கர்ப்பிணிகள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட செய்ய வேண்டியவை

cover-image
கர்ப்பிணிகள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட செய்ய வேண்டியவை

நம்முடைய கணவர், அம்மா, அப்பா, சொந்தங்கள் என எல்லோரும் சேர்ந்து கொண்டாடும் திருவிழா தான் தீபாவளி என்பது. ஆனால், இந்த சந்தோஷத்தில் ஒரு சில விஷயங்களை கர்ப்பிணிகள் மறந்துவிட கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். இது போன்ற பண்டிகை காலங்களில் எவற்றை குறித்தெல்லாம் நாம் கவனத்தோடு இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது இந்த சிறப்பு பதிவு.

 

எவற்றையெல்லாம் கவனமாக கையாள வேண்டும்?

1. புகை மற்றும் மாசு

தீபாவளி என்றாலே பார்க்கும் இடமெல்லாம் பட்டாசு வெடிக்கும், கேட்கும் திசையெல்லாம் இரைச்சல் இருக்கும். இந்த பட்டாசில் இருந்து வரும் புகை மற்றும் மாசு கர்ப்பிணிகளுக்கு பாதிப்பை உண்டாக்குமா என்ற கேள்வி பலர் மனதில் எழுகிறது. இது நமக்கும், நம்முடைய வயிற்றில் வளரும் பிள்ளைக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். கர்ப்பமாக இருக்கும்போது ஆரம்ப காலத்தில் இந்த மாசு காரணமாக மூச்சு பிரச்சனை வர வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். அதனால், முடிந்தளவு இதனை நாம் தவிர்க்க வேண்டும்.

 

2. வீட்டை சுத்தம் செய்வது

பண்டிகை காலங்களில் நம்முடைய வீட்டை துடைத்து சுத்தம் செய்வது வழக்கம் தான். ஆனால், இது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு சரியான சூழலாக அமையாது. வீட்டை சுத்தம் செய்வதற்கான ஆற்றலுடன் நாம் இப்போது இருக்க வாய்ப்பில்லை. அதனால், தேவையற்ற சுமைகளை நாம் ஏற்றிக்கொள்ளாமல் இருத்தல் நல்லது. கர்ப்பமாக இருக்கும்போது வாந்தி, குமட்டல் போன்றவை இருக்கும் என்பதால் சுத்தம் செய்யும்போது வெளிப்படும் மாசு நமக்கும், நம்முடைய பிள்ளைக்கும் நல்லதல்ல. அதோடு, பிள்ளைகள் வளரும்போது ஈர்ப்பு விசை அழுத்தம் அதிகமாக இருக்கும். அதனால், நம்மை நாமே காயப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புள்ளது.

இப்போது நம்முடைய உடல் பெறும் ஆக்சிஜன் லெவல் கம்மியாகவே உள்ளது. அதனால் காற்றோட்டமான இடங்களில் மட்டுமே நாம் இருக்க வேண்டும். தீபாவளி சமயங்களில் உண்டாகும் மாசு, நம்முடைய ஆக்சிஜன் அளவை பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

3. ஊட்டச்சத்து உணவு

தீபாவளி சமயம் என்றாலே இனிப்புக்கள் வீட்டில் தயாராகி கொண்டிருக்கும். கர்ப்பிணிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்வது, நம்முடைய பிரசவத்திற்கு நல்லது. நீங்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யவும்.

 

4. உடுத்தும் உடைகளில் கவனம்

தீபாவளிக்கு உடுத்தும் உடைகள் சிம்பிளாக இருக்கும் வண்ணம் பார்த்துக்கொள்ளவும். கடினமாக தூக்கிக்கொண்டு நடப்பது போன்ற உடைகள் நமக்கு இப்போது செட் ஆகாது. இது நம்மை தடுக்கி விட செய்ய வாய்ப்புள்ளது. அதோடு, சிம்பிளான உடைகள் தான் சிரமமின்றி நாம் மூச்சு விடவும் உதவுகிறது.

முடிந்தளவு, அங்கும் இங்கும் இப்போது நடக்காமல் கர்ப்பிணிகள் ஓரிடத்தில் இருந்து நம்முடைய பிள்ளைக்காக இந்த தியாகத்தை செய்யலாம். எப்போதும் தயார்நிலையில் இருப்பதோடு, முதலுதவி பெட்டி போன்றவையும் அருகில் இருப்பது நல்லது.

 

மாசு காரணமாக ஏற்படும் பிரச்சனைகள் எவை?

1. எடை குறைவு

பிள்ளைகள் பிறக்கும்போது குறைவான எடையுடன் பிறத்தல் கூடும். இதற்கு ஊட்டச்சத்து
குறைபாடு, இரத்தசோகை, உயர் இரத்த அழுத்தம் போன்றவை காரணமாக அமைந்தாலும், சூழலில் வெளிப்படும் மாசும் இதற்கு ஒரு காரணமாகவே உள்ளது. அதனால், கர்ப்பிணிகள் வெளியில் வராமல் பாதுகாப்பாக இருப்பது நல்லது.

 

2. முன் கூட்டி பிறத்தல்

காற்றின் மாசு காரணமாக நம்மையும், நம் வயிற்றில் வளரும் பிள்ளையையும் பாதிக்க வாய்ப்புள்ளது. இது முன் கூட்டிய பிரசவத்துக்கு வழி வகுக்க செய்யலாம் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகிறது.

தோழிகளே, நாம் பாதுகாப்பாக இருக்கும் வரை எது குறித்தும் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமேயில்லை. இந்த தடவை நாம் கூடுதல் பாதுகாப்போடு இருந்து தீபாவளியை கொண்டாடும்போது, அடுத்த வருடத்திற்கு அழகிய பிள்ளையுடன் இணைந்து இன்னும் பல மடங்கு சிறப்பாக கொண்டாடலாம் அல்லவா. அதே சந்தோஷத்துடன் இருப்போம். உலகமே உங்கள் கையில் தவழ காத்திருக்கிறது விரைவில். அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள். நன்றி, வணக்கம்.

#pregnancymustknow
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!