கர்ப்பிணிகள் கழிப்பறை குறித்து அறிய வேண்டிய தகவல்கள்

cover-image
கர்ப்பிணிகள் கழிப்பறை குறித்து அறிய வேண்டிய தகவல்கள்

கர்ப்பமாக இருக்கும்போது நம்முடைய உடலில் பல வித மாறுதல்கள் உண்டாகிறது. இதனை நினைத்து நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. இதனால் வாந்தி, குமட்டல், மயக்கம், மனநிலை மாற்றம் என பல உபாதைகள் உண்டாகும்.

இவற்றை தவிர கர்ப்பமாக இருக்கும்போது நாம் கழிக்கும் மலம் மற்றும் சிறுநீரிலும் மாற்றம் காணும். ஆனால், இதனை நாம் யாரும் கண்டுகொள்வதில்லை. இருப்பினும், இதை குறித்த பல சுவாரஸ்யமான பயனுள்ள தகவலை நாம் இப்போது காண்போம்.

 

கர்ப்பமாக இருக்கும்போது எந்த மாதிரியான வயிற்று உபாதைகள் உண்டாகும்?

1. மலச்சிக்கல்

இப்போது இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் மலச்சிக்கலும் ஒன்று. இது கர்ப்பமாக இருக்கும்போது எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம். அதனால் தான் வாயுத்தொல்லையும் இந்த சமயத்தில் அதிகமாகவே இருக்கிறது. ஆனாலும் இதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளது.

ஆம், நாம் எடுத்துக்கொள்ளும் நார்ச்சத்து அளவு குறைவாக இருந்தாலும், நாம் ஒரே இடத்தில் எந்நேரமும் அமர்ந்திருந்தாலும், வயிற்று உபாதைகளை உண்டாக்கும் உணவை சாப்பிட்டாலும் மலச்சிக்கல் உண்டாகலாம். ப்ரொகெஸ்டரோன் எனப்படும் ஹார்மோன் காரணமாகவும் மலச்சிக்கல் நமக்கு ஏற்படுகிறது.

இதற்கான அறிகுறிகள், மலம் கழிக்கும்போது சிரமம் கொள்ளுதல், ஆசனவாய் அருகில் வீக்கம் தெரிதல் போன்றவை இருக்கலாம். வாயுத்தொல்லை அதிகமாக இருக்கும் அல்லது வயிறு வலித்தபடி இருக்கும்.

முடிந்தளவு நாம் தண்ணீர் அதிகம் குடிப்பதை உறுதி செய்யவும்.

 

2. மலத்தில் இரத்தம்

இப்போது மலம் கழிக்கும் போது இரத்தத்தை காணக்கூடும். உடனே, பயப்பட வேண்டாம். இது கர்ப்பமாக இருக்கும்போது இருக்கக்கூடிய பொதுவான பிரச்சனையே. குறிப்பாக, மலச்சிக்கல் இருக்கும்போது சவுகரியமாக மலம் கழிக்க முடியாது. அப்போது இரத்தமும் சேர்ந்து வரும். மலவாய் வெடிப்பு என்பது தானாகவே சரியாகிவிடும். ஆனால், இதனை தடுக்க ஒரே வழி மலச்சிக்கல் ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்வது தான்.

 

3. வயிற்றுப்போக்கு

ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக வயிற்றுப்போக்கு தண்ணியாக போகலாம். இதற்கு காரணம் ரிலெக்ஷின் எனப்படும் ஹார்மோன் தான். இது கர்ப்பமாக இருக்கும்போது மட்டுமே வெளிப்படும் ஒரு ஹார்மோன் ஆகும்.

இந்த ஹார்மோன் தான், நம்முடைய மூட்டுகள் மற்றும் தசைநார்களை தளர்வடைய செய்து, பிரசவத்துக்கு உதவுகிறது. லேசான வயிற்றுப்போக்கு எந்தவிதத்திலும் பிரச்சனை இல்லை. நீங்கள் அதிகமான நீர் ஆகாரங்களை எடுத்துக்கொள்ளும்போது, இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

 

எப்போது மருத்துவரை பார்ப்பது?

  • மலத்தில் சளி அல்லது இரத்தம் தொடர்ந்து இருத்தல்
  • உடல் எடை குறைந்துக்கொண்டே வருதல்
  • வயிற்றில் வலி இருத்தல்
  • காய்ச்சல் இருத்தல்

 

மலம் கழிக்கும்போது காணப்பட கூடிய மற்ற நிறங்கள் எவை?

1. பொதுவாக நாம் மலம் கழிக்கும்போது, அதன் நிறம் லேசான அல்லது அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும். ஆனால் கர்ப்பமாக இருக்கும்போது உங்கள் மலம் பச்சை நிறத்திலும் இருக்கலாம். இதற்காக பயப்பட வேண்டாம், நாம் கீரை சேர்த்துக்கொள்ளும்போது இது போல நம்முடைய மலம் பச்சை நிறத்தில் இருக்கும்.

2. நீங்கள் பிரெனெட்டல் வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போதும் பிரவுன் நிறத்திலிருந்து பச்சை நிறத்துக்கு மலமானது மாறி காணப்படும். நாம் வைட்டமின் மாத்திரைகள் மற்றும் மருந்துகளை நிறுத்தும்போது மீண்டும் இயல்பு நிறத்துக்கு நம்முடைய மலம் திரும்பிவிடும் என்பதால் இது குறித்த பயம் நமக்கு வேண்டியதில்லை.

3. சில சமயம் தொற்று, பித்தப்பைக்கல், உணவு நஞ்சாதல் போன்ற காரணங்களினாலும் மலம் நிறம் மாற்றத்துடன் காணப்படலாம். மலம் கருப்பு நிறத்தில் இருக்கும்போது கண்டிப்பாக மருத்துவரை நாம் பார்க்க வேண்டும்.

4. கர்ப்பமாக இருக்கும்போது மலம் கழிக்கும் நிறம் குறித்தவை பெரும்பாலும் பேசப்படுவதில்லை என்றாலும், இது குறித்த தகவல்களை நாம் எப்போதும் அறிந்து வைத்திருப்பது தேவையற்ற பயத்தை போக்கும்.

நமக்கு ஒருவேளை மலம் கழிப்பது குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயக்கமின்றி நம்முடைய மருத்துவரை கேட்டு தெளிவு பெறலாம். தேவையில்லாத குழப்பம், நம்முடைய கருவில் வளரும் பிள்ளைக்கும் நல்லதல்ல என்பதை உணர்ந்து எப்போதும் செயல்படுவது நல்லது. மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் சந்திப்போம். நன்றி, வணக்கம்.

#pregnancymustknow
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!