கர்ப்பமாக இருக்கும் போது வரும் மறதி

cover-image
கர்ப்பமாக இருக்கும் போது வரும் மறதி

கர்ப்பமாக இருக்கும்போது மறதி வருவது பொதுவான விஷயம். இதற்கு காரணம் நம்முடைய ஹார்மோன்கள் மட்டுமல்ல. சரியாக தூங்கவில்லை என்றாலும், மன அழுத்தத்துடன் இருந்தாலும் இதனால் நமக்கு மறதி உண்டாகலாம். இதை நினைத்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், கவனக்குறைவின்றி இருக்க முயல்வது மிகவும் நல்லது.

 

இதன் அறிகுறிகள் என்னென்ன?

கவனிக்க சிரமமாக இருத்தல்
தன்னிலை இழந்து காணப்படுதல்
படிக்க சிரமம் கொள்ளுதல், படித்தாலும் மறந்தது போன்ற உணர்வு ஏற்படுதல்
வார்த்தைகளையும், பெயரையும் நினைவில் வைத்துக்கொள்ள சிரமம் கொள்ளுதல்

 

எப்போது இவை இருக்கும்?

முதல் மூன்று மாதங்களில் இவை குறைவாக இருந்தாலும், மூன்றாவது மூன்று மாதத்தில் சற்று அதிகமாக காணவும் வாய்ப்புள்ளது.

 

இதற்கு என்ன காரணங்கள்?

1. ஹார்மோன்கள்

ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள், நம்முடைய உடல்நிலையில் பெரிதும் மாற்றத்தை தூண்டுகிறது. இதனால் நம்முடைய மூளை மற்றும் நினைவாற்றலையும் பாதிக்க செய்கிறது.

 

2. தூங்குவதில் சிரமம்

நீங்கள் சரியாக தூங்காமல் இருந்தால், அப்போது கவனக்குறைவு அதிகமாக இருக்கலாம். இது பார்ப்பதற்கு மறதி போன்றும் நமக்கு தெரியும். நீங்கள் சரியாக தூங்காமல் இருக்கும்போது மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடு சற்று மந்தமாகவே இருக்கும்.

 

3. பதட்டம் மற்றும் மனஅழுத்தம்

புதிய பயணத்தை எப்படி தொடங்க போகிறோம் என்ற பயம் நமக்கு இருக்கும். இதனால் இப்போது இருக்கும் விஷயங்களில் சற்று மறதி கூடுதலாக காணப்படும்.

 

4. மூளையில் ஏற்படும் மாற்றம்

ஒரு சில ஆய்வுகள், கர்ப்பிணிகளின் மூளையில் சில மாற்றம் நிகழ்வதாகவும் கூறுகிறது. இவை பிள்ளைகள் பிறந்த பின்பும் இருக்கக்கூடும் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

 

இதனை எப்படி சமாளிப்பது?

1. டெய்லி காலெண்டர் அவசியம்

உங்கள் போனிலுள்ள காலெண்டர் ஆப் பயன்படுத்தி நினைவில் வைத்துக்கொள்ள முயலலாம்.

 

2. ஒரே இடத்தில் வைப்பது

அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களை ஒரே இடத்தில் வைப்பதால் மறக்காமல் இருக்கக்கூடும். உதாரணத்திற்கு, நம்முடைய சாவிகள், பர்ஸுகள் போன்றவற்றை சொல்லலாம்.

 

3. அலாரம் & அறிவிப்புகள்

முக்கியமான பணிகளுக்கு அலாரம் நாம் செட் செய்து வைக்கலாம். இதனால், அப்பணிகளை மறக்காமல் நம்மால் செய்ய இயலும்.

 

4. ஸ்னாப் எடுக்கவும்

மறந்தும் போகும் பொருட்கள் அல்லது இடங்களை போட்டோ எடுத்து வைத்துக்கொள்ளலாம். விசிட்டிங் கார்டுகளையும் நாம் பத்திரமாக பர்ஸில் வைத்துக்கொள்ளலாம்.

 

5. நோட்புக்

சிம்பிளாக இதற்கான நோட்புக் போட்டும் நாம் எழுதி வைக்கலாம். அந்த நோட்டின் முன் பக்கத்தில், ‘அழகிய தருணத்தின் தொடக்கம்’ போன்ற பாசிட்டிவான வார்த்தைகளை எழுதி நம்முடைய கர்ப்ப காலத்தை இனிமையாக்கலாம்.

 

6. நல்ல தூக்கம்

கர்ப்பமாக இருக்கும்போது நன்றாக தூங்குவது சற்று கடினமே. ஆனாலும் நேரத்திற்கு தூங்கி எழுவதன் மூலமாக நினைவாற்றலை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள முடியும்.

 

7. உடற்பயிற்சி

வல்லுநர்கள் மற்றும் டாக்டர்கள் உதவியுடன் இந்த நேரத்தில் எந்த பயிற்சி எல்லாம் நம்முடைய நினைவாற்றலுக்கு நல்லது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். நீங்களாகவே எக்காரணம் கொண்டு எதையும் செய்ய முயலக்கூடாது.

 

8. உதவி கேட்கலாம்

உங்களின் கணவர், குடும்பத்தில் உள்ளவர்கள், நண்பர்களிடம் உதவியும் கேட்கலாம். அவர்களின் ஆதரவு கிடைப்பது நிச்சயம் உங்களுடைய நினைவாற்றலுக்கு பக்க பலமாக அமையும்.

 

9. பிரித்து பார்த்தல்

எது உங்களுக்கு தேவையோ, அதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, மற்றவற்றை நினைவில் வைத்துக்கொள்ளாமல் இருக்கலாம். இதனால், தேவையானவை மட்டும் நம் மனதில் மறக்காமல் நிற்கும்.

எனவே தோழிகளே, மறதி என்பது கர்ப்ப காலத்தில் இருக்கக்கூடிய பொதுவான ஒரு பிரச்சனையே. எவ்வளவு விஷயங்களை நாம் மறந்தாலும், நம்முடைய பிள்ளையை கைகளில் ஏந்த போகும் அந்த ஒரு நாள் நிச்சயம் நமக்கு மகிழ்வை தரும். இதுவே ஒரு மிகப்பெரிய பாசிட்டிவான எண்ணம் என்பதால், மறதியை பற்றிய கவலையே நமக்கு வேண்டாமே. இந்த பதிவு பயனுள்ளதென நீங்கள் நினைத்தால், உங்களின் நெருங்கிய தோழிகளுக்கு பகிர்ந்து அவர்களுக்கும் உதவலாமே.

#momhealth
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!