குடும்ப கட்டுப்பாடு பற்றி அறிய வேண்டிய தகவல்கள்

cover-image
குடும்ப கட்டுப்பாடு பற்றி அறிய வேண்டிய தகவல்கள்

கருத்தரிக்காமல் பாதுகாப்பாக உடலுறவு கொள்ள வேண்டுமா? எவற்றை எல்லாம் நாம் கவனத்தில் கொள்வது?

 

நம்முடைய முன்னோர்கள் எல்லாம் பத்து பிள்ளைகள் கூட பெற்றுக்கொண்டனர். ஆனால், இன்றோ நிலை தலைகீழாக மாறி ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் போதுமென தம்பதியினர் முடிவு செய்துவிடுகின்றனர். அதன்பிறகு கர்ப்பப்பையை அகற்றுதல், தடுத்து வைத்தல் போன்றவற்றின் மூலமாக பிள்ளை பெற்றுக்கொள்வதை கட்டுப்படுத்துகின்றனர். இது குறித்து விரிவாக அலசுகிறது இந்த பதிவு.

 

ஹார்மோன் அற்ற கருத்தடை என்பது என்ன?

இதன் மூலமாக ஹார்மோன்கள் பாதிக்கப்படுவது இல்லை. அதேபோல, இனப்பெருக்க சுழற்சிக்கும் எவ்வித பாதிப்பும் உண்டாவதில்லை.

 

ஹார்மோன் அற்ற கருத்தடை வழிமுறைகள் என்னென்ன?

1. ஆண் ஆணுறை

இதன் மூலமாக ஆண்களின் விந்தணுவானது பெண் உறுப்புக்குள் நுழையாமல் பாதுகாக்கப்படுகிறது. ஆனால், ஆணுறை பயன்படுத்தும்போது ஒரு சில விஷயங்களை நாம் கட்டாயம் கவனிக்க வேண்டும். அவை,

 

 • சரியாக பயன்படுத்தும்போது மட்டுமே நல்ல பலனை அளிக்கும்
 • இதனை உடலுறவுக்கொள்ளும்போது பயன்படுத்த வேண்டும். ஒரு ஆணுறையை, ஒரு முறை மட்டுமே நம்மால் பயன்படுத்த முடியும்
 • இவை மெடிக்கல், கிளினிக்குகளில் கிடைக்கிறது

 

2. பெண் ஆணுறை

இவை உராய்வு தன்மையுடன், பாலியூரிதின் உறையுடன் உருவாக்கப்பட்டுள்ளதால் பெண் உறுப்பில் விந்தணு நுழைவதை தடுக்கிறது. பெண் ஆணுறையை பயன்படுத்தும்போதும் ஒரு சில விஷயங்களை நாம் கட்டாயம் கவனிக்க வேண்டும். அவை,

 • 95% சரியாக பயன்படுத்தினால் மட்டுமே நல்ல பலனை அளிக்கும்
 • இதுவும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது
 • இது பயன்படுத்துவதற்கு எளிதானது

 

3. விந்தணு கிரீம்

இதனில் வேதிப்பொருள் இருப்பதால் விந்தணுவை கொல்ல உதவுகிறது. இவை கிரீமாக மட்டும் வராமல், ஜெல், நுரை, மாத்திரை, பஞ்சு ஆகிய வடிவங்களிலும் கிடைக்கிறது.

இதனை நாம் உடலுறவு கொள்வதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அந்தரங்க உறுப்பில் விடவும்.

 

4. கருத்தடை ஸ்பான்ஞ்

இதனை அந்தரங்க உறுப்பில் வைக்க வேண்டும். இந்த ஸ்பான்ஞ், உடலுறவுக்கு பிறகு குறைந்தது ஆறு மணி நேரமாவது இருக்க வேண்டும். இதனை வைக்கவும், நீக்கவும் எளிதாகவே இருக்கும். அதனில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை படித்து கவனமாக நாம் பின்பற்ற வேண்டும்.

 

5. கர்ப்பப்பை அறுவை சிகிச்சை

இது நிரந்தரமாக கர்ப்பமாவதை தடுக்கும் ஒரு வழியாகும். இதற்கு பிறகு பிள்ளை பெற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை என்று கூட சொல்லலாம். இது குறித்த தகவலை நாம் இப்போது காண்போம்.

 • பெண்களுக்கு செய்யப்படும் சிகிச்சை கருத்தடுப்பு சிகிச்சை எனப்படும்
 • ஆண்களுக்கு செய்யப்படும் சிகிச்சையை விதைநாள அறுவை சிகிச்சை என்பர்
 • இதனை மருத்துவ நிபுணர்களால் மட்டுமே செய்ய முடியும்

 

நமக்கு எது சரியானது என்பதை எப்படி தேர்ந்தெடுப்பது?

ஒரு சிலவற்றை கொண்டு நமக்கானது எதுவென்பதை தேர்ந்தெடுக்க முடியும். அவை,

 • ஆரோக்கியம் குறித்தவை
 • தனிப்பட்ட நம்மை பற்றிய விஷயங்கள்
 • விலை
 • அவை ஏற்படுத்தும் விளைவு
 • தொற்று அல்லது நோய் ஏற்படுத்தும் அபாயங்கள்
 • கலாச்சாரம்
 • வழிமுறைகளுக்கு எடுக்கும் நேரம்

ஒருவேளை நம்மால் எது சிறந்து என தேர்ந்தெடுக்க சிரமமாக இருந்தால், அப்போது மருத்துவர்களின் ஆலோசனையை நாம் பெற்று அதன்படி செயல்படுவது நல்லது.

 

இதனால் காணப்படக்கூடிய நிறைகள் என்னென்ன?

1. கருத்தடை மாத்திரை பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படுமென பயப்படுபவர்களுக்கு இந்த வழிமுறைகள் உதவலாம்.

2. இவை நம்முடைய பெண் உறுப்பு சுழற்சியை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை

 

இதனால் காணப்படக்கூடிய குறைகள் என்னென்ன?

1. மாதவிடாய் சமயங்களில் இவற்றை முயற்சி செய்யும்போது மாறுபட்ட பக்கவிளைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

2. அந்தரங்க உறுப்பில் இவற்றை பயன்படுத்துவதனால் அசவுகரியம் உண்டாகக்கூடும்.

3. நாம் இதனை சரியான முறையில் பயன்படுத்தாதபோது, பலன் கிடைக்காமல் போகலாம்.

4. ஒரு சிலருக்கு வேறு மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

 

இந்த விஷயம் குறித்து முடிவு செய்ய வேண்டியது நம்முடைய மருத்துவர் தான். இது குறித்து எப்படி பேசுவது என்ற தயக்கம் வேண்டாம். நம்முடைய பெண்நோய் மருத்துவ நிபுணரிடம் இது குறித்து கேட்டு விளக்கம் பெறுவது தேவையற்ற குழப்பத்தை குறைக்கும். மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

 

Content Image Source: Shutterstock

#momhealth
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!