை உரசுவதால் கூட முலையழற்சி உண்டாகலாம்.
இந்த மார்பக புண்ணுக்காக, நம் மருத்துவர்கள்
எப்போது நான் டாக்டரை பார்ப்பது?
மார்பக புண்களால் உங்களுக்கு,
தாய்ப்பால் தருவது?
நம்முடைய பிள்ளைகள் முலைக்காம்பில் தாய்ப்பால் குடிக்கும்போது, நமக்கு வலி காணப்படலாம். சில நொடிகளில் வலி குறைந்தும் காணப்படலாம்.
ஒருவேளை, நம்முடைய பிள்ளைகள் சரியான நிலையில் இருந்து தாய்ப்பாலை குடிக்கா விட்டால், இது போன்ற வலி கூடுதலாகவே இருக்கும். நம் முலைக்காம்பில் கீறல் விழுந்து இரத்தம் கூட வரக்கூடும். ஆனாலும், இது விரைவில் சரியாக வாய்ப்பும் உள்ளது.
இதை குணப்படுத்த என்ன தான் வழிகள்?
1. தாய்ப்பால் தரும் முன்பு, முலைக்காம்பில் சில சொட்டு தாய்ப்பாலை விட்டு தேய்க்கவும். தாய்ப்பால் இது போன்ற புண்ணை குணப்படுத்த அற்புதமான மருந்தாகும்.
2. டாக்டர் பரிந்துரைக்குட்பட்ட ஆயிண்ட்மெண்டுகளை நாம் தடவலாம்.
3. ஒவ்வொரு முறை தாய்ப்பாலூட்டிய பிறகும், முலைக்காம்பை காய விடலாம். உங்களின் பிரெஸ்ட் பேடுகளை மாற்றி, காய விடலாம்.
4. சவுகரியமான காட்டன் நர்சிங் பிராவை அணியலாம். அது டைட்டாக இருப்பதை உறுதி செய்யவும். லூசாக இருந்தால், உரசி புண்ணை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
5. வெவ்வேறு நிலையில் தாய்ப்பாலூட்டி, எது சிறந்த நிலை என்பதை கண்டறியலாம்.
6. அரை டீஸ்பூன் உப்பு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். தாய்ப்பால் தந்த பிறகு 1 நிமிடங்களுக்கு இந்த கரைசலை கொண்டு முலைக்காம்பை நனைக்கவும். அதன்பிறகு தடவி காய விடவும். இதனை செய்யும் முன்பு மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது. இந்த கரைசல் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். இல்லையேல் பாக்டீரியா தங்க வாய்ப்புண்டு. அதேபோல, மீண்டும் தாய்ப்பால் தரும் முன்பு முலைக்காம்பை கழுவிவிட வேண்டும். இல்லையேல், தாய்ப்பால் குடிக்கும்போது பிள்ளைகள் உப்பை சுவைப்பர்.
தொற்று ஏற்படும் காரணிகள் என்னென்ன?
முலைக்காம்பில் அதிகம் வலி காண்பது தொற்றுக்கான அறிகுறியாகும்.
மார்பக காம்பில் பால் கட்டி போவது முலையழற்சியை ஏற்படுத்தும். இவ்வாறு பால் கட்டி போகும்போது, பாக்டீரியா வளர வாய்ப்புள்ளது. இது தாய்ப்பால் தரும் அம்மாக்களுக்கு வரக்கூடிய பிரச்சனை தான் என்றாலும் கவனக்குறைவாக இருக்கவும் கூடாது.
மற்ற அறிகுகள் என்னென்ன?
எதனை தவிர்ப்பது நல்லது?
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நாமாக எந்தவித ஆயிண்ட்மென்ட் அல்லது கிரீம் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது.
தாய்ப்பால் தரும் அம்மாக்களுக்கு, இதுபோன்று முலைக்காம்பில் வெடிப்பு ஏற்பட்டு புண் உண்டாவது ஒரு பொதுவான பிரச்சனையே. இதற்கான காரணம் என்னெவென தெரிந்துக்கொண்டு அதன்பிறகு, அதற்கான தீர்வை தேடுவதே நல்லது.
உங்களுக்கு இது குறித்து எந்தவொரு கேள்வி இருந்தாலும், உங்களின் குழந்தை நல மருத்துவர் அல்லது தாய்ப்பால் நிபுணரை தொடர்பு கொள்ளவும்.
நண்பிகளே, இந்த பதிவு பயனுள்ளதென நீங்கள் நினைத்தால் மற்ற தோழிகளுக்கும் பகிர்ந்து அவர்களுக்கும் உதவலாமே.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.